தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தோனி படத்தில் நடித்த சுசாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14-ஆம் தேதி தூக்கில் தொங்கி தற்கொலை செய்துக் கொண்டார்.
எனவே சுசாந்தின் காதலி ரியாவுக்கு இந்த மரணத்தில் தொடர்பு இருப்பதாக சுசாந்த்தின் தந்தை போலீசிடம் புகார் அளித்தார்.
ரியா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ-க்கு மாற்றப்பட்டது.
விசாரணையின்போது, ரியாவுக்கு போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக தெரியவந்தது.
எனவே ரியா இன்று, செவ்வாய்க்கிழமை விசாரணைக்காக போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார்.
இந்நிலையில் போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக ரியாவைப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு இன்று கைது செய்தது.
கஞ்சா கலந்த சிகரெட்டைப் பயன்படுத்தியாக ரியா கூறியதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாம்.
Actress Rhea Chakraborty Arrested, She Reportedly Confessed To Using Drugs