விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்திற்கும் பார்ட் 2 வருகிறதாம்

Gautham Menon says Dhruva Natchathiram will have its sequelதமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்களின் படங்களுக்கு மட்டுமே பார்ட் 1 மற்றும் பார்ட் 2 என தொடர்ச்சி படங்கள் வெளியாகிறது.

லாரன்ஸின் காஞ்சனா, சூர்யாவின் சிங்கம் ஆகிய படங்களின் தொடர்ச்சி வெளியானது.

விரைவில் ரஜினியின் எந்திரன், கமலின் விஸ்வரூபம் ஆகிய படங்களின் இரண்டாம் பாகம் வெளியாகவுள்ளது.

இவர்களைத் தொடர்ந்து விக்ரமின் சாமி படத்தின் இரண்டாம் பாகம் சாமி ஸ்கொயர் என்ற பெயரில் தயாராகி வருகிறது.

தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம், ரீது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஸ், டிடி, ராதிகா உள்ளிட்ட பலரும் துருவ நட்சத்திரம் என்ற படத்தில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் துருவ நட்சத்திரம் படத்தின் இரண்டாம் பாகமும் வெளிவரும், அப்படி ஒரு எதிர்பார்ப்பை பார்ட் 1 உருவாக்கும் என ஒரு பேட்டியில் இயக்குனர் தெரிவித்துள்ளாராம்.

Gautham Menon says Dhruva Natchathiram will have its sequel

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Related News

கௌதம் மேனன் இயக்கத்தில்் தனுஷின் எனை…
...Read More
மலையாளத்தில் பிரபலமான நடிகர் துல்கர் சல்மான்…
...Read More
தமிழ் சினிமாவில் ஸ்டைலிஷ் இயக்குனர் என்றால்…
...Read More

Latest Post