தமிழ்நாட்டுக்கு விஜய்… கேரளாவுக்கு மம்மூட்டி..; கொண்டாடும் திரையுலகம்

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க போடப்பட்ட ஊரடங்கால் 2020 மார்ச் முதல் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன.

2020 நவம்பர் 10 முதல் தமிழகத்தில் 50% தியேட்டர்கள் திறக்கப்பட்டன.

ஆனாலும் ரசிகர்கள் கூட்டம் போதவில்லை.

பின்னர் 2021 ஜனவரி 13ல் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படம் தியேட்டர்களில் ரிலீசானவுடன் கூட்டம் அலைமோதியது.

இதனால் தியேட்டர் உரிமையாளர்கள் முதல் அனைத்து தரப்பினரும் உற்சாகமடைந்தனர்.

கேரளாவிலும் மாஸ்டர் ரிலீஸ் சமயத்தில் தியேட்டர்கள் 50% இருக்கைகளுடன் திறக்கப்பட்டாலும் இரவு காட்சிக்கு அனுமதியில்லை.

கேரள தியேட்டர்களில் மூன்று காட்சிகள் மட்டுமே திரையிட அனுமதிக்கப்பட்டன.

இதனால் தான் மோகன்லால் & மீனா நடித்து பெரும் எதிர்பார்ப்பில் இருந்த ‘த்ரிஷ்யம்-2′ படத்தை கூட ஓடிடியில் ரிலீஸ் செய்தனர்.

இரவு காட்சிக்கு அனுமதி கிடைக்கும் வரை தியேட்டர்கள் மீண்டும் மூடப்பட்டன.

இந்த நிலையில் நேற்று மார்ச்-11 இரவுக் காட்சிக்கு கேரள அரசு அனுமதி அளித்தது.

இதனையடுத்து மம்மூட்டி & மஞ்சு வாரியர் நடித்த ‘தி பிரைஸ்ட்’ என்ற படம் தியேட்டர்களில் வெளியானது.

இப்படத்தை பார்த்த பலரும் பாராட்டி வருகின்றனர்.

பல தியேட்டர்களில் ஹவுஸ்புல் போர்டு மாட்டப்பட்டுள்ளதாம்.

கொரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் நஷ்டத்தில் இருந்தன.

தற்போது மம்மூட்டி படத்தால் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Fans and Critics praises Actor Mammootty

Overall Rating : Not available

Latest Post