சூரப்பா இன்னொரு நம்பி நாராயணனா? நேர்மைக்கு இதான் நிலையா.? கமலின் ஆதரவுக்கு சூரப்பா நன்றி

சூரப்பா இன்னொரு நம்பி நாராயணனா? நேர்மைக்கு இதான் நிலையா.? கமலின் ஆதரவுக்கு சூரப்பா நன்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal haasan soorappaஅண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக சூரப்பா நியமிக்கப்பட்டார்.

சூரப்பா மீது ஊழல் புகார், பணி நியமனங்களில் முறைகேடு, கல்லூரிக்கு பொருட்களில் முறைகேடு, தனது மகளை பணிக்கு அமர்த்தியது, என அவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்தன.

இதனால் ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் குழுவை தமிழக அரசு அமைத்தும் இருந்தது.

இதனால் சூராப்பாவை பணியிடை நீக்கம் செய்யவேண்டுமென எதிர்கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் சூராப்பிவிற்கு ஆதரவாக வீடியோ பதிவிட்டார்.

அந்த ட்வீட்டில்… சூரப்பா இன்னொரு நம்பிநாராயணனா? நேர்மையாக இருந்தால் இது தான் நிலையா..? அநீதிகளுக்கு எதிராக நான் கேள்வி கேட்பேன் என்று ஆவேசமாக பேசியிருந்தார்.

தற்போது தனக்கு ஆதரவாக பேசிய கமல்ஹாசனுக்கு சூரப்பா நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும், என் நேர்மை, என் சேவை கருத்தில் கொண்டு கமல்ஹாசன் ஆதரவளித்திருப்பது இந்த நாட்டின் எதிர்காலத்திற்கான ஆதரவு.

நான் பணியாற்றிய அனைத்து இடங்களிலும் எனக்கு நற்பெயரே உள்ளது.” என கூறியுள்ளார் சூரப்பா.

Kamal Haasan supports Soorappa slams TN government

கடமையை முடிக்க பெங்களூர் புறப்பட்ட ரஜினிகாந்த்..; அடுத்த ப்ளான் என்ன..?

கடமையை முடிக்க பெங்களூர் புறப்பட்ட ரஜினிகாந்த்..; அடுத்த ப்ளான் என்ன..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanth annaattheரஜினிகாந்த் நடிக்க சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் திரைப்படம் ‘அண்ணாத்த’.

ரஜினிகாந்துடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

வெற்றி ஒளிப்பதிவு செய்ய இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்து வருகிறார்.

ஹைதராபாத்தில் இப்பட சூட்டிங் நடைபெற்று வந்தது.

அப்போதே ரஜினிகாந்தின் 60% காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதாம்.

இதன் பின்னர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி தன் அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டார்.

அந்த சமயத்தில் ‘அண்ணாத்த’ பட 40% படப்பிடிப்பை முடித்துக் கொடுக்க வேண்டியது எனது கடமை எனவும் தெரிவித்திருந்தார்.

எனவே ‘அண்ணாத்த’ சூட்டிங்க்கு ரஜினி புறப்பட போகிறார் என்று கூறப்பட்ட நிலையில் இப்பட இயக்குநர் சிவாவின் தந்தை ஜெயக்குமார் உயிரிழந்தார்.

இதனாலும் சூட்டிங் தொடங்க தாமதம் ஆனது.

இன்னும் சில தினங்களில் (டிசம்பர் 12-ம் தேதி) தனது பிறந்தநாளைக் கொண்டாடவுள்ளார் ரஜினிகாந்த்.

அப்போது சென்னையில் இருக்கமாட்டாராம்.

ஏனென்றால் இன்றே பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுவிட்டார்.

அதன் பின்னர் டிசம்பர் 15-ம் தேதி ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார் என தகவல்கள் வந்துள்ளன.

