‘தலைவா அரசியலுக்கு வா…’ சென்னையில் கூடிய ரஜினி ரசிகர்கள் கோஷம்

‘தலைவா அரசியலுக்கு வா…’ சென்னையில் கூடிய ரஜினி ரசிகர்கள் கோஷம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini voteஓரிரு தினங்களுக்கு முன், மலேசியா பிரதமர் நஜிம் ரசாக் சென்னை வந்திருந்தார்.

பிரதமரை சந்தித்தபின் பத்திரிகையாளர்களை சந்தித்தார் ரஜினி.

அப்போது ஏப்ரல் 2ஆம் தேதி தன் ரசிகர்கள் மன்ற நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளதை உறுதி செய்தார்.

இந்நிலையில் இன்று கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் ஒன்று கூடினர்.

அக்கூட்டத்தில், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதி ரசிகர்கள் ஏப்ரல் 12ஆம் தேதி முதல் ஏப்ரல் 17ஆம் தேதி வரை ரஜினியை சந்திக்க உள்ளது பற்றியும், எந்தெந்த தேதிகளில் சந்திப்பது குறித்து ஆலோசித்தனர்.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு ரஜினியும் வருவார் என சில தகவல்கள் வந்ததை அடுத்து, நூற்றுக்கணக்கான ரசிகர்கள், மண்டபத்தின் முன்பு கூடினர்.

தலைவா, அரசியலுக்கு வா என்று அவர்கள் கோஷம்மிட்ட படி இருந்தனர்.

ஆனால் இறுதிவரை அங்கு ரஜினி வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Fans requesting Rajinikanth to enter in politics

 

 

தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் ரஜினி-கமல் வாக்களித்தனர்

தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் ரஜினி-கமல் வாக்களித்தனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini Kamalசென்னை அண்ணா நகரில் உள்ள கந்தசாமி நாயுடு கல்லூரி வளாகத்தில் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் தலைவர், துணைத்தலைவர், செயலாளர், பொருளார் உட்பட 27 பதவிகளுக்கு நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.ராஜேஷ்வரன் தலைமையில் இத்தேர்தல் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இதில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், ராதாரவி, ராதிகா, குஷ்பூ உள்ளிட்டவர்கள் வாக்களித்தனர்.

இன்று மாலை 4 மணி வரை இத்தேர்தல் நடைபெறும்.

மாலை 6 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு உடனடியாக முடிவுகள் அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கமல்ஹாசன் ஏற்கெனவே விஷால் தலைமையிலான அணிக்கு ஆதரவு அளித்திருந்தார் இங்கே கவனிக்கத்தக்கது.

Rajini and Kamal casts his vote in Tamil Film Producer Council Election

‘பிஸினஸ் தெரியாம படமெடுக்காதீங்க…’ யாகன் விழாவில் ஜேஎஸ்.கே சதீஷ் பேச்சு

‘பிஸினஸ் தெரியாம படமெடுக்காதீங்க…’ யாகன் விழாவில் ஜேஎஸ்.கே சதீஷ் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

yaagan movie audio launchமாப்பனார் புரொடக்ஷன் சார்பில் யோகராஜா சின்னத்தம்பி தயாரித்துள்ள படம் ‘யாகன்’.

அறிமுகநாயகன் சஜன், அஞ்சனா கீர்த்தி நடித்துள்ளனர். வினோத் தங்கவேல் இயக்கியுள்ளார்.

நிரோ பிரபாகரன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா இன்று சென்னையில் நடைபெற்றது.

பாடல்கனை தயாரிப்பாளர்கள் ‘ஜே.எஸ்.கே’ சதீஷ் குமார் மற்றும் சுரேஷ் காமாட்சி ஆகியோர் வெளியிட்டனர். நடிகை நமீதா பெற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் ‘ஜே.எஸ்.கே’ சதீஷ்குமார் பேசும் போது…

“தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நடைபெறவுள்ள இந்த பரபரப்பான சூழலில் என்னை விழாவுக்கு அழைத்த போது தயாரிப்பாளர் யார் என்று கேட்டேன். புதியவர் என்றார்கள்.

அப்படியென்றால் முதல் வேலையாகக் கலந்து கொள்கிறேன் என்று கூறினேன். ஏனென்றால் இதுவரை 18 படங்கள் தயாரித்து இருக்கிறேன் நானும் ஒரு காலத்தில் புதிய தயாரிப்பாளர்தான்.

இந்தப் படத்தில் பாடல் எழுதியுள்ள நா. முத்துக்குமார் இரண்டு தேசிய விருதுகள் பெற்ற போது நானும் அருகில் இருந்திருக்கிறேன் என்பதில் எனக்கு கர்வம் உண்டு ,பெருமையும் உண்டு.

‘தங்கமீன்கள்’ படத்தில் அவர் எழுதியுள்ள ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ என்னை வியாபாரத்தில் சிந்திக்க வைத்த பாடல்.

சினிமாவில் வியாபாரம் தெரியாமல் நிறைய தவறுகள் செய்கிறோம். இனி அதைச் செய்யக் கூடாது. இனிமேல் வியாபாரம் தெரியாமல் படமெடுக்க வரக் கூடாது.

‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ என்கிற ஒரு பாடல் மூலம் மட்டும் ஒன்றேகால் கோடி ரூபாய் வந்தது. ‘ரம்மி’ பாடல் காலர் ட்யூன் மூலம் 78 லட்ச ரூபாய் வருமானம் ஈட்டியது.

