*டாணா* படத்தில் ரசிகர்களுக்கு காமெடி ட்ரீட் தரும் யோகிபாபு

*டாணா* படத்தில் ரசிகர்களுக்கு காமெடி ட்ரீட் தரும் யோகிபாபு

Taana movie will be comedy treat for Yogibabu fansபேய் படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு விருந்து அளிக்க தயாராகி வருகிறார் இயக்குனர் யுவராஜ் சுப்ரமணி.

“இந்த சூப்பர்நேச்சுரல் காமெடி படங்களின் வெற்றியே, நடுங்க வைக்கும் காட்சியாக இருந்தாலும் நம் உதடுகளில் சிறு புன்னகையையும், முதுகு தண்டில் சின்ன பயத்தையும் உண்டாக்குவதில் தான் அமைந்திருக்கிறது.

இயக்குனர் யுவராஜ் சுப்ரமணி அதன் அடிப்படையை புரிந்து கொண்டு, தான் எழுதிய ஒரு கதையை எனக்கு சொன்னார். எனக்கு இது முற்றிலும் ஒரு புதிய அனுபவத்தை அளித்தது, கதையை ரொம்ப ரசித்தேன்.

இந்த கதை அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் என்ற நம்பிக்கை எனக்கு உருவானது” என்றார் தயாரிப்பாளர் ‘நோபல் மூவிஸ்’ கலைமாமணி.

நட்சத்திரங்களை பற்றி தயாரிப்பாளர் கூறும்போது, “ஹலோ நான் பேய் பேசுறேன்” போன்ற திரைப்படங்கள் மூலம் இந்த வகை காமெடி பேய் படங்களில் தன்னை நிரூபித்தவர் வைபவ்.

எந்தவொரு சூழ்நிலையிலும் தன்னிச்சையான உணர்வை வெளிப்படுத்தக்கூடிய நடிகை நந்திதா ஸ்வேதா. யோகிபாபு மற்றும் பாண்டியராஜன் என இயக்குனரின் தேர்வு எல்லாமே சரியாக அமைந்திருக்கிறது.

குறிப்பாக, யோகிபாபு ஒரு வழக்கமான கதாப்பாத்திரமாக இல்லாமல், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் படம் முழுவதும் பயணிப்பார். அவரது கதாபாத்திரம், பார்வையாளர்களால் மிகவும் ரசிக்கப்படும்” என்றார்.

விஷால் சந்திரசேகர் (இசை), சிவா.ஜி.ஆர்.என் (ஒளிப்பதிவு), ஜி.கே. பிரசன்னா (படத்தொகுப்பு), சதீஷ் கிருஷ்ணன் (நடனம்), பசர் என்.கே.ராகுல் (கலை), கூட்டி (சண்டைப்பயிற்சி), கீர்த்தி வாசன் (ஆடை வடிவமைப்பு) மற்றும் 24AM (பப்ளிசிட்டி டிசைன்ஸ்) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணியாற்றுகிறார்கள்.

எச்.எஸ்.கான் இணை தயாரிப்பு செய்கிறார். ப்ரொடக்‌ஷன் ஹெட்டாக வி. சுதந்திரமணி பணிபுரிய, நோபல் மூவிஸ் சார்பில் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறார் எம்.சி.கலைமாமணி.

Taana movie will be comedy treat for Yogibabu fans

*பூமராங்* படத்திற்காக மொட்டை தலையுடன் அதர்வா அவதாரம்

*பூமராங்* படத்திற்காக மொட்டை தலையுடன் அதர்வா அவதாரம்

Atharvaa Tonsured His Head For Boomerangதனக்கு எது வருமோ, எது சாதகமாக இருக்குமோ அதை நடித்து விட்டுப் போகாமல், தனது எல்லையை தாண்டி புதுப்புது முயற்சிகளை மேற்கொள்வது தான் ஒரு நடிகனின் சாதனை.

இது சொல்வதற்கு வேண்டுமானால் எளிதாக இருக்கலாம்,ஆனால் அதை செய்து காட்டுபவர்களுக்கு மன உறுதி நிறைய தேவை. அப்படிப்பட்ட மன உறுதியோடு, ‘பூமராங்’ படத்துக்காக தனது தலையை மொட்டையடித்துக் கொண்ட அதர்வாவை பார்த்து படக்குழுவினர் அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டார்கள்.

