3 முறை கருவை கலைச்சார்.. என் நிர்வாண படங்களை லீக் செய்வதாக மிரட்டுகிறார்..; முன்னாள் அமைச்சர் மீது ‘நாடோடிகள்’ நடிகை புகார்

3 முறை கருவை கலைச்சார்.. என் நிர்வாண படங்களை லீக் செய்வதாக மிரட்டுகிறார்..; முன்னாள் அமைச்சர் மீது ‘நாடோடிகள்’ நடிகை புகார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Chandiniமலேசியாவைச் சேர்ந்தவர் நடிகை சாந்தினி (வயது 36). இவர் நாடோடிகள் படத்தில் துணை நடிகையாக நடித்திருக்கிறார்.

இவர் மலேசியா சுற்றுலா வளர்ச்சி கழக தூதரகத்தில் பணிபுரிந்திருக்கிறார்.

இவர் சென்னை கமிஷனர் அலுவலகத்துக்கு இன்று வந்து முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பரபரப்பான புகார் ஒன்றைக் கொடுத்தார்.

அதில் “நான் மலேசியா குடியுரிமை பெற்றவள். எனக்கு இன்னும் திருமணமாகவில்லை.

சென்னையில் 2017-ம் ஆண்டு முதல் வசிக்கிறேன்.

நான், மலேசியா சுற்றுலா வளர்ச்சி கழக தூதரகத்தில் பணிபுரிந்த போது அடிக்கடி என் பணி நிமித்தமாக இந்தியா வருவேன்.

கடந்த 2017-ம் ஆண்டு அ.தி.மு.க அமைச்சரவையின் தமிழக தொழில் நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன், சுற்றுலா வளர்ச்சி துறை சம்பந்தமாக என்னைப் பார்க்க விரும்புவதாக எனக்கு தெரிந்த நண்பர் பரணி என்பவர் மூலமாக பேசினார்

அந்த அமைச்சர் மலேசியாவில் தொழில் முதலீடு செய்ய போவதாக கூறினார்.

தொழில் சம்பந்தமாக பேச வேண்டும் என கூறி என்னுடைய செல்போன் நம்பரை வாங்கினார்.

சில நாட்களில் தனிப்பட்ட முறையில் அமைச்சர் மணிகண்டன் பேசினார்.

நான் அழகாக இருப்பதாக கூறினார்.

என்னை ரொம்ப பிடித்து விட்டதால் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி நெருங்கி பழகினார்.

அவர் மனைவியால் எந்த சந்தோஷமும் இல்லை என்றார்.

அவருடைய மனைவியை சட்டப்படி விவாகரத்து செய்துவிட்டு விரைவில் என்னை சட்டப்படி திருமணம் செய்து கொள்வதாக கூறி உறுதியளித்தார்.

ஒரே வீட்டில் கணவன் மனைவியாக வாழ்ந்தோம். சென்னையில் இருந்தால் இரவில் என்னுடன்தான் தங்குவார். நான் எங்கு சென்றாலும் அமைச்சர் காரைத் தான் பயன்படுத்துவேன்.

கடந்த 2019-ம் வருடம் சட்டமன்றத்தில் அமைச்சர் மணிகண்டன் பேசியபோது நான் அவருடைய மனைவி என்ற முறையில் சட்டமன்றத்துக்குள் அனுமதிக்கப்பட்டேன்

அவர் என் வீட்டிற்கு வந்து தங்கி சென்றதற்கான அனைத்து ஆதாரங்களும் என்னிடம் உள்ளது.

அவரால் நான் மூன்று முறை கருவுற்றேன். மூன்று முறையும் கருவை கலைக்க சொன்னார்.

பின்னர் கருத்தடுப்பு உறை காப்பர்டியை போட வலியுறுத்தினார்.

இதனால் நான் பலமுறை உடல் நலம் சரியில்லாமல் இருந்துள்ளேன். அந்த நேரத்தில் கூட என்னை பலவந்தப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.

என்னை திருமணம் செய்ய நான் வற்புறுத்திய போது 2019ல் என்னை அடித்தார். என் கண்களை சேதப்படுத்தினார். அதற்கு நான் சிகிச்சை பெற்றேன்.