இப்படி எத்தனையோ கண்ணுக்குத் தெரியாத வருமானங்கள் உள்ளன.இந்தத் தொழில் வணிகம் தெரியாமல் படமெடுக்கக் கூடாது:

யாருமே வணிகம் தெரியாமல்படமெடுக்க வரக் கூடாது. யாரோ வியாபாரம் செய்வார்கள் என்று காத்திருக்க வேண்டாம்.

நாமே வணிகம் செய்யலாம் இதிலுள்ள வியாபார வாய்ப்புகள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அது பற்றி என்னிடம் கேட்டு வருபவர்களுக்கு நான் உதவி செய்யத் தயாராக இருக்கிறேன். வழிகாட்டத் தயாராக நான் இருக்கிறேன்.

நான் இதுவரை 18 படங்கள் தயாரித்து இருக்கிறேன்,8 இயக்குநர்களை அறிமுகப் படுத்தியிருக்கிறேன்.
இந்த 8 பேரில் யாரும் சோடை போகவில்லை. இதில் கர்வமும் ஆனந்தமும் அடைகிறேன்.

நான் முதலில் ‘ஆரோகணம்’ தயாரித்தபோது யார்யார் விருந்தினராக வருவார்களோ என்று பதற்றத்தில் இருந்தேன்.

இங்கே நமீதா உள்பட பலர் வந்துள்ளார்கள். மகிழ்ச்சி. இப்போது மீண்டும் சொல்கிறேன்.

இந்த மாதிரி புதியவர்களை வரவேற்பதில் வாழ்த்துவதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன். “என்றார்.

Learn the business and produce movies says Producer JSK Sathish

SVe Sekar at Yaagan audio launch

 

 

 

ரஜினி-விஜய்-அஜித்-தனுஷ் வர்றாங்க… கமல் வருவாரா..?

ரஜினி-விஜய்-அஜித்-தனுஷ் வர்றாங்க… கமல் வருவாரா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamalhassanஇன்னும் இரண்டு வாரங்களில் அதாவது ஏப்ரல் 14ஆம் தேதி சித்திரை முதல்நாள் தமிழ் புத்தாண்டு பிறக்கிறது.

தமிழர்களின் இந்த புத்தாண்டில் ரசிகர்களுக்கு விருந்து வைக்க, தமிழகத்தின் முன்னணி நடிகர்கள் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

ரஜினி நடிக்க ரஞ்சித் இயக்கவுள்ள படத்தின் பூஜை மற்றும் சூட்டிங் இந்த நாளில் தொடங்க உள்ளதாக தெரிகிறது.

இப்படத்தை தனுஷ் தயாரிக்கிறார் என்பது நாம் அறிந்தமே.

மேலும் தான் முதன்முதலாக இயக்கியுள்ள ப பாண்டி படத்தை அன்று ரிலீஸ் செய்கிறார். (பவர் பாண்டி)

இதே நாளில் அட்லி இயக்கும் விஜய் 61 படத்தின் டைட்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதுபோல் அஜித்தின் விவேகம் படத்தின் ஏதாவது ஒரு தகவல் வரும் என எதிர்பார்க்கலாம்.

இத்தனை நடிகர்கள் தங்கள் ரசிகர்கள் விருந்து வைக்கும்போது, கமல்ஹாசன் தரப்பில் இருந்து எதாவது தகவல் வராதா? என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

இதே நாளில்தான் ஆர்யாவின் கடம்பன், லாரன்ஸின் சிவலிங்கா ஆகிய படங்கள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Will Kamal give any treat to his fan on Tamil new year day

ரஜினி படத்துடன் கனெக்ட் ஆகும் விஜய்ஆண்டனி-ஜிவி.பிரகாஷ்

ரஜினி படத்துடன் கனெக்ட் ஆகும் விஜய்ஆண்டனி-ஜிவி.பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay antony GV Prakashவிஜய் ஆண்டனி அடுத்து தயாரித்து நடிக்கவுள்ள படத்திற்கு காளி என்று பெயரிட்டுள்ளனர்.

இப்படத்தை கிருத்திகா உதயநிதி இயக்கவிருக்கிறார் என்பதை பார்த்தோம்.

இந்த காளி படத்தலைப்பு 1980ஆம் ஆண்டில் ரஜினி நடிப்பில் வெளியான படத்தின் தலைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

அதுபோல் ஜிவி. பிரகாஷ் நடிக்கவுள்ள புதிய படத்திற்கு குப்பத்து ராஜா என்று பெயரிட்டுள்ளனர்.

பாபா பாஸ்கர் இயக்கவுள்ள இப்படத்தில் பூனம் பஜ்வா, பார்த்திபன் நடிக்கின்றனர்.

இப்படத்தின் தலைப்பும் ரஜினி நடித்த படத்தின் தலைப்புதான் என்பது கவனிக்கத்தக்கது.

Vijay antony and GV Prakash movie titles connect with Rajini movie title

கவண்-டோரா மோதலில் வசூலை அள்ளியது யார்.?

கவண்-டோரா மோதலில் வசூலை அள்ளியது யார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sethupathi nayantharaகே.வி ஆனந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி, டிஆர், மடோனா உள்ளிட்டோர் நடித்த படம் கவண்.

தாஸ் ராமசாமி இயக்கத்தில் நயன்தாரா, தம்பி ராமையா, ஹரீஷ் உத்தமன் நடித்த படம் டோரா.

இந்த இருபடங்களும் நேற்று வெளியானது.

இதில் நயன்தாராவின் டோரா படம் முதல் நாளில் சென்னையில் மட்டும் ரூ. 20 லட்சத்தை வசூலித்துள்ளதாம்.

முழுக்க முழுக்க மீடியாவை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள கவண் ரூ. 35 லட்சத்தை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

Kavan and Dora movies 1st day box office collection

More Articles
Follows