எனக்கு ஏற்கெனவே திருமணம் ஆகிவிட்டது.. சமந்தா ஓபன் டாக்

எனக்கு ஏற்கெனவே திருமணம் ஆகிவிட்டது.. சமந்தா ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

I already got married Actress Samantha open talkநடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாக சைதன்யா இருவரும் காதலித்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரி 29ஆம் தேதி இரு வீட்டார் சம்மதத்துடன் நிச்சயத்தார்த்தம் செய்துக் கொண்டனர்.

இவர்களின் திருமணம் வருகிற அக்டோபர் 6-ம் தேதி கோவாவில் நடைபெறவுள்ளது.

இதற்கு திரையுலகினர் யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை.

இதில் இருவரின் குடும்பத்தினர் சுமார் 200 பேர் மட்டுமே கலந்து கொள்ளவுள்ளதாகவும் திரையுலகினர் யாருக்கும் அழைப்பு விடுவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் தன் காதல் திருமணம் பற்றி சமந்தா கூறியதாவது…

நாங்கள் நடித்த முதல் பட சூட்டிங்கில் நாக சைதன்யாவை பார்த்த உடனே காதலிக்க ஆரம்பித்து விட்டேன்.

இன்னும் எங்களுக்கு சட்டப்படி திருமணம் ஆகவில்லை என்றாலும் அவருடன் மனதளவில் திருமணம் ஆகிவிட்டது. நான் அவரின் மனைவியாகிவிட்டேன்.

திருமணத்திற்கு பிறகும் நான் நானாகவே இருக்கலாம் என புகுந்த வீட்டில் சம்மததித்து இருப்பதால் நான் மகிழ்ச்சியாகவே இருக்கிறேன் என சமந்தா தெரிவித்துள்ளார்.

திருமணத்தை முடித்து விட்டு தாங்கள் ஒப்பந்தமாகியுள்ள படங்களை முடித்துவிட்டு தேன்நிலவு செல்ல திட்டமிட்டு இருக்கிறார்களாம்.

I already got married Actress Samantha open talk

அஜித்தும் விஜய்சேதுபதியும் அப்படித்தான்… சிலிர்க்கும் சீனுராமசாமி

அஜித்தும் விஜய்சேதுபதியும் அப்படித்தான்… சிலிர்க்கும் சீனுராமசாமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Seenu Ramasamy compared Ajith and Vijay Sethupathiசீனுராமசாமி இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நாயகனாக அறிமுகமானார் விஜய்சேதுபதி.

அதனைத் தொடர்ந்து தர்மதுரை, இடம்பொருள் ஏவல் உள்ளிட்ட படங்களிலும் இருவரும் இணைந்து பணிபுரிந்தனர்.

விஜய்சேதுபதியின் ஆழமான நட்பு கொண்டவர் என்ற முறையில் அவருக்கு மக்கள் செல்வன் என்ற பட்டத்தையும் அளித்தார் சீனுராமசாமி.

தற்போது மாமனிதன் என்ற படத்திலும் இருவரும் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் விஜய் சேதுபதி பற்றி தனது ட்விட்டர், மற்றும் முகநூல் பக்கங்களில் தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

அதில் விஜய்சேதுபதி மீன்குழம்பு சோற்றை சீனுராமசாமிக்கு ஊட்டிவிடும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

“கவளம் பெற்றேன். மூன்று கவளங்கல் கூடுதலாக ஊட்டியும் விடப்பட்டது. சட்டென்று சார் ஆ.. காட்டுங்க என்றான். இது தன்னியல்பில் வருவது.

உள்ளத்தில் எளியவனே இதை செய்ய முடியும். நான் அதை சேதுவிடம் கற்க தொடங்கி நாளாச்சு’’ என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் “பிறருக்கு உணவிட்டு பரிமாறி மகிழ்ச்சியடைபவர்களில் திரு,அஜித், விஜய் சேதுபதியை பார்த்து நெகிழ்ச்சியடைகிறேன்.

அது தனித்து வந்தவர்களின் மனிதாபிமானம்’ என சீனுராமசாமி பதிவிட்டுள்ளார்.

Seenu Ramasamy compared Ajith and Vijay Sethupathi

நிஜமாகவே விஜய் ரசிகர்களை மெர்சலாக்கும் ஆடியோ விழா

நிஜமாகவே விஜய் ரசிகர்களை மெர்சலாக்கும் ஆடியோ விழா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mersal vijay artஏஆர்.ரஹ்மான்-விஜய்-அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள மெர்சல் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இப்படத்தின் சிங்கிள் ஆளப்போறான் தமிழன் இந்தியளவில் முதல் இடத்தை பிடித்துள்ளது என்பதை பார்த்தோம்.

இதன் மற்ற பாடல்கள் வருகிற ஆகஸ்ட் 20ஆம் தேதி நேரு ஸ்டேடியத்தில் மிகப்பிரம்மாண்டமாக வெளியிட உள்ளனர்.

இதில் ரஜினி, கமல் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துக் கொண்டு வாழ்த்துவார்கள் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் விஜய் ரசிகர்களை மெர்சலாக்கும் வகையில் இந்த நிகழ்ச்சியை நேரடியாக ஒளிப்பரப்பாக இருக்கிறார்கள் என தெரிய வந்துள்ளது.

மெர்சல் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றியுள்ள ஜீடிவி, மற்றும் சன் டிவி, சன் நியூஸ் மற்றும் யுடியூப் ஆகிய நான்கிலும் இதை ஒளிப்பரப்பாக உள்ளனர்.

