தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கூடல் நகர், தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை உள்ளிட்ட தரமான படங்களை இயக்கியவர் சீனுராமசாமி.
இதனிடையில் விஜய்சேதுபதி, விஷ்னு, நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரை வைத்து இடம் பொருள் ஏவல் என்ற படத்தை இயக்கியிருந்தார்.
இயக்குனர் லிங்குசாமி தயாரித்த இப்படம் தயாராகி ஒரு வருடம் ஆகிவிட்ட போதிலும் இன்னும் திரைக்கு வரவில்லை.
எனவே, இந்தப்படம் எப்போது திரைக்கு வரும் என ரசிகர் ஒருவர் சீனுராமசாமியிடம் கேட்டுள்ளார்.
அதற்கு ட்விட்டரில் இப்படி பதில் அளித்துள்ளார் சீனுராமசாமி. (கீழே பார்க்கவும்)
Seenu RamasamyVerified account @seenuramasamy
Seenu Ramasamy Retweeted s karthik prasanna
இடம் பொருள் ஏவல் படம் வெளியே வர வேண்டுமென்றால் ‘உத்தமவில்லன்’ திரு,கமல் அய்யாவும் அஞ்சான் திரு,சூர்யாவும் மனது வைத்தால் ஒருவேளை வெளிவரலாம்.
உத்தமவில்லன் மற்றும் அஞ்சான் ஆகிய படங்களை லிங்குசாமி தயாரித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.