தேர்தலில் போட்டியிடுவேன்.; ரஜினி ஆதரவை கேட்பேன்..; உடல்நலனை ரஜினி கவனிக்க வேண்டும்.. கமல் பக்கா ப்ளான்

தேர்தலில் போட்டியிடுவேன்.; ரஜினி ஆதரவை கேட்பேன்..; உடல்நலனை ரஜினி கவனிக்க வேண்டும்.. கமல் பக்கா ப்ளான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini kamalஇன்று வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்.

பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார் கமல்.. அப்போது அவர் பேசியதாவது..

வட அமெரிக்காவைச் சேர்ந்த கமல்ஹாசன் நற்பணி இயக்கத்தில் உள்ளவர்கள் மூலம் மதுரை மாவட்ட துவரிமான் என்ற ஊரில் உள்ள தொடக்கப் பள்ளி சீரமைக்கப்பட்டுள்ளது.

இதுபோல் மேலும் சில பிறந்த நாள் பரிசுகளை நான் உங்களிடம் எதிர்பார்க்கிறேன்.

கடந்த சில மாதங்களில் ஒரு லட்சம் பேர் மக்கள் நீதி மய்யத்தில் புதிதாக சேர்ந்துள்ளனர்.

சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கட்சியின் வேட்பாளர் தேர்வு நடந்து வருகிறது. நானும் போட்டியிடுகிறேன். தொகுதியை அறிவிப்பேன்.

பழிபோடும் அரசியலாக இல்லாமல், வழிகாட்டும் அரசியலாக இருக்கும் என்று நம்புகிறோம்.

பாஜகவுடன் தேர்தலில் கூட்டணி சேருவீர்களா என கேட்டதற்கு, “பல்வேறு கட்சிகளில் பல நல்லவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எங்களுடன் வர வேண்டும். நல்லவர்களுடன் நாங்கள் கூட்டணி சேருவோம்” என்றார்.

நடிகர் ரஜினிகாந்த், தனது உடல்நிலைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று ஒரு நண்பராக அவருக்கு அறிவுறுத்துவேன். அரசியலுக்கு வருவது பற்றி அவர்தான் முடிவெடுக்க வேண்டும்.

அரசியல் பற்றி ரஜினியும் நானும் பேசிக்கொண்டேதான் இருக்கிறோம். அவரது அரசியல் நிலைப்பாடு குறித்து முன்னரே எனக்குத் தெரியும்.

சட்டமன்ற தேர்தலில் ரஜினியின் ஆதரவை கோருவீர்களா என செய்தியாளர்கள் கேட்டபோது, அவரது ஆதரவை தருமாறு கேட்பேன்.” என்று கமல் பதில் அளித்தார்.

ஓரிரு தினங்களுக்கு முன்… “பிக் பாஸ் நிகழ்ச்சியில் கோடிக்கணக்கில் சம்பளம் பெறுவது உண்மைதான். அதனை என்னை வாழ வைத்து அவர்களிடமே மீண்டும் கொட்டுவேன்..” என கமல் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Kamal Haasan seek rajinikanths support in politics

‘ஈஸ்வரன்’ பட சூட்டிங்கை முடிச்சிட்டாரா சிம்பு..? இவ்ளோ ஸ்பீட் ஆகாதுப்பா..

‘ஈஸ்வரன்’ பட சூட்டிங்கை முடிச்சிட்டாரா சிம்பு..? இவ்ளோ ஸ்பீட் ஆகாதுப்பா..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

eeswaran movieதிரைத்துறையில் பல திறமைகள் நிறைந்தவர் நடிகர் சிம்பு. இவருக்கு சிங்கிள் டேக் ஆர்ட்டிஸ்ட் என்ற பெயரும் உண்டு.

ஆனால் படப்பிடிப்புக்கு தாமதமாக வருவார் என்ற குற்றச்சாட்டுகள் இவர் மேல் எப்போதுமே உண்டு.

தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் ‘ஈஸ்வரன்’ படத்தில் நடித்து வருகிறார் சிம்பு.

அவருடன் பாரதிராஜா, நிதி அகர்வால், பால சரவணன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

குறுகிய கால படமாக இப்படத்தை படமாக்கி வந்தார் சுசீந்திரன்.

சிம்புவின் காட்சிகளை 2 வாரங்களுக்கு நடத்த திட்டமிட்டிருந்தாராம்.

ஆனால் தற்போது பத்தே நாட்களில் அவருடைய காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாம்.

இது படக்குழுவினரையே ஆச்சரியமடைய வைத்துள்ளது..

இன்னும் சில தினங்களில் ஈஸ்வரன் பட மொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும் என தெரிய வந்துள்ளது.