Mersal audio launch will have live telecast in 3 TV channels and Youtube

தமிழகம் நல்லா இருக்கனும்; என்னுடன் சேர துணிச்சல் இருக்கா.? – கமல்

தமிழகம் நல்லா இருக்கனும்; என்னுடன் சேர துணிச்சல் இருக்கா.? – கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal speechகடந்த சில மாதங்களாக தமிழக அரசை மறைமுகமாக விமர்சனம் செய்து வந்தார் உலகநாயகன் கமல்ஹாசன்.

இதுதொடர்பான தனது கருத்துக்களை அறிக்கை மூலமாகவும் ட்விட்டரிலும் தெரிவித்து வந்தார்.

இந்த முறை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேரடியாகவே விமர்சித்துள்ளார்.

தன் ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது…

“ஒரு மாநிலத்தில் ஊழல், துயர சம்பவங்கள் நிகழ்ந்தால் மாநில முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றால், தமிழகத்தில் ஏராளமான குற்றங்கள் நடந்தும் முதல்வரை எந்த கட்சிகளும் ராஜினாமா செய்ய வலியுறுத்தாதது ஏன்?.” என்று கேட்டுள்ளார்.

“தமிழ்நாடு சிறப்பாக இருக்க வேண்டும் என்பதே என் இலக்கு. எனது குரலுக்கு வலு சேர்க்க யாருக்கு துணிச்சல் உள்ளது. திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தமிழ்நாட்டை மேம்படுத்த கருவியாக உதவ வேண்டும். அந்த கருவிகள் சரியாக செயல்படவில்லை என்றால், மாற்று கருவியை தேடவேண்டும்”

“நாம் ஊழலில் இருந்து சுதந்திரம் பெறாத வரையில், இன்றும் நாம் அடிமைகளே. புதிய சுதந்திரப் போராட்டத்திற்கு சூளுரைக்கத் துணிவு உள்ளவர் வாருங்கள்…. வெல்வோம்” எனவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Kamal Haasan‏Verified account @ikamalhaasan

சுதந்திரம் ஊழலலிருந்து நாம் பெறாத வரையில் இன்றும் நாம் அடிமைகளே. புதிய சுதந்திரப் போராட்டத்திற்க்கு சூளுரைக்கத் துணிவுள்ளவர் வாரும் வெல்வோம்

Kamal asking support from public to stand against corruption

kamal twitter

தன் அடுத்த பட டீசரை இணையத்தில் வெளியிட்டார் தனுஷ்

தன் அடுத்த பட டீசரை இணையத்தில் வெளியிட்டார் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

tharangam dhanush productionகோலிவுட், பாலிவுட் கலக்கிய தனுஷ் தற்போது ஹாலிவுட்டிலும் காலடி எடுத்து வைத்துள்ளார்.

இதனிடையில் கேரளாவின் மல்லுவுட்டில் தன் பயணத்தை ஆரம்பித்துள்ளார்.

ஆனால் இதில் நடிகராக இல்லாமல் தன் வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பாக தயாரிப்பாளராக நுழைந்துள்ளார்.

டோமினிக் இயக்கியுள்ள இப்படத்திற்கு தரங்கம் என பெயரிட்டுள்ளனர்.

என்னு நிண்டே மொய்தீன்’, ‘சார்லி’, ‘ஒரு மெக்சிகன் அபரதா’ ஆகிய படங்களில் நடித்த டோவினோ தாமஸ் நாயகனாக நடித்து வருகிறார்.

இதன் பர்ஸ்ட் லுக் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் சற்றுமுன் இதன் டீசரை தன் ட்விட்டரில் வெளியிட்டார் தனுஷ்.

Dhanush released his Malayalam debut Tharangam movie teaser

 

 

அறம் செய்து பழகு தலைப்பை மாற்றி அறிவித்தார் சுசீந்திரன் அப்பா

அறம் செய்து பழகு தலைப்பை மாற்றி அறிவித்தார் சுசீந்திரன் அப்பா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sundeep nenjil thunivirundhalமாவீரன் கிட்டு படத்தை தொடர்ந்து தன் அடுத்த படத்திற்கு அறம் செய்து பழகு என பெயரிட்டு சூட்டிங்கை நடத்தினார் சுசீந்திரன்.

இத்திரைப்படத்தை “அன்னை ஃபிலிம் பேக்டரி” என்ற நிறுவனம் மூலம் ஆண்டனி தயாரிக்கிறார்.

இதில் சந்தீப், விக்ராந்த், சூரி, ஹரிஷ் உத்தமன், அப்புக்குட்டி, அருள்தாஸ், துளசி, சாதிகா உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

இதில் சந்தீப்க்கு ஜோடியாக “கிருஷ்ணகாடி வீர பிரேமாகாதா” என்ற தெலுங்கு படத்தில் நானிக்கு ஜோடியாக நடித்த மெஹரீன் (Mehreen) இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார்.

ஒளிப்பதிவை லஷ்மண் கவனிக்க, இமான் இசையைமைத்து வருகிறார்.

இந்நிலையில் இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு இப்படத்தின் தலைப்பை மாற்ற உள்ளதாக அறிவித்தார் சுசீந்திரன்.

அதன்படி சற்றுமுன் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் தன் தந்தை நல்லுசாமி படத் தலைப்பை அறிவிப்பார் என்று தெரிவித்தார்.

இப்படத்திற்கு நெஞ்சில் துணிவிருந்தால் என்று புதிய தலைப்பை வைத்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்று வருகிறது.

Suseenthiran dad Nallusamy changed Aram Seidhu Pazhagu title

nenjil thunivirundhal

More Articles
Follows