தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வேந்தர் மூவிஸ் மதன் மாயமானதை தொடர்ந்து, எஸ்ஆர்எம் குழுமத்தின் நிறுவனர் பாரி வேந்தர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் செய்தியாளர்களை சற்றுமுன் சந்தித்து பேசினர்.
இச்சந்திப்பில் இயக்குனர் விக்ரமன் பேசியதாவது…
“திரைத்துறையின் பல்வேறு பிரிவினருக்கு பாரி வேந்தர் இலவச மருத்துவ உதவிகளை செய்து வருகிறார்.
நலிவடைந்த கலைஞர்களின் குடும்பத்தில் உள்ள மாணவர்களுக்கு பொறியியல் மற்றும் மருத்துவ துறைகளிலும் இலவச கல்வியை வழங்கி வருகிறார்.
மேலும் குறும்பட இயக்குனர்களுக்கு 5டி கேமரா உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை வழங்கி அவர்களுக்கும் திரைத்துறையில் சாதிக்க வாய்ப்புகளை வழங்கி வருகிறார்.
வேந்தர் மூவிஸ் மதன் பற்றி எந்த தகவலும் தெரியாது. அதற்காக அவர் கெட்டவர்? என்று சொல்லவில்லை.
பாரிவேந்தர் மிகவும் நல்லவர். பணத்திற்காக எந்த தவறும் செய்ய மாட்டார்.
அவருடைய பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதால் இந்த சந்திப்பை நாங்கள் ஏற்பாடு செய்தோம்.
அவருடைய எஸ்ஆர்எம் பல்கலைக் கழகத்தில் நிறைய கல்வி கட்டணம் வசூலிப்பதாக புகார் தெரிவிக்கின்றனர்.
அப்படி இருந்தால், அவர் எதற்காக எந்த பிரதி பலனையும் எதிர்பாராமல் இத்தனை உதவிகளை செய்ய வேண்டும்.”
இவ்வாறு பேசினார் விக்ரமன்.