அதன் பின்னர் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் துவங்கும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஈஸ்வரன் படப்பிடிப்பை வெகு விரைவாக முடித்து விட்ட சிம்பு இன்னும் சில நாட்களில் வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது.

Silambarasan TR wraps his shoot for Eeswaran

பாபி சிம்ஹா & காஷ்மீரா பர்தேஷி இணையும் ‘வசந்த முல்லை’

பாபி சிம்ஹா & காஷ்மீரா பர்தேஷி இணையும் ‘வசந்த முல்லை’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vasantha Mullaiஜிகர்தண்டா படத்தில் நடித்து தேசிய விருது பெற்ற பாபி சிம்ஹா புதிய படமொன்றில் நடித்துள்ளார்.

இதன் இறுதிகட்டப் படப்பிடிப்பை முடித்து விரைவில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

எஸ்.ஆர்.டி எண்டர்டையின்மெண்ட் மற்றும் முத்ராஸ் பிலிம் பேக்டரி இணைந்து இந்தப் படத்தை பிரம்மாண்டமான முறையில் தயாரித்து வருகிறது.

இந்தப் படத்தை குறும்பட இயக்குநர் ரமணன் புருஷோத்தமா இயக்கி வருகிறார்.

சிம்ஹா பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.

‘வசந்த முல்லை’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ளது.

சிம்ஹாவுக்கு நாயகியாக காஷ்மீரா பர்தேஷி நடித்துள்ளார்.

இவர்களுடன் முக்கிய கதாபாத்திரங்களில் சிலர் நடித்துள்ளனர். அது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும். ரசிகர்களுக்கு வித்தியாசமான ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் விருந்து காத்திருக்கிறது.

‘வசந்த முல்லை’ படக்குழுவினர் விவரம்:

தயாரிப்பு நிறுவனங்கள்: எஸ்.ஆர்.டி எண்டர்டையின்மெண்ட் மற்றும் முத்ராஸ் பிலிம் பேக்டரி

தயாரிப்பு மேலாளர் – நாகராஜ் ஆர்.கே

கதை, திரைக்கதை, இயக்கம் – ரமணன் புருஷோத்தமா

வசனம் – பொன்னி வளவன்

ஒளிப்பதிவு – கோபி அமர்நாத்

இசையமைப்பாளர் – ராஜேஷ் முருகேஷன்

எடிட்டர் – விவேக் ஹர்ஷன்.

சண்டைக் காட்சிகள் – ஸ்டன்னர் சாம், ஸ்டண்ட் சில்வா

ஆடை வடிமைப்பு – நந்தினி என்.கே

விளம்பர வடிவமைப்பு – டியூனி ஜான்.

பி.ஆர்.ஓ – யுவராஜ்

Bobby Simha and Kashmira joins for Vasantha Mullai

JUST IN அப்பா கட்சி அது.. என் பெயரை பயன்படுத்தினால் நடவடிக்கை..; ரசிகர்களுக்கு விஜய் எச்சரிக்கை

JUST IN அப்பா கட்சி அது.. என் பெயரை பயன்படுத்தினால் நடவடிக்கை..; ரசிகர்களுக்கு விஜய் எச்சரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay photosநடிகர் விஜய் அரசியலுக்கு வருவார் என அண்மைக்காலமாகவே பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார் அவரின் தந்தை எஸ்ஏசி.

கட்சி தலைவராக பத்மநாபன், பொதுச்செயலாளர் எஸ்.ஏ.சந்திரசேகர், பொருளாளர் ஷோபா என விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சற்றுமுன் தன் தந்தை தொடங்கியுள்ள கட்சிக்கும் தனக்கும் தொடா்பும் இல்லை என நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்…

“இன்று என் தந்தை திரு.எஸ்.ஏ.சந்திரசேகா் அவா்கள் ஓா் அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளார் என்பதை ஊடகங்களின் வாயிலாக அறிந்தேன்.

அவா் தொடங்கியுள்ள கட்சிக்கும் எனக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எவ்வித தொடா்பும் இல்லை என திட்டவட்டமாக எனது ரசிகா்களுக்கும் பொதுமக்களுக்கும் தொிவித்துக்கொள்கிறேன்.

இதன் மூலம் அவா் அரசியல் தொடா்பாக எதிா்காலத்தில் மேற்கொள்ளும் எந்த நடவடிக்கைகளும் என்னை கட்டுப்படுத்தாது என்பதை தொியப்படுத்திக்கொள்கிறேன்.

மேலும் எனது ரசிகா்கள், எனது தந்தை கட்சி ஆரம்பித்துள்ளாா் என்பதற்காக தங்களை அக்கட்சியில் இணைத்துக்கொள்ளவோ கட்சி பணியாற்றவோ வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.

அக்கட்சிக்கும் நமக்கும் நமது இயக்கத்திற்கும் எவ்வித தொடா்பும் கிடையாது என்பதை தொிவித்துக்கொள்கிறேன்.