இந்தநிலையில் கடந்தாண்டு ஊ
கொரோனா ஊரடங்கு சமயத்தில் அவர் சொந்த ஊருக்கு சென்ற பிறகு திடீரென என்னை மிரட்ட ஆரம்பித்தார்.

`ஒழுங்கா நீ உன் சொந்த நாட்டிற்கு சென்றுவிடு இல்லையென்றால் உனக்கு தெரியாமல் எடுத்த அனைத்து அரை நிர்வாண படங்களை இன்டர்நெட்டில் விட்டுவிடுவேன்’ என்றார்.

நான் குளிக்கும் சமயம் எனக்கு தெரியாமல் எடுத்த போட்டோவை எனக்கு டெலிகிராம் மூலம் அனுப்பினார்.

தொடர்ந்து அவரை தொலைபேசியில் அழைத்தபோது என் அழைப்பை ஏற்காமல் கொலை மிரட்டல் விடுத்தார்.

இதற்கான அனைத்து ஆதாரங்களையும் துணை கமிஷனர் நாகஜோதியிடம் கொடுத்துள்ளோம்.

விசாரணை நடத்தி விட்டு நடவடிக்கை எடுப்பதாக நாகஜோதி தெரிவித்துள்ளார்” என்றார் நடிகை சாந்தினி.

Actress Chandini accuses minister of blackmailing with intimate photos

E2ddTPLUYAETiUD

கொரோனாவினால் மரணமடைந்த பெற்றோரின் குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம்..; 18 வயது வரை மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் – கேரள அரசு

கொரோனாவினால் மரணமடைந்த பெற்றோரின் குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம்..; 18 வயது வரை மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் – கேரள அரசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

pinarayi vijayanகொரோனா வைரஸ் தொற்றால் இந்தியாவில் பல மாநிலங்களில் பெற்றோரை இழந்து தவித்து வருகின்றனர் குழந்தைகள்.

பலர் தாய், தந்தை இருவரில் ஒருவரை இழந்தாலும் சிலர் இருவரையுமே இழந்து தவித்து வருவது மகா கொடுமை.

குழந்தைகளின் பரிதாப நிலையை உணர்ந்த ஏராளமான தன்னார்வ அமைப்புகள் உதவ முன்வந்துள்ளன.

குடும்பத்தில் வருமானம் ஈட்டுவோரை இழந்துவிட்டால் நிவாரண உதவிகளை மாநில அரசுகள் அளித்து வருகி்ன்றன.

மேலும் டெல்லி, ஆந்திரா உள்ளிட்ட ஓரிரு மாநில அரசுகள் குழந்தைகளின் கல்விச் செலவையும் ஏற்பதாக அறிவித்துள்ளன.

இந்த நிலையில் கேரள அரசும் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரண உதவிகளை அறிவித்துள்ளது.

முதல்வர் பினராயி விஜயன் நேற்று அளித்த பேட்டியில்…

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தொடக்க உதவித்தொகையாக ரூ.3 லட்சம் வழங்கப்படும். அதன்பின் 18வயதுவரை மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.

அந்த குழந்தைகள் பட்டப்படிப்பு முடிக்கும் வரை அதற்கான கல்விச் செலவையும் அரசே ஏற்கும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

என உத்தரவிட்டுள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.

Kerala govt to give financial aid of Rs 3 lakh, free education for kids who lost their parents to Covid

அம்மா உணவகத்தில் சாப்பிட்ட அனுபவத்தை சொல்லுங்க.. சினிமாவுல நடிங்க..; செம சான்ஸ் இதோ

அம்மா உணவகத்தில் சாப்பிட்ட அனுபவத்தை சொல்லுங்க.. சினிமாவுல நடிங்க..; செம சான்ஸ் இதோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

amma unavagamதமிழக மக்களிடம் ‘அம்மா உணவகம்’ என்பது பெயர் பெற்ற ஒன்றாகிவிட்டது.

அன்று ‘வயிற்றுக்குச் சோறிட வேண்டும் இங்கு
வாழும் மனிதருக்கெல்லாம்’ என்று பாரதி கண்ட கனவை உண்மையில் இன்று நிறைவேற்றி வருபவை அம்மா உணவகங்கள்தான்.

