வில்லங்கம் வேண்டவே வேண்டாம்.. இந்தியன் 2 சூட்டிங் கமல் – ஷங்கர் புதிய முடிவு

வில்லங்கம் வேண்டவே வேண்டாம்.. இந்தியன் 2 சூட்டிங் கமல் – ஷங்கர் புதிய முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், ப்ரியா, விவேக் உள்ளிட்ட பலர் நடித்த படம் இந்தியன் 2.அனிருத் இசையமைக்க லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது . 2019ல் இந்தியன் 2 சூட்டிங் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வந்தது.

2020 பிப்ரவரி 19 ஆம் தேதி இரவு, ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் கோர விபத்து ஏற்பட்டது.

பூந்தமல்லி அருகே உள்ள ஈவிபி அரங்கில் இந்த விபத்து நடந்தது.

கமல் லைகா ஷங்கர் கூட்டணியில் ‘இந்தியன் 2’.; மீண்டும் உறுதிப்படுத்திய உலகநாயகன்

அந்த விபத்தில் கிருஷ்ணா, மதுசூதனராவ், சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மற்றவர்கள் இந்த விபத்திலிருந்து நூலிழையில் படக்குழுவினர் பலரும் உயிர் தப்பினர்.

இவ்விபத்து நடந்த அடுத்த மாதமே கொரோனா ஊரடங்கு தொடங்கியதால் படப்பிடிப்பு நின்றது.

அதன் பின்னர் கொரோனா ஊரடங்கு அரசியல் பிரவேசம் தேர்தல் பிரச்சாரம் மருத்துவ சிகிச்சை என பிஸியாக இருந்தார் கமல்ஹாசன்.

இதனால் தெலுங்கில் ராம்சரண் படத்தை இயக்கச் சென்று விட்டார் ஷங்கர்.

ஷங்கருக்கு காத்திருக்காமல் லோகேஷ் இயக்கத்தில் உருவான ‘விக்ரம்’ படத்தில் நடிக்க சென்று விட்டார் கமல்.

மேலும் பிக் பாஸ் ஷூட்டிங் என பிசியாக தன்னை வைத்திருந்தார் கமல்ஹாசன்.

இதனால் இந்தியன் 2 சூட்டிங் தாமதம் ஆனது.

அதன்பின் பல்வேறு இடையூறுகளைக் கடந்து இப்போது மீண்டும் இந்தியன் 2 படத்தின் வேலைகள் தொடங்கியிருக்கின்றன.

அப்படத்தின் படப்பிடிப்புக்காக அரங்கம் அமைக்கும் பணிகள் தொடங்கியிருக்கின்றன.

இம்முறையும் ஈவிபியிலேயே அரங்கம் அமைக்கலாமா? என்கிற பேச்சு வரவே மீண்டும் வில்லங்கம் வேண்டாம் என கமல் மற்றும் ஷங்கர் ஆகிய இருவருமே அங்கு வேண்டாம் என்று உறுதியாகச் சொல்லிவிட்டார்களாம்.

கண்முன்னால் சில உயிர்கள் பறிபோன இடத்தில் மீண்டும் படப்பிடிப்பு நடத்த மனமில்லை என்று சொல்லியிருக்கிறார்கள்.

அதன்பின், சாலிகிராமத்திலுள்ள பிரசாத் லேபில், வேலைக்காரன் படத்துக்கு அரங்கம் அமைத்த இடத்தில் படத்துக்கான அரங்கம் அமைக்கும் பணிகள் வேகமாகத் தொடங்கிவிட்டன.

விரைவில் அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்கிறார்கள்.

Indian 2 shooting Kamal – Shankar’s new decision

‘விக்ரம்’ வீச்சு.: கமல் ரஜினி ரசிகர்கள் மோதல்.; ரஜினி பார்க்காத வெற்றியா? கமலை கடுப்பேத்துகிறாரா.?

‘விக்ரம்’ வீச்சு.: கமல் ரஜினி ரசிகர்கள் மோதல்.; ரஜினி பார்க்காத வெற்றியா? கமலை கடுப்பேத்துகிறாரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1980 – 90களில் ரஜினி, கமல் படங்கள் தொடர்ச்சியாக ரிலீஸ் ஆகி கொண்டிருந்தன.

