“டாணா” உங்களை ஆச்சர்யபடுத்தும் இயக்குநர் யுவராஜ் சுப்பிரமணியம் !

“டாணா” உங்களை ஆச்சர்யபடுத்தும் இயக்குநர் யுவராஜ் சுப்பிரமணியம் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Taana stillsநடிகர் வைபவ் தமிழ் சினிமா உலகின் நம்பிக்கை நாயகனாக மாறியிருக்கிறார். மிக வித்தியாசமான, எளிமையான கதைகள். சாதாரண ரசிகன் தன்னை தொடர்புபடுத்திகொள்ளும் எதிர் வீட்டு பையனின் நடிப்பு என, அவர் படங்கள் வரிசையாக அனைத்து தரப்பினரையும் கவர்ந்து வெற்றி பெற்று வருகிறது. இந்த வாரம் இயக்குநர் யுவராஜ் சுப்பிரமணியம் இயக்கத்தில் வைபவ், நந்திதா நடிப்பில் வெளியாகவுள்ள “டாணா” திரைப்படம் டிரெயலர் மூலம் ரசிகரகளிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. உணர்ச்சிவசப்படும் தருணங்களில் திடீரென பெண்குரல் வந்துவிடும் வைபவ் கதாப்பாத்திரம் படத்தின் சுவாரஸ்யத்தை கூட்டியிருக்கிறது.

படப்பிடிப்பின் சுவாரஸ்யங்கள் குறித்து இயக்குநர் யுவராஜ் சுப்பிரமணியம் பகிர்ந்து கொண்டது…
பெண் குரலில் பேசும் வைபவின் கதாப்பாத்திரம் ரசிகர்களை கண்டிப்பாக சிரிக்க வைக்கும். ஆனால் படப்பிடிப்பில் இதற்காக அவர் மேற்கொண்ட சிரத்தை மிகப்பெரிது. அவர் தனது சொந்த குரலில் பேசி பின் பெண் குரலில் டப்பிங் செய்யப்பட்டதாக அனைவரும் நினைக்கலாம். ஆம் அப்படிதான் செய்தோம். ஆனால் படப்பிடிப்பில் அவர் முழுக்க தன் குரலில் பேசவில்லை, கதாபாத்திரதன்மைக்காக தன் குரலை முழுக்க மாற்றி, கிட்டதட்ட பெண் குரல் மாதிரியே அவர் பேசினார். இது அவருக்கு மிகுந்த சவாலாக இருந்தது ஆனாலும் ரசிகர்கள் பார்க்கும் போது அது சரியாக இருக்கவேண்டுமென அவர் மிகவும் கஷ்டப்பட்டார். இப்பொது பெருமளவில் வரவேற்பு கிடைத்திருப்பது எங்கள் மொத்த படக்குழுவையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. படத்தினை தியேட்டரில் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என உறுதியாக நம்புகிறேன். இப்படம் அனைவரையும் கவரும் கமர்ஷியல் கலாட்டாவாக இருக்கும்.

இப்படம் வெறும் நகைச்சுவையில் மட்டுமே பயணிக்கும் படமாக இருக்காது. பயமுறுத்தும் ஹாரர், காமெடி, ரொமான்ஸ், ஆக்‌ஷன் என பல தளங்களில் இப்படம் பயணிக்கும். தயாரிப்பாளர் M C கலைமாமணி மற்றும் M N லக்‌ஷ்மி கலைமாமணி இருவருக்கும் என் மீது நம்பிக்கை வைத்து இப்படத்தை தயாரித்ததற்காக இந்நேரத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இப்படத்தில் பணிபுரிந்துள்ள அத்தனை நடிகர்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் தங்கள் முழு திறமையையும் தந்துள்ளார்கள். நடிகை நந்திதா தனது கதாப்பாத்திரத்தை அருமையாக செய்துள்ளார். யோகிபாபு, வைபவுடன் திரையில் வரும் தருணங்கள் அனைத்திலும் ரசிகர்கள் வயிறு குலுங்க சிரிப்பார்கள். நடிகர் பாண்டியராஜன் எங்கள் அனைவரையும் விட மிகப்பெரும் திரை அனுபவம் கொண்டிருந்தாலும், மிக எளிமையாக பழகினார். அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். இப்படத்தின் மீது ஆர்வம் கொண்டு மிகப்பெரிய வெளியீடாக மாற்றித்தந்திருக்கும் Positive Print Studios ராஜேஷ்குமார் மற்றும் L.சிந்தன் அவர்களுக்கு பெரும் நன்றியை தெரிவித்துகொள்கிறேன் என்றார்.