அதை பற்றி இயக்குனர் கண்ணன் கூறும்போது…

“அதர்வா இயக்குனரின் நடிகர் என்பதை தமிழ் சினிமா உலகம் அறியும்.

சினிமாவில் தனது ஆரம்ப காலகட்டத்திலேயே பாலாவின் பரதேசி படத்தில் யாரும் செய்யத் துணியாத கதாபாத்திரத்தில் நடித்து தன்னை நிரூபித்தவர். அதனாலேயே அடுத்தடுத்து படங்களில் பிஸியாக இருக்கும் அவரை, மொட்டையடிக்க வேண்டும் என்று நான் கேட்பது நியாயமாக இருக்குமா?.

படத்தில் வரும் அவர் கதாபாத்திரத்தின் மூன்று வெவ்வேறு தோற்றங்களின் தீவிரத்தை பற்றி நான் விளக்கியவுடன், அவர் அதனுள் ஒன்றி விட்டார். நானே தயங்கியபோதும், அவர் திடமான முடிவோடு வந்து என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.

இதில் ஒரு தோற்றத்தை பிரீத்திஷீல் சிங் மற்றும் மார்க் ட்ராய் டிசூஸா ஆகியோர் வடிவமைத்திருக்கிறார்கள். அதர்வா இந்த ப்ரோஸ்தடிக் ஒப்பனைக்காக பல மணி நேரம் செலவிட வேண்டியிருந்தது.

இத்தகைய கடும் முயற்சியில் ஈடுபடும் எந்த ஒரு நடிகரும், கொஞ்சம் ஓய்வெடுக்கவே விரும்புவர். ஆனால் அதர்வா உடனடியாக படத்தில் முக்கியமான இடத்தில் வரும் காட்சிகளுக்காக தனது தலையை மொட்டையடிக்க தயாரானார்.

இந்த காட்சிகளை சென்னை நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 5 நாட்கள் கடைசி கட்ட படப்பிடிப்பில் படம் பிடிக்க முடிவு செய்தோம். மொட்டை அடித்ததால், முடி வளர இரண்டு மாதங்கள் எந்த படத்திலும் நடிக்காமல் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியது.

எங்கள் படத்துக்காக அவர் அதை தியாகம் செய்ய வேண்டியிருந்தது. இமைக்கா நொடிகள் போலவே அவரின் தியாகத்துக்கு ரசிகர்கள் பாராட்டுகளை தருவார்கள் என நான் உறுதியாக நம்புகிறேன்” என்றார்.

மேகா ஆகாஷ், இந்துஜா, உபென் படேல், சுஹாசினி மணிரத்னம், ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ் மற்றும் பல பிரபல நட்சத்திரங்கள் நடிக்க, மசாலா பிக்ஸ் சார்பில் கண்ணன் தயாரித்து இயக்கியிருக்கிறார்.

பிரசன்னா குமார் ஒளிப்பதிவு செய்ய, செல்வா ஆர்.கே. எடிட்டிங் செய்திருக்கிறார். அர்ஜுன் ரெட்டி புகழ் ரதன் இசையமைத்திருக்கிறார்.

Atharvaa Tonsured His Head For Boomerang

விஜய்சேதுபதி – விஜய் சந்தர் கூட்டணியில் இணையும் இமான்

விஜய்சேதுபதி – விஜய் சந்தர் கூட்டணியில் இணையும் இமான்

d imman and vijay chander“விஜயா புரொடக்க்ஷன்ஸ்” சார்பாக B.பாரதி ரெட்டி தயாரிக்கும் படத்தில் விஜய்சேதுபதி நடிக்கவுள்ளார் என்பதை பார்த்தோம்.

வாலு மற்றும் ஸ்கெட்ச் படங்களை இயக்கிய விஜய் சந்தர் இப்படத்தை இயக்கவுள்ளார்.

விஜய் சந்தர் இயக்கிய படங்களுக்கு இதுவரை தமன் மட்டுமே இசை அமைத்துள்ளார்.