அப்போது இருதரப்பு ரசிகர்களுக்கும் பலத்த மோதல் உருவானது.

இன்று நாம் ட்விட்டரில் பார்க்கும் சண்டைகளை விட கை கலப்பு சண்டைகள் அதிகமாக இருந்தன.

ஒரே நாளில் ரஜினி கமல் படங்கள் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி ஒரு பக்கம் திருவிழாவாக காணப்பட்டாலும் மறுபக்கம் கலவரமாக மாறிய காட்சிகளும் உண்டு.

இப்படியாக சென்று கொண்டிருந்த ரஜினி கமலின் காலகட்டங்கள் நாளடைவில் மோதல் குறைந்து காணப்பட்டது.

ரஜினியுடன் இணைந்து நடிக்கத் தயார்.; ‘விக்ரம்’ பட வெற்றி விழாவில் கமல் ஓபன் டாக்

இதற்கு காரணம் ரஜினி படங்கள் வரும் போது கமல் படங்கள் ரிலீஸ் ஆவதில்லை.

2000 ஆண்டுகளில் கமல் படம் ரிலீஸ் ஆகும் போது ரஜினி படங்கள் ரிலீஸ் ஆகவில்லை.

அது மட்டும் இல்லாமல் தற்போதைய சினிமாவில் ஒரு பெரிய படம் ரிலீசானால் அந்த சமயத்தில் மற்றொரு பெரிய நடிகரின் படங்கள் ரிலீசாவது இல்லை.

ஒரே படத்தை அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் வெளியிட்டு வருகின்றனர். இதனால் மற்ற படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில்லை.

இந்த நிலையில் 2022 இந்த ஜூன் மாதம் 3ம் தேதி கமல்ஹாசன் தயாரித்து நடித்த ‘விக்ரம்’ படம் வெளியானது.

4 ஆண்டுகளுக்கு பிறகு கமல் படம் ரிலீசாவதால் பலத்த எதிர்பார்ப்பும் இருந்தது.

அதேபோல படத்தின் வெற்றியும் மிகப்பெரிய அளவில் உருவானதால் அது பற்றிய விமர்சனங்களும் பாராட்டுகளும் வந்த வண்ணம் உள்ளன.

கிட்டத்தட்ட ரூ.400 கோடிக்கு மேல் ‘விக்ரம்’ படம் உலக அளவில் வசூலித்து உள்ளது.

தமிழ் சினிமாவின் அனைத்து ரெக்கார்டுகளையும் இந்த படம் முறியடித்து விட்டதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் ஜூன் 15ஆம் தேதி ரஜினி நடித்த ‘சிவாஜி’ படத்தில் 15வது ஆண்டு நிறைவு விழா ட்ரெண்டிங்கில் இருந்தது.

மேலும் அந்த படத்தில் இயக்குனர் சங்கர் & தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் ஆகியோர் ரஜினியை சந்தித்தனர்.

அதுபோல ஜூன் 27ஆம் தேதி அண்ணாமலை படத்தில் 30வது ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது.

அண்ணாமலை படத்தில் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா ரஜினியை சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்து ஆசி பெற்றார்.

இந்த படமும் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் இருந்தன.

இதனால் கடுப்பான கமல் ரசிகர்கள் கமலின் வெற்றியை பொறுக்க முடியாமல் ரஜினிகாந்த் தன் பழைய ஹிட் படங்களின் வெற்றியை கொண்டாடி வருகிறார் என கருத்துக்கள் தெரிவிக்க ஆரம்பித்தனர்.

இதனால் ஆவேசம் நடந்த ரஜினி ரசிகர்கள்.. “எங்கள் தலைவர் ரஜினி பார்க்காத வெற்றியா? என தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

உங்கள் கமலஹாசன் ஏழு ஆண்டுகளுக்கு பிறகு தான் வெற்றியை கொடுத்துள்ளார். 4 வருடங்களாக படமே ரிலீசாகல.

