ஸ்ரீதேவி கையால் விருது பெற்று மலரும் நினைவுகளில் மூழ்கிய கமல்

Kamal Haasan and Sridevi1970 மற்றும் 80ஆம் ஆண்டுகளில் பல படங்களில் கமல்ஹாசனும், ஸ்ரீதேவியும் ஜோடியாக நடித்துள்ளனர்.

இவர்கள் ஜோடியாக நடித்த பெரும்பாலான படங்கள் வசூலை அள்ளியது.

தமிழகத்தில் கொடி கட்டி பறந்த ஸ்ரீதேவி பின்னர் இந்தி படங்களில் நடித்தார்.

அங்கும் புகழ் கொடி நாட்ட நடிகர் அனில்கபூரின் சகோதரரும், தயாரிப்பாளருமான போனி கபூரை மணந்து மும்பையிலேயே செட்டிலானார்.

இந்நிலையில் நீண்ட காலத்துக்கு பிறகு மும்பையில் நடந்த நிகழ்ச்சியொன்றில் கமல்ஹாசனும் ஸ்ரீதேவியும் சந்தித்து கொண்டனர்.

அங்கு கமல்ஹாசனுக்கு ஸ்ரீதேவி கையால் விருது வழங்கப்பட்டது.

அப்போது இருவரும் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அதன்பின்னர் கமல் பேசும்போது, “ஸ்ரீதேவி கையால் விருது பெற்றது மகிழ்ச்சி. அவரை பார்த்ததும் நான் பழைய மலரும் நினைவுகளுக்குள் சென்றேன்” என்றார்.

இதனைக் கேட்ட பார்வையாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

Overall Rating : Not available

Latest Post