ரஜினி வில்லனுடன் கை கோர்க்கும் கணேஷ் வெங்கட ராமன்

ரஜினி வில்லனுடன் கை கோர்க்கும் கணேஷ் வெங்கட ராமன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ganesh Venkatram joins hands with Akshay Kumarநடிகர் கணேஷ் வெங்கட் ராமன் ஹார்பிக்கின் “ சொச் பாரத் ” பிரச்சாரத்தின் தென்னிந்திய விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இப்பிரச்சாரத்தின் வடஇந்திய விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ள அக்சய் குமாருடன் கைகோர்த்துள்ளார் கணேஷ் வெங்கட் ராமன்.

நடிகர் கணேஷ் வெங்கடராமன் தென்னிந்தியா முழுவதும் அனைவருக்கும் தெரிந்த புகழ்பெற்ற நடிகர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகப்பெரிய அளவில் மக்களிடம் நற்பெயரும், புகழும் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அக்சய் மற்றும் கணேஷ் வெங்கட்ராமன் மும்பையில் இரண்டு விளம்பர படங்களின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்கள். இதை பற்றி நாம் அவரிடம் கேட்டபோது, “ நான் அக்ஷய் குமாரின் மிகப்பெரிய ரசிகன்.

இப்போதும் அவர் மது அருந்தாமல், எந்த தீய பழக்கங்களும் இல்லாமல், உடலை கட்டுப்பாட்டோடு வைத்துள்ளது. ஆச்சரியம் அளிக்கிறது.

அவரோடு சேர்ந்து பணியாற்றியது மறக்க முடியாத ஓர் அனுபவம். நான் தமிழ் படப்பிடிப்பிலும் அவர் ஹிந்தி படப்பிடிப்பிலும் கலந்துக்கொண்டோம்.

தூய்மை இந்தியா திட்டத்தின் முதல் படி நமது வீட்டை நாம் சுத்தமாக வைப்பதிலிருந்து தான் துவங்குகிறது. இந்திய அரசாங்கத்துடன் “ ஹார்பிக் “ நிறுவனம் இந்த திட்டத்துக்காக கை கோர்த்துள்ளது சிறப்பானதாகும்.

தமிழில் இரண்டு படங்களிலும், மலையாளத்தில் “ மை ஸ்டோரி“ எனும் படத்தில் ப்ரிதிவி ராஜ், பார்வதி உடன் சிறப்பு தோற்றத்தில் கணேஷ் வெங்கடராமன் நடித்துள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள 2.0 படத்தில் ரஜினிக்கு வில்லனாக அக்சய் குமார் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Ganesh Venkatram joins hands with Akshay Kumar

விஜய் ரசிகனுக்கு வேற என்ன வேண்டும்..? டிராஃபிக் ராமசாமி டைரக்டர் விக்கி பேட்டி

விஜய் ரசிகனுக்கு வேற என்ன வேண்டும்..? டிராஃபிக் ராமசாமி டைரக்டர் விக்கி பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Vicky talks about his Traffic Ramasamy release on Vijay Birthdayசமுதாயத்துக்கும், சட்டத்துக்கும் தீங்கு செய்தவர்களை திரைப்படம் மூலமாக சுட்டி காட்டி புரட்சி இயக்குனர் என்று பெயரெடுத்தவர் எஸ்.ஏ.சி .

இவர் டிராஃபிக் ராமசாமியாக நடிக்கிறார் என்பதிலிருந்து ‘டிராஃபிக் ராமசாமி’ திரைப்படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

சமீபத்தில் டிராஃபிக் ராமசாமி திரைப்படத்தை பிரத்யேகமாக பார்த்த திரைப்பட வினியோகஸ்தர்கள் படத்தின் இறுதியில் எழுந்து நின்று கைதட்டியது படக்குழுவினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதை பற்றி இயக்குனர் விக்கி கூறும்போது…

“வினியோகஸ்தர்கள் ஒரு படத்தை ப்ரிவியூ அரங்கில் பார்த்துவிட்டு கைதட்டி வரவேற்பது இது முதல் முறை என்று எண்ணுகிறேன்.

இப்பாராட்டு சுயநலமில்லாத ஒரு உண்மையான போராளியான டிராஃபிக் ராமசாமியின் துணிச்சலான வாழ்விற்கு கிடைத்ததாகவே நாங்கள் கருதுகிறோம்.

தயாரிப்பாளர் சங்கம் இப்பட வெளியீட்டு தேதியாக ஜூன் 22 கொடுத்துள்ளதால் கூடுதல் பூரிப்பில் உள்ளோம்.