ஆனால் எங்கள் தலைவர் ரஜினி ஹீரோ இந்த ஏழு வருடங்களில் கபாலி, காலா, பேட்ட , தர்பார், அண்ணாத்த என பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார் என தங்கள் தரப்பு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

ஆக… 30 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கமல் – ரஜினி யுத்தம் தொடங்கிவிட்டதா? என்பதே நடுநிலையாளர்களின் கேள்வியாக உள்ளது.

Kamal Rajini fans clash after Vikram release

விதார்த் நடிக்கும் சைக்கோ திரில்லர் திரைப்படம் ஆரம்பம்

விதார்த் நடிக்கும் சைக்கோ திரில்லர் திரைப்படம் ஆரம்பம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘யதார்த்த நாயகன்’ நடிகர் விதார்த் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தின் தொடக்கவிழா இன்று சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

கிரினேடிவ் குழுமத்தை சேர்ந்த கிரினேடிவ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். மோகன் ராகேஷ் பாபு தயாரிக்கும் முதல் திரைப்படத்தில் நடிகர் விதார்த் கதையின் நாயகனாக நடிக்கிறார்.

பெயரிடப்படாத இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் மணிமாறன் நடராஜன் இயக்குகிறார்.

இதன் கதை, திரைக்கதை, வசனத்தை எழுத்தாளர் ஸ்ரீனிவாசன் சுந்தர் எழுத, ஒளிப்பதிவை எஸ். ஆர். சதீஷ்குமார் மேற்கொள்கிறார்.

பின்னணியிசைக்கும் முக்கியத்துவம் உள்ள இந்த படத்திற்காக ‘வலிமை’ படப் புகழ் இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்க, கலை இயக்கத்தை மோகன் கவனிக்கிறார்.

‘டான்’ பட புகழ் நாகூரான் ராமச்சந்திரன் பட தொகுப்பு பணிகளை கையாள, பிரமிப்பை உண்டாக்கும் சண்டை காட்சிகளை தினேஷ் சுப்பராயன் அமைக்கிறார்.

ஒப்பனைக்காக தேசிய விருதுப்பெற்ற மூத்த கலைஞர் ‘பட்டணம்’ ரஷீத் இந்த படத்தில் சிறப்பு ஒப்பனைக்காக பிரத்யேகமாக பணியாற்றுகிறார்.

படத்தில் நடிக்கும் நாயகி மற்றும் வில்லன் நடிகருக்கான தேடல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மேலும் இதில் பணியாற்றும் ஏனைய நடிகர், நடிகைகள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அகில இந்திய அளவிலான ( PAN INDIA ) திரைப்படங்களை உருவாக்குவதை நோக்கமாக கொண்டு பட தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் கிரினேடிவ் பிலிம்ஸ் நிறுவனத்தின் பெயரிடப்படாத முதல் படைப்பின் தொடக்க விழா இன்று சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினர்களாக பட குழுவினருடன் நந்தகுமார் ஐ ஏ எஸ், இயக்குநர்கள் கார்த்திக் சுந்தர், சற்குணம், ராம்நாத் பழனிக்குமார் ‘டோரா’ தாஸ் ராமசாமி, ‘நெருப்பு டா’ அசோக்குமார், ‘மஞ்சப்பை’ என். ராகவன் உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரபலங்கள் வருகை தந்து படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இவ்விழாவில் www.greenativefilms.com என்ற இந்த குழுமத்தின் திரைப்படப்பிரிவிற்கென பிரத்யேக இணையத்தள சேவையும் தொடங்கப்பட்டது.

தமிழில் தயாராகும் காவல்துறையினரின் புலனாய்வு விசாரணை பாணியிலான சைக்கோ திரில்லர் திரைப்படம் இது என்பதால், தொடக்க விழாவின்போதே ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Psycho thriller movie starring Vidharth begins

மாயம் செய்யும் மணிவண்ணா.. எதிர்பார்த்ததை விட வெற்றி.; தங்க சங்கிலி பரிசளித்த சிபிராஜ்

மாயம் செய்யும் மணிவண்ணா.. எதிர்பார்த்ததை விட வெற்றி.; தங்க சங்கிலி பரிசளித்த சிபிராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழிமாணிக்கம் தயாரிப்பில், சிபி சத்யராஜ் நடிப்பில் வெளியான ‘மாயோன்’ திரைப்படம் அனைத்து தரப்பு மக்களிடமும் வரவேற்பை பெற்று வணிகரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றியை பெற்றிருக்கிறது.