Nobel Movies சார்பில் M.C.கலைமாமணி, M N லட்சுமி கலைமாமணி இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார்கள். இயக்குநர் யுவராஜ் சுப்ரமணி எழுதி, இயக்கியுள்ளார். வைபவ், நந்திதாவுடன் வி ஐ பி படப்புகழ் ஹரீஷ் பெராடி, பசங்க சிவக்குமார், உமா பத்மநாபன், யோகிபாபு ஆகியோர் நடித்துள்ளார்கள்

இசை – விஷால் சந்திரசேகர்

ஒளிப்பதிவு – சிவா GRN

படத்தொகுப்பு – பிரசன்னா G.K

கலை இயக்குநர் – பாசர் N.K.ராகுல்

சண்டைப்பயிற்சி – V. கோட்டி

நடனம் – சதீஸ்

பாடல்கள் – கு. கார்த்திக், தனிகொடி

நிர்வாக தயாரிப்பு – V. சுதந்திரமணி

இணை தயாரிப்பு – H. சனா உல்லா கான் , பிராசாந்த் ரவி, S.சந்தோஷ்

Positive Print Studios சார்பில் ராஜேஷ்குமார் மற்றும் L.சிந்தன் ஆகியோர் வெளியிடும் இத்திரைப்படம் 2020 ஜனவரி 24 தமிழகமெங்கும் வெளியாகிறது.

பாலா படத்திற்காக 25 கிலோ எடை கூட்டிய ஆர்கே. சுரேஷ்

பாலா படத்திற்காக 25 கிலோ எடை கூட்டிய ஆர்கே. சுரேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

RK suresh in bala filmதமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனர்களில் பாலாவும் ஒருவர்.
விக்ரம், சூர்யா, அதர்வா, விஷால் உள்ளிட்ட பல நடிகர்களுக்கு நடிப்பு திறமை இருக்கிறது என்பதையே இவர்தான் அடையாளம் காட்டினார்.

இவர் விக்ரமின் மகன் துருவ் நடிப்பில் ‘வர்மா’ படத்தை இயக்கினார்.

ஆனால் அநத் படத்தை தயாரிப்பு நிறுவனம் வெளியிட மறுத்து புதிய படத்தை தயாரித்து வெளியிட்டது.

அதன்பின்னர் பாலா எந்த படத்தையும் இயக்கவில்லை.

சூர்யாவுக்காக ஒட்டு மொத்த வித்தையை இறக்கும் பாலா

இந்த நிலையில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குனர் பாலா படம் குறித்து தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

அதில் ‘பாலா படத்துக்காக 73 கிலோவில் இருந்து, 95 எடை கூட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் இயக்குனர் பாலா இயக்கத்தில் ஆர்.கே.சுரேஷ் நடிப்பது உறுதியாகியுள்ளது.

பாலாவின் தாரை தப்பட்டை படத்தில் ஆர்.கே.சுரேஷ் வில்லன் நடித்திருந்தார் என்பதை யாராலும் மறக்கமுடியாது.

நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்கு செல்லும் ‘மாஸ்டர்’ விஜய்

நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்கு செல்லும் ‘மாஸ்டர்’ விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

master vijay stillsகைதி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘மாஸ்டர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

இப்படத்தில் விஜய் சேதுபதி, சாந்தனு, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, கௌரி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார். அனிருத் இசையமைத்து வருகிறார்.

தற்போது இப்பட சூட்டிங் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

‘மாஸ்டர்’ விஜய்யுடன் மோதும் ‘சூரரைப் போற்று’ சூர்யா

இதில் விஜய், விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறதாம்.

இந்த நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் நடத்தவிருக்கிறார்களாம்.

பிப்ரவரி 1ம் தேதி முதல் 10ம் தேதி வரை படப்பிடிப்பு நடத்த படக்குழுவினர் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

மீண்டும் கதை வசனம் எழுதி நடிக்கும் ‘அசுரன்’ தனுஷ்

மீண்டும் கதை வசனம் எழுதி நடிக்கும் ‘அசுரன்’ தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanushஇந்தாண்டு 2020 பொங்கல் தினத்தில் தனுஷ் நடித்த பட்டாஸ் படம் வெளியானது.

இந்த படம் வந்த சுவடே தெரியாமல் தர்பார் அலையில் வீழ்ந்துவிட்டது.

தற்போது மாரி செல்வராஜ் இயக்கும் கர்ணன் படத்தில் நடிக்கிறார் தனுஷ்.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தை தாணு தயாரித்து வருகிறார்.

இதனிடையில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள சுருளி படத்திலும் நடித்து முடித்துள்ளார் தனுஷ்.

மாமனார் ரஜினி வேடத்தில் தனுஷ்; அம்மா மேனகா வேடத்தில் கீர்த்தி

இந்த படங்களை அடுத்து மித்ரன் ஜவஹர் இயக்கும் படத்தில் நடிக்கிறார்.

இந்த படத்திற்கு கதை வசனம் எழுதி, நாயகனாக நடிக்கிறாராம்.