Super Star Rajinikanth’s Annaatthe shooting to resume on December 15

ஜனவரியில் கட்சி ஆரம்பித்து ஏப்ரலில் முதல்வராக முடியுமா.?..; ரஜினியை சீண்டும் சீமான்

ஜனவரியில் கட்சி ஆரம்பித்து ஏப்ரலில் முதல்வராக முடியுமா.?..; ரஜினியை சீண்டும் சீமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

seeman rajiniநடிகர் ரஜினிகாந்த் தன் அரசியல் பிரவேசத்தை நேற்று உறுதிப்படுத்தினார்.

அடுத்தாண்டு 2021 ஜனவரி மாதம் கட்சி ஆரம்பிக்க உள்ளதாகவும் இதே ஆண்டில் டிசம்பர் 31-ம் தேதி கட்சி அறிவிப்பு வெளியாகும் எனவும் ட்விட்டரில் அறிவித்தார் ரஜினிகாந்த்.

“மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம். இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல” என கூறியிருந்தார்.

அப்போது… “தமிழக மக்கள் நலனுக்காக என் உயிரே போனாலும் பரவாயில்லை.

நான் வென்றால் அது மக்களின் வெற்றி, நான் தோற்றால் அது மக்களின் தோல்வி“ என்றார்.

இதனையடுத்து தமிழக அரசியல் களம் பரபரப்பானது.

இந்த நிலையில் ரஜினி அரசியல் கட்சி குறித்து இயக்குனரும் நடிகருமான சீமான் கூறியதாவது…

ரஜினி கட்சியை நிர்வகிக்க மக்கள் மன்றத்தில் ஒருவர் கூடவா இல்லை ?..

அழுத்தத்தின் காரணமாகதான் நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கியுள்ளார்.

ஜனவரியில் கட்சி ஆரம்பித்து ஏப்ரலில் முதல்வர் ஆகிட முடியுமா ?

60 நாளில் ஆங்கிலம் கற்பது எப்படி ? என்பது போல் உள்ளது ரஜினியின் அறிவிப்பு..

எந்த மக்கள் பிரச்சனைக்கு ரஜினி குரல் கொடுத்துள்ளார் ? அவரது தேவை எங்கு உள்ளது ?

இவ்வாறு ‘நாம் தமிழர்’ ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

Seeman slams Rajinikanth on his political entry

பாபா முத்திரை.. கழகம் இல்லாமல் படை.. கட்சி ஆபிஸ்..; தனிக்கட்சி அறிவிப்பில் சுறுசுறுப்பான சூப்பர் ஸ்டார்

பாபா முத்திரை.. கழகம் இல்லாமல் படை.. கட்சி ஆபிஸ்..; தனிக்கட்சி அறிவிப்பில் சுறுசுறுப்பான சூப்பர் ஸ்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinis new political party Symbol flag Party office updates தமிழகமே எதிர்ப்பார்த்த தனது கட்சி அறிவிப்பை டிசம்பர் 3ஆம் தேதி தெரிவித்தார் ரஜினிகாந்த்.

2021 ஜனவரி மாதம் கட்சி தொடங்குவதாக அறிவித்தார்.

டிசம்பர் 31ஆம் தேதி அதற்கான தேதியை அறிவிப்பதாக கூறியுள்ளார்.

கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தியை மேற்பார்வையாளராக தமிழருவி மணியனை நியமித்துள்ளார்.

இதனையடுத்து கட்சிப் பணிகளில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார் ரஜினிகாந்த்.

தனக்கு சொந்தமான ராகவேந்திரா மண்டபம் சென்னை நகரின் மைய பகுதியில் அமைந்துள்ளதால் கட்சி அலுவலகமாக மாற்ற உள்ளார்.

தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

தனது திருமண மண்டபத்தை கட்சி அலுவலகமாக மாற்றினார் விஜயகாந்த் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

ரஜினியின் புதிய கட்சி அலுவலகத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் அர்ஜுன மூர்த்திக்கும், மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டிருக்கும் தமிழருவி மணியனுக்கும் தனித் தனி அறைகள் வழங்கப்படவுள்ளதாம்.