இதனை பட குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். இதன் போது படத்தை இயக்கிய அறிமுக இயக்குநர் கிஷோருக்கு, படத்தின் நாயகனான சிபிராஜ் தங்க சங்கிலியொன்றை பரிசளித்தார்.

தயாரிப்பாளர் அருண் மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்து, பலத்த போட்டிகளுக்கு இடையே வெளியான திரைப்படம் ‘மாயோன்’.

எளிதில் யூகிக்க இயலாத திரைக்கதை, நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பரிபூரண ஒத்துழைப்பு, ரசிகர்களை திரையரங்கிற்கு வரவழைக்கும் வகையில் வித்தியாசமான விளம்பர உத்தி, திரையலக பிரபலங்களின் பாரட்டு.. என பலவித அம்சங்களால் ‘மாயோன்’ திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றது. தமிழகம் முழுவதும் ‘மாயோன்’ திரையிடப்பட்ட திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேயிருக்கிறது.

மாயோன் விமர்சனம் 3.25/5.; மறையாத மர்மங்கள்

இதனால் படக்குழுவினர் உற்சாகமடைந்திருக்கின்றனர்.

எதிர்பார்த்ததை விட கூடுதல் வெற்றி, ‘மாயோன்’ திரைப்படத்திற்கு கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்த தயாரிப்பாளர், பட குழுவினரை அலுவலகத்திற்கு வரவழைத்து, வெற்றியைக் கேக் வெட்டி கொண்டாடினார்.

தமிழில் ‘மாயோன்’ திரைப்படத்திற்கு மாபெரும் வெற்றி கிடைத்ததால், ஜூலை ஏழாம் தேதியன்று தெலுங்கில் 350க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகிறது.

இதற்காக ஜுலை 1ஆம் தேதியன்று ஹைதராபாத்தில் நடைபெறும் விளம்பரப்படுத்தும் நிகழ்வில் தெலுங்கின் முன்னணி நட்சத்திரங்கள் கலந்துகொள்கிறார்கள்.

இவர்களுடன் ‘கட்டப்பா’ சத்யராஜ் உள்ளிட்ட ‘மாயோன்’ படக்குழுவினரும் கலந்துகொண்டு, தெலுங்கு ரசிகர்களுக்கு ‘மாயம் செய்யும் மணிவண்ணா..’வை அறிமுகப்படுத்துகிறார்கள்.

Sibiraj gifted gold chain to Maayon team

அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காமெடியன் வெங்கல் ராவ் ஹெல்த் அப்டேட்

அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காமெடியன் வெங்கல் ராவ் ஹெல்த் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வடிவேலுவுடன் இணைந்து 30-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர் வெங்கல் ராவ்.

இவர் ஸ்டண்ட் நடிகர் என்றாலும் பெரும்பாலும் காமெடியான மொட்டை வேடங்களில் தோன்றுவார்

இவர் ஆந்திராவில் விஜயவாடாவுக்கு அருகில் உள்ள கிராமத்தில் பிறந்தவர்.

இவர் சினிமாவுக்குள் ஒரு ஃபைட்டராக நுழைந்தவர். ஆனால் சண்டைக் காட்சியின்போது நடந்த விபத்தால் காமெடி நடிகராக மாற்றிக்கொண்டார்.

வாசு இயக்கி பிரபு நடித்த ‘கட்டுமரக்காரன்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

நடிகர் வடிவேலு சினிமாவிலிருந்து விலகியிருந்த காலத்தில் சினிமா வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தார்.

தற்போது வடிவேலு நடிக்கும் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தில் நடித்து வருகிறார் வெங்கல் ராவ்.

