விஜய் கூட லைலா நடிக்கலையே.. அப்புறம் இது எப்படி.? உள்ளே படிங்க

Actress Laila released rare movie click with Vijay goes viralவிக்ரம், அஜித், சூர்யா, பிரசாந்த் ஆகியோருடன் நடித்து பிரபலமானவர் நடிகை லைலா.

இவர் பல வருடங்களாக சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தார். தற்போது ஆலிஸ் என்ற படம் மூலம் ரீஎன்ட்ரி ஆகிறார்.

இந்நிலையில் இவர் விஜய்யுடன் ஜோடியாக போட்டோவை வெளியிட்டு ‘எங்கிட்ட எஸ்கேப் ஆன ஒரே ஹீரோ’ என கமெண்ட் அடித்திருந்தார்.

இது என்ன திரைப்படம்? என சவாலும் விட்டிருந்தார்.

விஜய்யோடு லைலா நடிக்கவில்லையே? அப்புறம் எப்படி என பலர் கன்ப்யூஸ் ஆனார்கள்.

ஆனால் ஒரு சிலர் மட்டும் சரியாக கண்டு பிடித்தனர்.

விக்ரமன் இயக்கிய, ‘உன்னை நினைத்து’ படத்தில் முதலில் விஜய்தான் நடித்தார். பின்னர் அப்படத்திலிருந்து விலகினார். அதன் பின்னர்தான் சூர்யா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பூவே உனக்காக படத்தில் காதலை போற்றும் வகையில் தன் இதயத்தில் ஒருத்திக்கே இடம் என டயலாக் பேசியிருப்பார் விஜய். இப்படம் விஜய் வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

அதன்பின்னர்தான் உன்னை நினைத்து படத்தில் கமிட் ஆனார்.

இந்த படத்தில் காதல் தோல்விக்கு பிறகு வேறு ஒரு பெண்ணை மணப்பதாக கதை இருந்தது.

எனவே, பூவே உனக்காக ஏற்படுத்திய தாக்கத்தை உடனே மாற்றக்கூடாது என விஜய் அப்போது முடிவெடுத்தாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்தன.

Actress Laila released rare movie click with Vijay goes viral

Overall Rating : Not available

Related News

Latest Post