தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் இணைந்து நடித்து வரும் படம் ’ஆர்.ஆர்.ஆர்’.
இதில் வில்லனாக சமுத்திரக்கனி நடித்து வருகிறார்.
டிவிவி தானய்யா என்பவர் சுமார் ரூ. 350 கோடியில் இந்த படத்தை தயாரித்து வருகிறார்.
முக்கிய கேரக்டரில் அஜய்தேவ்கன், அலியா பட் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஹாலிவுட் நடிகர்களான ரே ஸ்டீவென்சன்னும், அலிசன்டூட்டியும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.
மேலும் ஹாலிவுட் நடிகை ஓலிவா மோரிஸ், ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.
அடுத்த ஆண்டு ஜூலை 30-ந் தேதி உலகம் முழுவதும் 10 மொழிகளில் வெளியாகவுள்ளது.