தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று (மே 15) ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்.
அதற்கான நிகழ்வு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.
இதற்கான விழாவில் இயக்குனர் எஸ்பி முத்துராமன் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார்.
அப்போது ரசிகர்களிடையே ரஜினிகாந்த் பேசியதாவது….
எஸ்பி முத்துராமனை சந்திக்கும் என் ரசிகர்கள் என்னை சந்திக்க ஆசைப்படுவதை அவரிடம் தெரிவித்துள்ளனர். அதன்படி இப்போது 12 ஆண்டுகளுக்கு பிறகு உங்களை சந்திக்கிறேன்.
நிறைய ரசிகர்கள் எனக்கு கடிதம் எழுதறாங்க. நாம எப்ப முன்னேறுறது? நமக்கு முன்னால பிறந்தவங்கள்லாம் கவுன்சிலர், மினிஸ்டர்னு கார்ல போறாங்களேன்னு பேட்டி கொடுக்கிறாங்க. ஆசைப்படறாங்க.
அவங்க ஆசை தப்பில்லை. அதை அரசியல் பதைவியை வச்சு பணம் சம்பாதிக்கணும்னு நினைக்கிறதை பார்த்தா, வருத்தப்படறதா, கோபப்படறதா, சிரிக்கிறதான்னு தெரியலை.
நான் அப்பவும் சொல்றேன், இப்பவும் சொல்றேன். அந்த ஆண்டவன் கையில்தான் என் வாழ்க்கை இருக்கு.
அவன் கையில நான் ஒரு கருவி. அவன், நடிகனா என்னை பயன்படுத்தறான். நான் நடிச்சுட்டிருக்கேன். நாளைக்கு என்னவாக பயன்படுத்தறானோ, அதுக்கு நியாயமா, உண்மையா இருப்பேன்.
இப்ப மக்களை மகிழ்விக்கணும். பண விஷயங்கள் அப்புறம்தான். அதே போல, என்ன பொறுப்பை கொடுத்தாலும் நியாயமா, சத்தியமா இருப்பேன். அது என்னன்னு எனக்கு தெரியாது. அது கடவுள் கையிலதான் இருக்கு.
அரசியல் ஆசை இருக்கிற என் ரசிகர்களுக்கு இப்பவே சொல்லிக்கிறேன். நான் அரசியலுக்கு வரலைன்னு சொன்னா ஏமாந்திடுவீங்க.
அப்படி அரசியலுக்கு வரவேண்டிய சூழல் ஏற்பட்டால், அந்த மாதிரி ஆட்களை கிட்ட கூட சேர்க்க மாட்டேன். நுழைய கூட விடமாட்டேன். இப்பவே ஒதுங்கிடுங்க. இவ்வாறு ரஜினிகாந்த் பரபரப்பாக பேசினார்.
If God allows me to enter Politics i will be honest says Rajinikanth