இதனை தொடர்ந்து கட்சி கொடி வடிவமைக்கும் பணிகளும் ஒரு பக்கம் நடைபெற்று வருகின்றன.

தற்போது நீலம், வெள்ளை, சிவப்பு ஆகிய வண்ணங்களிலும் நடுவில் ஸ்டார் சின்னத்தில் ரஜினிகாந்த் படம் உள்ள கொடியை ரஜினி ரசிகர்கள் வைத்துள்ளனர்

ஆனால் ரஜினி கட்சிக் கொடி இதிலிருந்து முற்றிலும் வேறுபடவுள்ளது.

ரஜினி போட்டோ கொடியில் இடம்பெறாது. ரஜினி அடிக்கடி காட்டும் பாபா முத்திரையே இடம் பெறும்.

தற்போது தமிழகத்தில் உள்ள திமுக, அதிமுக, தேமுதிக, மதிமுக உள்ளிட்ட திராவிட கட்சிகளின் பெயர்களில் கழகம் என்ற சொல் இடம் பெற்றுள்ளது.

எனவே கழகம் என்ற வார்த்தை இல்லாமல் கட்சியின் பெயரில் ‘படை’ என்ற வார்த்தை இடம்பெறவுள்ளதாம்.

விரைவில் ‘கொடி பறக்கும்’..

Rajinis new political party Symbol flag Party office updates

HEY.. இது வேற லெவல் கூட்டணி..; மீண்டும் ‘பியார் பிரேமா காதல்’..

HEY.. இது வேற லெவல் கூட்டணி..; மீண்டும் ‘பியார் பிரேமா காதல்’..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Harish Elan Yuvan team up for new project2018 ஆகஸ்ட் மாதம் வெளியான திரைப்படம் ‘பியார் பிரேமா காதல்’.

இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், ரைசா வில்சன் ஜோடியாக நடித்திருந்தனர்.

படம் காதலர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்ற ஹரிஷும், ரைசாவும் நட்புடன் பழகினர்.

இதனால் படத்தில் நிஜக் காதலர்களைப் பார்ப்பது போல அவர்களிடையே கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்டானது.

இளன் என்பவர் படத்தை இயக்க யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

கே புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து ஒய்எஸ்ஆர் பிலிம்ஸ் சார்பாக யுவன் சங்கர் ராஜா தயாரித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது HEY கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

அதாவது Harish Elan Yuvan புதிய படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளனர்.

விரைவில் மற்ற கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என தெரிவித்துள்ளனர்.

Harish Elan Yuvan team up for new project

நெல்சன் இல்லை.?. ‘தளபதி 65’ டைரக்டர் அவரா.? அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்

நெல்சன் இல்லை.?. ‘தளபதி 65’ டைரக்டர் அவரா.? அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Masterலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ படம் அடுத்தாண்டு 2021 பொங்கலுக்கு ரிலீசாகவுள்ளது.

இப்படத்திற்கு பிறகு விஜய் நடிக்கவுள்ள தளபதி 65வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

முதலில் ஏஆர் முருகதாஸ் இயக்கவிருந்த நிலையில் பின்னர் விலகினார்.

எனவே விஜய் யாருடைய இயக்கத்தில் நடிக்க போகிறார் என்ற அறிவிப்பு வெளியாகவில்லை.

ஆனால் கோலமாவு கோகிலா & டாக்டர் படங்களின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்க போவதாக தகவல்கள் வந்தன.

இதனிடையில் இயக்குனர் அட்லீ விஜய்யை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.

எனவே தளபதி 65 படத்தை அட்லீ இயக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இறுதியாக வெளியான ‘பிகில்’ படமே எதிர்ப்பார்த்த நிலையில் இல்லை.

இதனால் மீண்டும் அட்லீயுடன் கூட்டணியா? என ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

எதுவாக இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை ரசிகர்கள் காத்திருத்தல் நலமே..

Who will be the director of Vijays Thalapathy 65

More Articles
Follows