சிம்புகிட்ட வச்சிக்காத வம்பு; உனக்கிருக்கா தெம்பு? விஷாலுக்கு டிஆர் வார்னிங்

simbu TRவருகிற டிசம்பர் 24ல் சென்னை காஞ்சிபுரம் திருவள்ளுர் மாவட்டத்தின் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில் தற்போதைய சங்கத் தலைவராக இருக்கும் அருள்பதியை எதிர்த்து மற்றொறு அணி சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா போட்டியிடுகிறார்.

எனவே அருள்பதியை ஆதரித்து திரைப்பட தயாரிப்பாளர்கள் பலர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினர்.

அப்போது டி.ராஜேந்தர் பேசியதாவது…

நான் எம்ஜிஆர், கலைஞர், ஜெயலலிதா ஆகியோரை எதிர்த்து அரசியல் செய்தவன்.

ஜெயலலிதாவை எதிர்த்து பர்கூர் தொகுதியில் போட்டியிட்டவன் நான். ராஜீவ்காந்தி படுகொலை அனுதாப அலை இருந்தபோது கூட 40,000 வாக்குகள் பெற்றவன் நான்.

நான் பார்க்காத அரசியலா? நான் பார்க்காத தேர்தலா?

நான் என்றைக்கும் ஓட்டுக்கு பணம் கொடுத்து அரசியல் செய்பவன் அல்ல.

ஆனால் இன்று அரசியல் தேர்தலை போல தயாரிப்பாளர் சங்கத்திலும் பணம் கொடுத்து வாக்குகளை பெற தொடங்கிவிட்டனர்.

தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருக்கிறார். ஆனால் தமிழ்நாட்டில்தான் ஜிஎஸ்டி வரி மற்றும் கேளிக்கை வரி அதிகமாக உள்ளது.

ஆந்திரா தெலுங்கானாவில் 18% ஜிஎஸ்டி இருக்கிறது. கர்நாடகாவில் சினிமாவுக்கு வரியே இல்லை.

ஆனால் இங்கே சங்கப் பொறுப்பில் இருக்கும் இவர்கள் எதையும் கேட்பதில்லை.

என் மகன் சிம்பு இனி நடிக்கக்கூடாது என தடை போடுகிறார்கள் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள்.

நடிக்கவில்லை என்றால் என்ன? அவன் இசையமைத்துள்ள சக்க போடு போடு ராஜா படம் ரிலீஸ் ஆகிவிட்டது.

நடிப்பு இல்லையா? அவன் சினிமாவில் எதை செய்தாவது பிழைத்து கொள்வார். அவருக்கு நான் எல்லா கலைகளையும் கற்றுக் கொடுத்திருக்கிறேன்.

சினிமாவில் எந்த துறையானாலும் நாங்கள் சாதிப்போம்.

என் மகன் சிம்பு. அவன்கிட்ட வச்சிக்காத வம்பு. அவரை எதிர்க்க உனக்கு இருக்கா தெம்பு” என விஷாலை தாக்கி பேசினார் டி.ராஜேந்தர்.

Dont try to oppose Simbu T Rajendar warns Vishal

Overall Rating : Not available

Latest Post