தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
உலகெங்கிலும் தமிழ் நடிகர் ரஜினிகாந்துக்கு ரசிகர்கள் உள்ளனர்.
இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமாக கருதப்படும் ரஜினிக்கு எளிமையான மனிதர் என்ற நல்ல பெயர் உண்டு.
இவரது பெயரில் சமூக வலைத்தளங்களில் நிறைய பக்கங்கள் செயல்பட்டு வருகின்றனர்.
இதில் ஒரு சில பக்கங்கள் ரஜினி பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் ரஜினிகாந்த் ஃபவுண்டேஷன் என்ற போலி முகநூல் பக்கத்தை தொடங்கி சிலர் பணமோசடி செய்துள்ளனர்.
எனவே இதனையடுத்து ரஜினிகாந்த் ஃபவுண்டேஷன் அறங்காவலர் சிவராமகிருஷ்ணன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
அதில்.. ரூ.2 கோடி வசூல் செய்து 200 பேர் குலுக்கல் முறையில் பரிசு வழங்குவதாக பண மோசடி செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
Fraud case in the name of Rajinikanth foundation