பவர்பாண்டி படத்திற்கு கதை வசனம் எழுதி இயக்கி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பேண்ட் மட்டும்தான் போடலையா.? ரம்யாவை கலாய்க்கும் நெட்டிசன்கள்

பேண்ட் மட்டும்தான் போடலையா.? ரம்யாவை கலாய்க்கும் நெட்டிசன்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress VJ Ramys glamour dress goes viralடிவி ரியால்ட்டி ஷோக்கள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகள் என அனைத்தையும் தொகுத்து வழங்கி வருபவர் ரம்யா

மேலும் ஒரு சில படங்களிலும் நடித்து வருகிறார். விஜய்யின் மாஸ்டர் படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

இவருக்கு திருமணமாகி விவாகரத்தும் ஆகிவிட்டது.

இந்த நிலையில் இவரின் சமீபத்திய வீடியோ ஒன்றை வலைத்தள வாசிகள் வறுத்தெடுத்துள்ளனர்.

அண்மையில ஒரு வேண்டுதலுக்காக ஒரு பிரபல கோயிலுக்கு சன்றுள்ளார். அங்கு கவர்ச்சியான உடை அணிந்து வேண்டுதல் செய்துள்ளர்.

அந்த வீடியோவில் சிட்டுக்குருவிகள் காதில் தனது பிரார்த்தனையை கூறி, அவைகளை ரம்யா பறக்கவிடுகிறார்.

அதில் சுடிதாருக்கு அணியும் டாப்ஸை மட்டுமே அணிந்திருப்பது போல உடை உள்ளது.

இதனை பார்த்த கோவிலுக்கு இப்படி தான் கவர்ச்சியான உடை அணிந்து செல்வீர்களா? பேண்ட் எங்கே? பேண்ட் மட்டும் தான் போடலையா? என் பல்வேறு கமெண்ட் போட்டு வருகின்றனர்.

Actress VJ Ramys glamour dress goes viral

https://www.instagram.com/p/B7fzM_VnlM9/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again

நடிகர் சங்க தேர்தல் ரத்து; கோர்ட் தீர்ப்பால் நாசர் டென்ஷன்; ஐசரி ஹாப்பி

நடிகர் சங்க தேர்தல் ரத்து; கோர்ட் தீர்ப்பால் நாசர் டென்ஷன்; ஐசரி ஹாப்பி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

High Court judgement on Nadigar Sangam election அண்மைக்காலமாக தமிழக அரசியல் தேர்தல் அளவுக்கு தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலும் களைக்கட்டி வருகிறது.

பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருந்து வருகிறது.

கடந்த 2019 ஆண்டு ஜூன் 23ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றது.

ஆனால் இதற்கு முன்பே சில உறுப்பினர்கள் அளித்த புகாரின் பேரில் ஜூன் 19ஆம் தேதி தேர்தலை நிறுத்து வைத்து உத்தரவிட்டார் மாவட்ட பதிவாளர்.

இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் தேர்தலை மட்டும் நடத்த அனுமதி அளித்தது. ஆனால், வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவின் அடிப்படையில் தான் 2019 ஜூன் 23ம் தேதி தேர்தல் நடைபெற்றது.

மேலும் நடிகர் சங்கத்தின் நிர்வாகத்தைக் கவனிக்க பதிவுத் துறை உதவி ஐஜி கீதாவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் மற்றும் பொருளாளர் கார்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

மேலும் பெஞ்சமின், ஏழுமலை ஆகியோர் நடந்து முடிந்த நடிகர் சங்கத் தேர்தலில் எங்களை வாக்களிக்க அனுமதிக்கவில்லை.

வெளியூர்களில் இருக்கும் உறுப்பினர்கள் தபால் மூலம் வாக்களிப்பதற்கான படிவம் கொடுக்கப்படவில்லை எனவே இத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் அனைத்து வழக்குகளையும் விசாரித்த நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

அதில், “கடந்த ஆண்டு ஜூன் 23-ம் தேதி நடத்தப்பட்ட தேர்தல் ரத்து செய்யப்படுகிறது. 3 மாதத்துக்குள் வாக்காளர் பட்டியல் தயாரித்து தேர்தலை நடத்த வேண்டும்.

இத்தேர்தலை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் நியமிக்கப்படுகிறார். மறுதேர்தல் நடத்தி முடிக்கும் வரை நடிகர் சங்க நிர்வாகத்தை அரசு நியமித்த சிறப்பு அதிகாரியான கீதா நிர்வகிப்பார்” என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை ஐசரி கணேஷ், பாக்யராஜ் உள்ளிட்ட சங்கரதாஸ் சுவாமிகள் அணியினர் வரவேற்றுள்ளனர்.

ஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய நாசர், விஷால் அணியினர் முடிவு செய்துள்ளனர்.

அதன்படி வரும் திங்கள் கிழமை மேல்முறையீடு செய்யப்படும் என்றும் அவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

High Court judgement on Nadigar Sangam election

More Articles
Follows