முழுநேர அரசியல்வாதி ஆகல; ஆன்மிக பயணத்தில் அரசியல் கேள்விக்கு ரஜினி பதில்

In Pilgrimage tour I wont talk about Politics I Pray for Amithab ji says Rajiniசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்மையில் தன் அரசியல் பிரவேசத்தை அறிவித்தார்.

இதனை அடுத்து தனது மன்றங்களில் நிர்வாகிகளை நியமித்து வருகிறார்.

அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது… தலைவனுக்கான வெற்றிடம் உள்ளது. அதற்குதான் அரசியலுக்கு வருகிறேன். எம்ஜிஆர் கொடுத்த நல்லாட்சியை கொடுப்பேன் என்று பேசினார்.

இதனையடுத்து சில தினங்களுக்கு முன், தனது வழக்கமான ஆன்மிக பயணத்தை மேற்கொண்டு இருக்கிறார்.
ஹிமாச்சலில் அங்குள்ள பிரபலங்களை சந்தித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று உத்தரகாண்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது…

“அரசியல் தொடர்பான கேள்விகளுக்கு நான் தற்போது பதிலளிக்க விரும்பவில்லை.

கட்சி பெயரை அறிவிக்கவில்லை. நான் இன்னும் முழுநேர அரசியல்வாதி ஆகவில்லை.

ஆன்மிகப் பயணமாக இமயமலை வந்துள்ளேன். இது அரசியல் பயணம் கிடையாது.

குரங்கணி காட்டுத் தீ விபத்தில் உயிர் இழந்தவர்களுக்காக வருந்துகிறேன். இது குறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள அமிதாப்பச்சன் விரைவில் நலம்பெற பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்தார்.

In Pilgrimage tour I wont talk about Politics I Pray for Amithab ji says Rajini

Overall Rating : Not available

Latest Post