இந்த நிலையில், கல்லீரல் கோளாறு காரணமாக ஆந்திராவின் விஜயவாடாவில் உள்ள அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தற்போது அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த காமெடி நடிகர் வெஙகல் ராவ் நலமுடன் வீடு திரும்பினார்.

Health Update of Comedian Vengal Rao admitted to Government Hospital

கமல் ரஜினி விஜய் படங்களில் ஸ்டண்ட் நடிகராக நடித்தவரும் ஜாகுவார் தங்கத்தின் மாமனாருமான டி.எஸ்.ராஜா காலமானார்

கமல் ரஜினி விஜய் படங்களில் ஸ்டண்ட் நடிகராக நடித்தவரும் ஜாகுவார் தங்கத்தின் மாமனாருமான டி.எஸ்.ராஜா காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகரும் , சண்டைக் கலைஞரும், எம்.ஜி.ஆர். நகர் தி.மு.கவின் முன்னாள் வட்ட செயலாளருமான டி. எஸ்.ராஜா (வயது 88) உடல்நல குறைவால் இன்று காலை காலமானார்.

டி.எஸ். ராஜா பற்றிய குறிப்பு :- இவர்,காலம் சென்ற எம்.ஜி.ஆர்.அவர்களிடம் நீண்ட காலம் உடனிருந்தவர்.

கமல் , ரஜினி, விஜய், படங்களில் ஸ்டண்ட் நடிகராக நடித்தவர்.

என்.டி.ஆர். அமிதாப், ஜித்தேந்திரா, தர்மேந்திரா, பிரான். ரஞ்சித் ஆகியோருக்கு டூப் கலைஞராகவும் நடித்தவர்.

கலைஞர் மு.கருணாநிதி அவர்களிடம் அன்பு பாராட்டியவர்.

சென்னையில் எம்.ஜி.ஆர்.நகரின் 113வது வட்ட தி.மு.க.செயலாளராகவும் இருந்தவர்.

ஸ்டண்ட் யூனியன் துவக்குவதற்கு முனைப்பாக செயல்பட்டவர்.

ஜுனியர் ஆர்ட்டிஸ்ட் யூனியன் துவக்கிய முன்னோடிகளில் இவர் முதன்மையாக செயல்பட்டவர்.

அதிக திரைப்படங்களில் நடித்தவர்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் 32 வருடங்கள் செயற்குழு உறுப்பினராக பணியாற்றியவர்.

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தில் ( பெப்சி) செயலாளராகவும் இருந்தவர்.

நடிகரும், தயாரிப்பாளரும், கில்டு தலைவருமான ஜாகுவார் தங்கத்தின் மாமனரான இவரது இறுதி சடங்கு இன்று (30.6.2022 வியாழன்) மாலை 4 மணிக்கு
எண்:- 67,
அழகிரி தெரு
எம்.ஜி.ஆர்.நகர்
சென்னை 600078ல் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறுகிறது.

பின்னர்
நெசப்பாக்கத்தில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் 32 ஆண்டுகள் செயற்குழு உறுப்பினராக பணியாற்றிய சங்க முன்னோடியும், எம்.ஜி.ஆர். நகர் தி. மு.க. முன்னாள் வட்ட செயலாளரும், கில்டு தலைவர் ஜாகுவார் தங்கம் அவர்களின் மாமனாருமான மூத்த நடிகர், சண்டைக் கலைஞர் டி.எஸ்.ராஜா அவர்கள் இன்று காலை காலமானார்.

அவரது உடலுக்கு திமுக தலைமை நிலைய செயலாளரும் தென்னிந்திய நடிகர் சங்க துணைத் தலைவருமான பூச்சி எஸ்.முருகன் அவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினார்.

சென்னை மாநகராட்சி கணக்கு நிலைக்குழு தலைவரும் திமுக செயற்குழு உறுப்பினருமான க. தனசேகரன் உடன் இருந்தார்.

DS Raja father-in-law of Jaguar Thangam who played stunt actor in Kamal Rajini Vijay films has passed away

More Articles
Follows