புரட்சிக்கு 3 நிமிடம் போதும்..; பொள்ளாச்சியில் பொங்கிய கமல்

Just 3 mins enough for Revolution says Kamal at Pollachiமக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை அண்மையில் தொடங்கினார் நடிகர் கமல்ஹாசன்.

அந்த கட்சி பணி தொடர்பாக மக்கள் பயணம் என்ற பெயரில் தமிழகத்தின் முக்கிய பகுதிகளுக்கு சென்று மக்களை சந்தித்து வருகிறார்.

அதன் படி இன்று மாலை பொள்ளாட்சி சென்று அங்கு பொதுவெளியில மக்கள் மத்தியில் பேசவிருந்தார்.

ஆனால் கமல்ஹாசனுக்கு தமிழக காவல்துறை முதலில் அனுமதி தரவில்லை.

அதன்பின்னர் 10 நிமிடங்கள் மட்டும் பேசிக் கொள்ளுங்கள். அதற்கு மேல் அனுமதிக்க முடியாது என போலீஸ் கூறியுள்ளது.

இதுகுறித்து பேசிய கமல்ஹாசன்…. ‘எனக்கு இங்கு பேச பத்து நிமிடங்கள் மட்டுமே அனுமதி கொடுத்துள்ளார்கள். ஆனால் புரட்சிக்கு மூன்று நிமிடங்கள் போதும். எனக்கு இடைஞ்சல் கொடுத்தவர்களுக்கு நான் நன்றி கூறிக்கொள்கிறேன்” என பேசினார்.

Just 3 mins enough for Revolution says Kamal at Pollachi

Overall Rating : Not available

Latest Post