தற்போது முதன்முறையாக D.இமான் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

விஜயா புரொடக்க்ஷன்ஸ் நிறுவனத்திற்கு இசையமைப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக இசையமைப்பாளர் இமான் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய படம் வரும் 2019 ஆம் ஆண்டு துவக்கத்தில் தொடங்கவுள்ளது.

குருதி ஆட்டத்தை பூஜையோடு ஆரம்பித்த அதர்வா-பிரியா பவானி சங்கர்

குருதி ஆட்டத்தை பூஜையோடு ஆரம்பித்த அதர்வா-பிரியா பவானி சங்கர்

kuruthi aattam movie pooja8 தோட்டாக்கள் படம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் இயக்குனர் ஸ்ரீகணேஷ்.

இவர் அடுத்ததாக இயக்கும் ”குருதி ஆட்டம்” என்னும் படத்தை இயக்கவிருக்கிறார். இப்படத்தில் அதர்வா கதாநாயகனாக நடிக்கிறார். பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார் என்பதை நம் தளத்தில் பார்த்தோம்.

மதுரை பின்னணியில் அமைந்திருக்கும் இந்த கேங்ஸ்டர் படத்தில் பிரியா பவானி சங்கர் ஆசிரியராக நடிக்கிறார்.

ராதாராவி, ராதிகா சரத்குமார் போன்ற முக்கிய நடிகர்கள் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியது..

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ராக்ஃபோர்ட் என்டர்டெயின்மென்ட் சார்பில் முருகானந்தம் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐ பி கார்த்திகேயன் ஆகியோர் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.

விஸ்வாசம் படத்தில் அஜித்தின் பெயர் இதுவா… *தூ.. து..?*

விஸ்வாசம் படத்தில் அஜித்தின் பெயர் இதுவா… *தூ.. து..?*

viswasamவிவேகம் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்றாலும் மீண்டும் சிவாவுக்கே அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பு கொடுத்துள்ளார் அஜித்.

விஸ்வாசம் என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் 3ஆம் கட்ட சூட்டிங் தற்போது ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, முக்கிய வேடங்களில் யோகி பாபு, தம்பி ராமைய்யா, ரோபோ சங்கர், விவேக், கோவை சரளா, ரவி அவானா ஆகியோர் நடித்து வருகின்றனர்.

டி.இமான் இசையமைத்து வரும் இப்படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

இப்படத்தில் அஜித் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் என்பது நமக்கு தெரிந்த ஒன்றுதான்.

இந்நிலையில், இப்படத்தில் ஒரு அஜித்தின் கேரக்டர் பெயர் ”தூக்கு துரை” என்று தகவல் வெளியாகியுள்ளது.

சர்கார் இசைக்கு தமிழகத்தில் தடையா..? விமானத்தில் பறக்கும் ரசிகர்கள்!

சர்கார் இசைக்கு தமிழகத்தில் தடையா..? விமானத்தில் பறக்கும் ரசிகர்கள்!

sarkarசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்து வரும் சர்கார் படம் மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.

முருகதாஸ் இயக்கி வரும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மேலும் வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு, பழ.கருப்பையா, ராதாரவி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.

படத்தின் பாடல்கள் அக்டோபர் மாதம் 2-ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இதையடுத்து சர்கார் கொண்டாட்டத்தை அறிவித்துள்ள படக்குழு, சர்கார் படத்தின் முதல் பாடல் செப்டம்பர் 24-ம் தேதி வெளியாகும் என அண்மையில் அளிவித்தனர்.

இதனையடுத்து மற்றொரு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வரும் 24ம் தேதி முதல் 29ம் தேதி வரை சன் டிவியில் ஒளிபரப்பாகும் நாடகங்களை தொடர்ந்து பாருங்கள். அதில் ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கும் ஒரு கேள்வி கேட்கப்படும்.

அதற்கு விரைவாக அதிக கேள்விக்கு பதிலளிக்க வேண்டும். ஒருவர் எத்தனை கேள்விக்கு வேண்டுமானாலும் பதிலளிக்கலாம்.

இதில் 250 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு வீடு தேடு இசை வெளியீட்டு விழா அழைப்பிதழ் வரும்.

அவருக்கு விழாவுக்கு வந்து செல்ல விமான டிக்கெட், வழி செலவுக்கு ரூ. 2000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

More Articles
Follows