சென்னையில் பசித்தவர்களின் புகலிடமாக ஆங்காங்கே இருக்கும் அம்மா உணவகங்கள் மாறி இருக்கின்றன. குறிப்பாக ஊரடங்கு காலத்தில் அனைவரையும் வரவேற்று வயிற்றுக்கு உணவூட்டிக்கொண்டிருக்கும் தாய்கள் இவை.

சொந்த ஊரைப் பிரிந்து பெருநகரங்களில் வாழும் எத்தனையோ பேருக்கு பசியாற்றும் தாயாக அம்மா உணவகம் இயங்கி வருகிறது.

அம்மா உணவகத்தின் பெருமையையும் அது சார்ந்த தாக்கங்களையும் அடிப்படையாக வைத்து ‘அம்மா உணவகம்’ என்கிற திரைப்படம் உருவாகியிருக்கிறது .

‘அன்னமிட்ட தாய்க்கு சமர்ப்பணம்’ என்ற மேற்கோளுடன் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

இப்படத்திற்குக் கதை திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் விவேகம் .K.சுரேஷ்

இப்படத்தில் நாயகர்களாக

அஸ்வின் கார்த்திக் (“பொண்டாட்டி தேவை” பட நாயகி அஸ்வினி அவர்களது மகன்)

“குள்ளபூதம்” சின்னத்திரை தொடர் புகழ் “இந்திரன்”

விகடன் சீரியல்கள் புகழ்
“சசி சரத்”

நாயகிகளாக

“செந்தூரப்பூவே” தொடர் புகழ் ஶ்ரீநிதி

பாத்திமா இப்ராஹிம்
( தயாரிப்பாளரின் மகள்)

மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் நாஞ்சில் சுவாமி
(யோகி பாபுவின் டூப்)

தமிழ்ச்செல்வன்
( சேலம் RR பிரியாணி உரிமையாளர்)

இவர்களுடன், இயக்குநர்கள் ஆர்.வி. உதயகுமார் , சுப்பிரமணிய சிவா, சரவண சக்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

ஒரு வணிக சினிமாவுக்கான அத்தனை அம்சங்களுடனும் அம்மா உணவகத்தின் பெருமையையும் கூறும் வகையில் இப்படம் உருவாகி இருக்கிறது.

ஒளிப்பதிவு -மோகன ராமன், இசை -எஸ் .ஷாந்தகுமார், படத்தொகுப்பு -உதயா கார்த்திக், வசனம் -நியூட்டன் , பாடல்கள் கிருதியா, தொல்காப்பியன், ஜான் தன்ராஜ், சண்டைப்பயிற்சி- ஸ்டண்ட் சரண், நடனம் சாய் சரவணா.

படத்தை எஸ். எம். குமாரசிவம் பெருமையுடன் வழங்க, படிக்கட்டு பாய் புரொடக்சன்ஸ் சார்பில் எம்.பி.முகமது இப்ராகிம் தயாரிக்கிறார். இணை தயாரிப்பு அப்துல் அஜீஸ்.

தமிழகமெங்கும் ஆக்‌ஷன் – ரியாக்ஷன் ஜெனீஷ் வெளியிடுகிறார்.

படத்தில் இடம்பெறும் ‘மனமே மனமே கலங்காதே தினமே’ என்கிற பாடல், இந்த கொரோனா காலத்தை எதிர்கொண்டு மீண்டு வரும் உத்வேகத்தை தருவதாக அமைந்திருக்கிறது.

அம்மா உணவகம் பற்றியும் அதனால் பயன் பெற்றவர்கள் பற்றியும் விளக்கும் வகையில் கருத்துகளைப் பெற்று இப்படத்தின் விளம்பரத்துக்கு பயன்படுத்தவிருக்கிறார்கள்.

அதற்காக ‘அம்மா உணவகம் ‘ படக்குழு ஒரு போட்டி அறிவித்திருக்கிறார்கள்.

அம்மா உணவகம் பற்றிய உங்கள் அனுபவங்களை ஒன்றரை நிமிட வீடியோவாக பேசி வாட்ஸ் அப்பில் அனுப்புங்கள்.

தேர்வு செய்யப்படும் வீடியோக்களுக்கு விழா மேடையில் பரிசுகள் உண்டு.
நடிப்பில் ஆர்வம் உள்ளவர்களாக இருந்தால் அடுத்ததாகத் தயாரிக்கும் படத்தில் அவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும்.

