தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்சய்குமார், எமிஜாக்சன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 2.0,
ரூ.543 கோடியில் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்திய சினிமாவிலேயே இந்த பட்ஜெட்டில் தயாராகும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தை உலகமெங்கும் நவம்பர் 29ந் தேதி திரையிட உள்ளனர்.
இதில் இடம்பெற்றுள்ள இந்திர லோகத்து சுந்தரி என்ற பாடல் வீடியோ கடந்த 24ந் தேதி வெளியானது.
இப்பாடலை மட்டும் 10 நாட்கள் 4 பிரமாண்ட செட்டில் படமாக்கியிருக்கிறார்களாம்.
இந்த பாடலை மட்டும் படமாக்க ரூ. 20 கோடி வரை செலவு செய்துள்ளதாம் லைகா.
உலகளவில் இவ்வளவு பட்ஜெட்டில் இதுவரை எந்தவொரு பாடலும் படமாக்கப்படவில்லை என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.