“விஜய் அண்ணனுடைய ரசிகன் நான். அவரை அருகிலிருந்து அடிக்கடி பார்க்கலாம் என்பதற்காகவே இயக்குநர் எஸ் ஏ சி அவர்களிடம் உதவி இயக்குநராக சேர்ந்தேன்.

அவர் தந்தையை வைத்து நான் இயக்கியுள்ள ”டிராஃபிக் ராமசாமி” படம் தளபதியின் பிறந்த நாளில் வெளியாவதற்கு இறைவனுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இதை விட ஒரு ரசிகனுக்கு என்ன வேண்டும்”.

படத்தில் ரோகிணி, பிரகாஷ்ராஜ் , சீமான் ,குஷ்பூ, ஆர்.கே.சுரேஷ், அம்பிகா, உபாசனா, கஸ்தூரி , மனோபாலா, மதன் பாப், லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி, மோகன்ராம், சேத்தன் , தரணி, அம்மு ராமச்சந்திரன், பசி சத்யா என்று பலரும் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில் விஜய் ஆண்டனியுடன் மற்றுமொரு பிரபலநடிகரும் சிறப்பு வேடத்தில் வருகிறார்.

படத்திற்கு குகன் எஸ். பழனி, ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

இசை ‘இருட்டறையில் முரட்டு குத்து’ புகழ் பாலமுரளி பாலு. எடிட்டிங் பிரபாகர், கலை ஏ.வனராஜ்,சண்டைக் காட்சி அன்பறிவு, கிரீன் சிக்னல் இப்படத்தை தயாரித்துள்ளது.

Director Vicky talks about his Traffic Ramasamy release on Vijay Birthday

Traffic Ramasamy stills

 

பாலாஜி சக்திவேல் இயக்கியுள்ள யார் இவர்கள்? படத்தின் கதைக்கரு

பாலாஜி சக்திவேல் இயக்கியுள்ள யார் இவர்கள்? படத்தின் கதைக்கரு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Balaji Sakthivels new project Yaar Ivargal news updatesகாதல் பட இயக்குனர் பாலாஜி சக்திவேல் ரா ரா ராஜ்குமார் என்ற படத்தை இயக்கியிருந்தார்.

ஆனால் அப்பட தயாரிப்பாளர் லிங்குசாமிக்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் அந்தப் படம் வெளிவரவில்லை.

இந்நிலையில் ஒளிப்பதிவாளர் விஜய்மில்டன், தயாரிப்பில் பாலாஜி சக்திவேல் இயக்கியுள்ள படம் யார் இவர்கள்?.
விஜய் மில்டனுடன் இணைந்து இசக்கி துரை தயாரித்து, ஹீரோவாகவும் நடித்துள்ளார்.

இசக்கி துரையுடன் அஜய், சுபிக்ஷா, பாண்டியன், ராம், விஜயன், அபிராமி, பத்ரி, குரு ரமேஷ், சுவைதர், முத்து, சுரேஷ், கஜபதி, குமரப்பா மற்றும் வினோதினி ஆகியோர் நடித்துள்ளனர்.

ஜாவத் ரியாஸ் இசையமைக்க விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இதன் சூட்டிங் அண்மையில் நிறைவு பெற்றுள்ளது.

கொலை செய்யும் அளவுக்கு கோபப்படும் ஒருவன், கோபமே இல்லாமல் கொலை செய்யும் ஒருவன். இவர்கள் தான் நாயகர்கள்.

இவர்களுக்குள் நடக்கும் சம்பவங்களை விறுவிறுப்பாக ஜனரஞ்சகமான அம்சங்களுடன் உருவாக்கி உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

அண்மையில் இதன் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Balaji Sakthivels new project Yaar Ivargal news updates

எதிர்பார்த்த வசூலை தராத காலா; மெர்சல்-கபாலியை முந்த முடியாமல் தவிப்பு

எதிர்பார்த்த வசூலை தராத காலா; மெர்சல்-கபாலியை முந்த முடியாமல் தவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kaala couldnt beat Mersal and Kabalis box office collectionரஜினிகாந்த் நடிப்பில் உருவான காலா திரைப்படத்தை ரஞ்சித் இயக்க, தனுஷ் தயாரித்திருந்தார்.

அடித்தட்டு மக்களின் நில உரிமைக்காக போராடும் தாதாவாக இதில் ரஜினிகாந்த் நடித்திருந்தார்.