வீடியோக்களை வாட்ஸ் அப்பிலும் மின்னஞ்சலிலும் அனுப்பலாம்.

அனுப்ப வேண்டிய வாட்ஸ் அப் எண் : 9791125244

மின்னஞ்சல் முகவரி :

[email protected]

நிலைமை சீரானதும்

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது.

கொரோனா ஊரடங்கை தொடர்ந்து திரையரங்குகள் திறந்ததும் அம்மா உணவகம் திரையரங்குகளில் வெளியாகிறது.

Amma Unavagam movie team offers movie chance for public

சிவகார்த்திகேயன் தந்தை பெயரை தவறுதலா சொல்லிட்டேன்..; எச் ராஜா அடிச்ச அந்தர் பல்டி

சிவகார்த்திகேயன் தந்தை பெயரை தவறுதலா சொல்லிட்டேன்..; எச் ராஜா அடிச்ச அந்தர் பல்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan fatherநடிகர் சிவகார்த்திகேயனின் தந்தை ஒரு காவல்துறை அதிகாரி. அவர் இயற்கையாக மரணம் அடைந்தார்.

ஆனால் அந்த ஜெயிலர் கொலை செய்யப்பட்டடார். அவரை கொலை செய்தவர் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய ஜவாஹிருல்லா தான் என சர்ச்சையான கருத்தை பேசியிருந்தார் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா.

எச்.ராஜாவின் இந்த கருத்து பெரும் பரபரப்பை தமிழகத்தில் ஏற்படுத்தியது.

இதையடுத்து, பொய்யான கருத்துகளை பரப்பி வருவதாக எச் ராஜா மீது மனித நேயமக்கள் கட்சி வழக்கறிஞர் பிரிவு சார்பில் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த எச்.ராஜா கூறியதாவது…

முந்தைய பேட்டியில் நான் பேசியதில் ஒரே ஒரு தவறு என்னவென்றால், நடிகர் சிவகார்த்திகேயன் தந்தையும் காவல்துறையில் இருந்தவர் தான்.

எனவே தான் தவறுதலாக அவர் பெயரை கூறி விட்டேன். சிவகார்த்திகேயனுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எந்த உள்நோக்கமும் எனக்கு கிடையாது.” என அந்தர் பல்டி அடித்தார் எச் ராஜா.

BJP H Raja tenders apology to Sivakarthikeyan

சிங்கிளை வெளியிடுவது மனிதமற்ற செயல்..; சிம்பு ரசிகர்களுக்கு ‘மாநாடு’ புரொடியூசர் சீரியஸ் அட்வைஸ்

சிங்கிளை வெளியிடுவது மனிதமற்ற செயல்..; சிம்பு ரசிகர்களுக்கு ‘மாநாடு’ புரொடியூசர் சீரியஸ் அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suresh kamatchi simbuஎவருமே எதிர்ப்பார்த்திடாத வகையில் கொரோனா வைரஸ் 2வது அலை மிக கொடூரமாகி வருகிறது.

இதனால் பெரும் உயிரிழப்புகளை சந்தித்து வருகிறது உலகம்.

இந்தியாவிலும் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கால் மக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர்.

ஊரில் யாராவது இறந்தால் அது நமக்கு வெறும் செய்தி தான். ஆனால் நம் உறவினர் / நண்பர் இறந்தால்தான் நமக்கு அது மரணச் செய்தியாகும்.

இப்படி நினைக்கும் சிலரே அவ்வப்போது தங்கள் ஹீரோக்களின் சினிமா அப்டேட்டை கேட்டு வருகின்றனர்.

பிரபலங்களை கண்ட இடங்களில் எல்லாம் அஜித் ரசிகர்கள் ‘வலிமை’ அப்டேட் கேட்டது ஊரறிந்த விஷயம்தான்.

இந்த நிலையில் சிம்பு ரசிகர்களும் ‘மாநாடு’ பட அப்டேட் & சிங்கிள் ரிலீஸ் குறித்து கேட்டுக் கொண்டே இருக்கின்றனர்.

