தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் சினிமாவில் கதை திருட்டு விவகாரங்களில் சிக்கிய இயக்குனர்கள் பலரை நாம் பார்த்திருக்கிறோம்.
ஆனால் ஒருவர் இயக்கிய எல்லா படங்களுமே காப்பி்தான் என சிக்கியவர் என்றால் அது இயக்குனர் அட்லி தான்.
இவர் இயக்கிய ராஜா ராணி படம் மோகனின் ‘மௌன ராகம்’ பட காபி என கூறப்பட்டது. ஆனால் மௌனராகம் படத்தை நான் பார்க்கவில்லை என்றவர் அட்லி.
அதன் பின்னர் இவர் இயக்கிய ‘தெறி’ திரைப்படம் விஜயகாந்த் நடித்த சத்ரியன் படத்தின் காப்பி என கூறப்பட்டது.
அதன் பிறகு இவர் இயக்கிய ‘மெர்சல்’ திரைப்படம் கமல் நடித்த ‘அபூர்வ ராகங்கள்’ படத்தின் காப்பி என கூறப்பட்டது.
இப்படி தொடர்ச்சியாக சர்ச்சைகளுக்கு ஆளான அட்லி தற்போது ஷாருக்கான் நயன்தாரா விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஜவான்’ என்ற படத்தை ஹிந்தியில் இயக்கி வருகிறார்.
இந்த படமும் இந்த காப்பி அடித்த குற்றச்சாட்டுக்கு ஆளானது.
விஜயகாந்த் நடித்த பேரரசு படத்தின் காப்பி தான் இந்த ஜவான் என தகவல்கள் வந்தன.
மேலும் இது தொடர்பாக புகார் தயாரிப்பாளர் சங்கத்தில் அளிக்கப்பட்டது.
ஆனால் இது தொடர்பான விசாரணையில் ‘ஜவான்’ பட கதை ‘பேரரசு’ படத்தின் கதையல்ல என தெரியவந்துள்ளதாக சொல்லப்படுகின்றது.