இதில் ரஜினியுடன் நடித்திருந்த வில்லன் நானா படேகர், ஹீமா குரேஷி, ஈஸ்வரி ராவ், சமுத்திரக்கனி, திலீபன், அஞ்சலி பாட்டீல் உள்ளிட்டவர்களுக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

தமிழத்தில் காலா படம் முதல் நாளில் 15 கோடி ரூபாய் வசூலாகி இருப்பதாகவும், சென்னையில் மட்டும் ரூ. 1.76 கோடி வசூலாகி இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

இது ரஜினியின் கபாலி படத்தின் முதல் நாள் வசூலை விடக் குறைவு தான்.

கபாலி முதல் நாளில் ரூ. 21.5 கோடியை வசூலித்திருந்தது. ஆனால் விஜய்யின் மெர்சல் ரூ. 22.5 கோடியுடன் முதலிடத்தில் தற்போது வரை உள்ளது.

அதேநேரத்தில் அமெரிக்காவில் கபாலி படம் முதல் நாள் ப்ரீமியர் காட்சியிலேயே 10 லட்சம் வசூலை தாண்டியிருந்த நிலையில், காலா படம் 2 நாட்களில் 10 லட்சம் வசூலை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க வசூலில் கபாலி ரூ. 40 லட்சம் வசூலுடன் முதல் இடத்தை பிடித்திருக்கிறது.

இந்த நிலையில், காலா வசூல், கபாலி வசூலை முந்துமா என்பது கேள்விக்குள்ளாகியுள்ளது.

Kaala couldnt beat Mersal and Kabalis box office collection

தெலுங்கு திரையுலகையும் தெறிக்க விடும் விஷால்

தெலுங்கு திரையுலகையும் தெறிக்க விடும் விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Irumbu Thirai Telugu version box office collection reportவிஷால் தயாரித்து நடித்த இரும்புத்திரை படம் அண்மையில் வெளியானது.

அறிமுக இயக்குநர் மித்ரன் இயக்கிய இப்படத்தில் நாயகியாக சமந்தா நடிக்க, வில்லனாக அர்ஜூன் நடித்திருந்தார்.
தமிழகத்தில் இப்படம் நல்ல வசூலை ஈட்டி தந்தது.

எனவே தெலுங்கில் அபிமன்யுடு என்ற பெயரில் டப் செய்து வெளியிட்டனர்.

அங்கும் நல்ல வரவேற்பை பெற்றது.

இதுவரை அங்கு 12 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

இனிவரும் நாட்களில் இந்த வசூல் இன்னும் அதிகரிக்கும் எனவும் தெரிகிறது.

கிட்டதட்ட நேரடி தெலுங்கு படங்களுக்கு நிகரான வசூலை விஷால் அங்கு பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Irumbu Thirai Telugu version box office collection report

காலா ஜீப்பை கிப்டாக கொடுத்தார்; சொன்னதை செய்துக் காட்டிய தனுஷ்!

காலா ஜீப்பை கிப்டாக கொடுத்தார்; சொன்னதை செய்துக் காட்டிய தனுஷ்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush gifted Kaala Jeep to Mahindra companyரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படம் நேற்று முன் தினம் வெளியானது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியான போது, அந்த டிசைனில் மஹிந்திரா ஜீப்பில் அமர்ந்தபடி போஸ் கொடுத்திருந்தார் ரஜினிகாந்த்.

அப்போதே அந்த ஜீப்பை தனக்கு தருமாறு மஹிந்திரா நிறுவனத்தின் உரிமையாளர் ஆனந்த் மஹிந்திரா தன் டுவிட்டர் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

எனவே காலா தயாரிப்பாளரான நடிகர் தனுஷூம் சூட்டிங் முடிந்தவுடன் நிச்சயம் தருவதாக ரிப்ளை செய்திருந்தார்.

தற்போது காலா ரிலீஸானதை முன்னிட்டு அந்த மஹிந்திரா ஜீப்பை, அந்நிறுவனத்தின் உரிமையாளருக்கே பரிசாக கொடுத்துள்ளார் தனுஷ்.

அதையடுத்து ஆனந்த் மஹிந்திரா அவர்கள் நடிகர் தனுசுக்கு டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.

Dhanush gifted Kaala Jeep to Mahindra company

Remember I wanted the Thar used for the poster shot of for our museum?Well obliged & it’s safe at in Chennai.I asked our folks to strike a Thalaivar pose & look what fun they had!(Bala,the guy in the lungi is now known as ‘KaalaBala’)
kaala thar mahindra
More Articles
Follows