தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் திமுக அதிமுக நாதக கட்சிகளுக்கு பிறகே மநீம இடம் பெற்றுள்ளது.
மேலும் மக்கள் நீதி மய்யத்தில் நிர்வாகிகள் விலகலால் பல பிரச்சினைகள் உருவெடுத்துள்ளது.
இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம் இந்தியன் 2 சூட்டிங் தாமதமாகி வருகிறது.
லைகா & ஷங்கர் இடையே தான் தலையிட்டும் சமாதானம் ஏற்படவில்லை என்பதால் கமல் வருத்தத்தில் இருக்கிறாராம்.
எனவே பிரச்சினையை அவர்கள் தரப்பில் முதலில் பேசித் தீர்க்கட்டும் என காத்திருக்கிறாராம் கமல்.
இரு பிரச்சினைகளும் விஸ்வரூபம் எடுத்துள்ளதால் எந்த சிக்கலுமில்லாத தன் சொந்த படமான ‘விக்ரம்’ படத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார்.
மே 24க்கு பிறகு கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு சூட்டிங்குக்கு ஏதேனும் தளர்வுகள் கிடைத்தால் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பை ஆரம்பிக்க முடிவெடுத்துள்ளாராம் கமல்ஹாசன்.
Kamal Haasan to kick start Vikram