மேலும் என் பெயரையோ புகைப்படத்தையோ எனது அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ தொடா்புபடுத்தி ஏதேனும் விவகாரங்களில் ஈடுபட்டால் அவா்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தொிவித்துக்கொள்கிறேன்“

இவ்வாறு நடிகர் விஜய் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Actor Vijay disassociates himself from the political party floated by his dad

JUST IN விஜய் பெயரில் கட்சி.; ஆனால் விஜய்யின் கட்சியில்லை ; எஸ்ஏசி புது விளக்கம்

JUST IN விஜய் பெயரில் கட்சி.; ஆனால் விஜய்யின் கட்சியில்லை ; எஸ்ஏசி புது விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay fatherநடிகர் விஜய்க்கு தமிழகத்தில் உள்ள ரசிகர் பட்டாளம் நாம் அறிந்த ஒன்றுதான்.

ஆயிரக்கணக்கான ரசிகர் மன்றங்கள் அவருக்கு உள்ளன.

மேலும் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரிலும் அவரின் ரசிகர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார் எஸ்ஏசி.

கட்சி தலைவராக பத்மநாபன், பொதுச்செயலாளர் எஸ்.ஏ.சந்திரசேகர், பொருளாளர் ஷோபா என விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் ஒரு பிரபல டிவிக்கு அளித்த பேட்டியில்…

அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் அரசியல் கட்சியை பதிவு செய்திருப்பதாகவும், இது விஜய்யின் கட்சி அல்ல என்றும் தெரிவித்தார்.

மேலும் விஜய் அரசியலுக்கு வருவாரா.? வரமாட்டாரா.? என்பது குறித்து தன்னால் கருத்து சொல்ல முடியாது எனவும் எஸ்ஏ சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

SAC clarification on new party launched today

ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் ‘கலியுகம்’… பேரழிவுக்கு பின் உலகம் எப்படியிருக்கும்..?

ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் ‘கலியுகம்’… பேரழிவுக்கு பின் உலகம் எப்படியிருக்கும்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

புத்தம் புதிய களத்துடன் உருவாகும் ‘கலியுகம்’: ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார்
தமிழ் சினிமாவில் புத்தம் புதிய கதைக்களத்துடன் இளம் இயக்குநர்கள் அறிமுகமாகி வருகிறார்கள்.

இதனை சமீபமாக வரும் கதைக்களங்களிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. இதுவரை தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, இந்திய சினிமாவிலேயே வந்திராத ஒரு புத்தம் புதிய கதைக்களத்துடன் இளம் படை ஒன்று களம் காணவுள்ளது.

இந்தக் கதையைக் கேட்டுவிட்டு உடனடியாக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். இதனை இயக்குநர் பிரமோத் சுந்தர் இயக்கவுள்ளார்.

இவர் யாரிடமும் உதவி இயக்குநராக பணிபுரியவில்லை. விளம்பரத் துறையில் பணிபுரிந்து, சில குறும்படங்களை இயக்கியுள்ளார்.

பேரழிவுக்கு பிந்தைய உலகம் எப்படியிருக்கும் என்ற மையக்கருத்தைக் கொண்ட களமாக இந்தப் படம் உருவாகிறது.

‘கலியுகம்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ஆர்.கே இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பாக ப்ரைம் சினிமாஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கே.எஸ். ராமகிருஷ்ணா பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ளார்.

ஹாரர் த்ரில்லர் பாணியில் உருவாகும் இதன் படப்பிடிப்பு 2021- ஆண்டு தொடக்கத்தில் சென்னையில் தொடங்குகிறது.
முழுக்க முழுக்க இளம் படையே, இந்தப் படத்தில் பணிபுரியவுள்ளது.

ஜாம்பவான் பி.சி.ஸ்ரீராமிடம் பணிபுரிந்த ராம்சரண் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

இதர தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

காட்சியமைப்பு, கதைக்களம் என அனைத்திலும் புதுமையைக் கொண்டுவரவுள்ள இந்தப் படம் கண்டிப்பாக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும் என்கிறார்கள் திரையுலக வட்டாரத்தில்.

‘கலியுகம்’ படக்குழுவினர் விவரம்:
தயாரிப்பு நிறுவனம்: ஆர்.கே இண்டர்நேஷனல்

தயாரிப்பாளர்: ப்ரைம் சினிமாஸ் உரிமையாளர் கே.எஸ்.ராமகிருஷ்ணா

இயக்குநர்: பிரமோத் சுந்தர்

ஒளிப்பதிவாளர்: ராம்சரண்

பி.ஆர்.ஓ – யுவராஜ்

Actress Shraddha Srinath to play lead in horror-thriller Kaliyugam

More Articles
Follows