கட் அவுட் வேண்டாம்; பெற்றோருக்கு டிரெஸ் வாங்கி கொடுங்க.. : சிம்பு

Gift new dress to your parents instead of my cut outs says Simbuசுந்தர்.சி இயக்கத்தில் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் சிம்பு.

சிம்பு உடன் மேகா ஆகாஷ், கேத்ரீன் தெரசா, மஹத், ரோபோ சங்கர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடிக்க, ஹிப் ஹாப் தமிழா இசையமைத்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

வருகிற பிப்ரவரி 1-ந்தேதி படம் ரிலீஸாக உள்ளது.

இந்நிலையில் ஒரு வீடியோ பதிவில் சில வேண்டுகோள்களை விடுத்துள்ளார் நடிகர் சிம்பு.

அதில், “வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தின் ஷூட்டிங் முடிந்து விட்டது. விரைவில் படம் திரைக்கு வருகிறது.

பிளாக்கில் டிக்கெட் வாங்கி படம் பார்க்க வேண்டாம். தியேட்டரில் என்ன கட்டணம் வசூலிக்கிறார்களோ அதை கொடுத்து படத்தை பார்த்தால் போதும்.

அதுபோல் கட்-அவுட் வைக்கவோ, பால் அபிஷேகம் செய்ய வேண்டாம். அது முக்கியம் கிடையாது.

அதற்குப் பதிலாக உங்கள் பெற்றோருக்கு உடை எடுத்துத் தரவும். அதைப் படமெடுத்து இணையத்தில் பகிருங்கள். எனக்கு அது போதும். ” என ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சிம்புவின் இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

Gift new dress to your parents instead of my cut outs says Simbu

Overall Rating : Not available

Related News

லைகா தயாரிக்கும் `வந்தா ராஜாவாதான் வருவேன்'…
...Read More
சுந்தர்.சி. இயக்கத்தில் உருவாகும் வந்தா ராஜாவாதான்…
...Read More
சிம்பு நடிப்பில் உருவாகும் 'வந்தா ராஜாவாதான்…
...Read More

Latest Post