சிவகார்த்திகேயனுக்கு ஜோடியானார் தேசிய விருது இயக்குனரின் மகள்

Kalyani Priyadarshan pair up with Sivakarthikeyan in SK15ஞானவேல் ராஜா தயாரிப்பில் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘Mr.லோக்கல்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் சிவகார்த்திகேயன்.

நயன்தாரா நாயகியாக நடிக்க, ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.

இப்படம் மே 1-ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து நேற்று இன்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

சில நாட்களாக இதன் சூட்டிங் நின்ற நிலையில் தற்போது படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இப்படத்தை அடுத்து ‘இரும்புத்திரை’ இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன்.

இப்படத்தை 24 ஏ.எம் ஸ்டூடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறதாம்.

இதில் முக்கிய வேடத்தில் ஆக்சன் கிங் அர்ஜீன் நடிக்கிறார்.

இந்நிலையில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இவர் தேசிய விருது பெற்ற பிரபல இயக்குனர் பிரியதர்சனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் அம்மா லிசியும் பிரபல நடிகையாவார்.

இந்த நாயகி கல்யாணி ‘வான்’ என்ற தமிழ்ப்படத்திலும் நடித்து வருகிறார் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

Kalyani Priyadarshan pair up with Sivakarthikeyan in SK15

Overall Rating : Not available

Latest Post