இதனையடுத்து மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தன் ட்விட்டரில் கூறியதாவது…

“பேரிடர் காலத்தில் தினமும் ஏதாவது இழப்புச் செய்தி காதில் விழுந்துகொண்டேயிருக்கிறது. யாரும் கொண்டாட்ட மனநிலையில் இல்லை.

மருத்துவமனை வாசலிலும்.. கொரானா பயத்திலும் இருக்கும் இச்சூழல் இரக்கமற்று #மாநாடு படத்தின் சிங்கிளை வெளியிடுவது மனிதமற்ற செயலாக இருக்கும். 1/2

லாக்டௌன் முடியட்டும். கொஞ்சமாவது மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பட்டும். நண்பர்களே அதுவரைக்கும் மற்றவர்களுக்காக வேண்டியபடி காத்திருங்கள். நன்றி @SilambarasanTR_ @vp_offl @Richardmnathan @johnmediamanagr #Maanaadu

இவ்வாறு கூறியுள்ளார்.

இனிமேலாவது கொரோனா லாக்டவுன் சூழ்நிலையை ரசிகர்கள் புரிந்துக் கொள்வார்கள் என நம்புவோம்..

Producer Suresh Kamatchi about Maanaadu update

#40YearsOfMeena : I am very disappointed with You.. ‘கண்ணழகி’ மீனாவிடம் ‘அண்ணாத்த’ ரஜினி

#40YearsOfMeena : I am very disappointed with You.. ‘கண்ணழகி’ மீனாவிடம் ‘அண்ணாத்த’ ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவில் கண்ணழகி என்றாலே அது நடிகை மீனா தான்.

இவரது முதல் திரைப்படம் 1981-ம் ஆண்டில் வெளியான நடிகர் சிவாஜி கணேசனின் “நெஞ்சங்கள்” படமாகும்.

குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து வந்தார் மீனா.

ரஜினிகாந்த் உடன் “அன்புள்ள ரஜினிகாந்த்” படத்தில் நடித்தார்.

ரஜினியுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் பின்னாளில் ரஜினிக்கே ஜோடியாக எஜமான், வீரா, முத்து படங்களில் நடித்தார்.

தற்போது 25 வருடங்களுக்கு பிறகும் ‘அண்ணாத்த’ படத்தில் ரஜினியுடன் நடித்து வருகிறார்.

45 வயதாகும் மீனா திரைவாழ்க்கையில் 40 ஆண்டுகளை கடந்துள்ளார்.

இது தொடர்பாக சில கருத்துகளை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார் மீனா.

“1981 ஆம் ஆண்டில், லெஜண்ட் # சிவாஜி அப்பாவால் ஒரு குழந்தை கலைஞராக அறிமுகப்படுத்தப்பட்டு, இறுதியில் முன்னணி பெண்மணியாக நடித்து, கடந்த 40 ஆண்டுகளாக இந்தத் துறையில் எனது சொந்த அடையாளத்தை உருவாக்கி
உள்ளேன்.

என் வாழ்க்கையில் ஆசீர்வாதத்திற்கு குறைவே இல்லை. என்னை நம்பி, அழகான வாய்ப்புகளை வழங்கிய மக்களுக்கு நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன்.

எனது திறமையை அங்கீகரித்து, எனது கடின உழைப்பைப் பாராட்டியதற்கு நன்றி, நன்றி, நன்றி”என்று உணர்ச்சிபூர்வமாக பதிவிட்டுள்ளார் இந்த கண்ணழகி.

இந்த நிலையில் ‘அண்ணாத்த’ சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த ஒன்றை முன்னணி பத்திரிகை பேட்டியில் தெரிவித்துள்ளார் மீனா.

‘அண்ணாத்த’ சூட்டிங் ஸ்பாட்டில்… I am very disappointed with You Meena என ரஜினி சொன்னாராம்.

என்னாச்சு சார்.? ஏன் இப்படி சொல்றீங்க என மீனா கேட்டாராம்.

எல்லாருமே மாறிட்டாங்க.. ஆனா நீங்க மட்டும் ‘வீரா’ படத்துல பார்த்த மாதிரியே இருக்கீங்க என்றாராம் ரஜினி.

I am very disappointed with You Meena says Rajini at Annaatthe spot

More Articles
Follows