திமுக.வின் வாரிசு அரசியலையும் சிம்புவையும் ‘மாநாடு’ மேடையிலேயே கண்டித்த விஜய் தந்தை

திமுக.வின் வாரிசு அரசியலையும் சிம்புவையும் ‘மாநாடு’ மேடையிலேயே கண்டித்த விஜய் தந்தை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் & எஸ்ஜே. சூர்யா நடித்து வெளியான படம் ‘மாநாடு’.

இதில் எஸ்.ஏ.சி, மனோஜ், கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர்.

யுவன் இசையமைத்து இருந்தார்.

இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் இப்பட நன்றி & வெற்றி விழா சென்னையில் இன்று (21.12.21) நடைபெற்றது.

இதில் எஸ்ஜே சூர்யா, வெங்கட் பிரபு, சுரேஷ் காமாட்சி, ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்ஜீ, யுவன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் நடிகர் சிம்பு, கல்யாணி ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.

இதில் எஸ்ஏசி பேசியதாவது…

“இந்த படம் தமிழ் மக்களுக்கும் ஏற்ற வகையில் இருந்தது.

முதல்வர் கொல்லப்பட்டால் இஸ்லாமியருக்கு அவப்பெயர் ஏற்படும் என சொல்லப்பட்டது.

அதுபோல் வாரிசு அரசியல் பற்றி பேசப்பட்டது. (திமுகவை மறைமுகமாக கலாய்த்தார்)

மேலும் அவர் பேசியதாவது…

இது ஒரு உண்மையான வெற்றி. ஆனால், இப்பட நாயகன் இங்கு இல்லாதது ஏன் என எனக்குப் புரியல.

என்னதான் ஷூட்டிங் இருந்தாலும் இங்கே வந்திருக்க வேண்டும். இந்த மகிழ்ச்சியை நம்மோடு அவர் கொண்டாடியிருக்கனும். மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது.

அவரை நம்பி தயாரிப்பாளர் எவ்வளவு முதலீடு செஞ்சிருக்கார். அப்படிப்பட்ட ஒரு வெற்றியைக் கொண்டாட இந்த ஹீரோ இங்கே இருக்கவேண்டும்.

சூட்டிங்கில் எப்படி இருந்தோமோ படத்தின் வெற்றிக்குப் பிறகும் அப்படியே இருக்கனும்.”

இவ்வாறு எஸ்.ஏ.சந்திரசேகர் பேசினார்

Director SAC speech at Maanaadu success meet

கார்த்தியை அடுத்து சிம்புவுடன் டூயட் பாடப் போகும் டைரக்டர் ஷங்கர் மகள்

கார்த்தியை அடுத்து சிம்புவுடன் டூயட் பாடப் போகும் டைரக்டர் ஷங்கர் மகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் ‘விருமன்’ படத்தில் நடித்து வருகிறார் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி.

இதில் மதுரை பாஷையில் பேசி தேன்மொழி கேரக்டரில் நடித்து வருகிறார்.

வழக்கம்போல மதுரையை கதைக்களமாகக் கொண்டு இந்த படத்தை இயக்கி வருகிறார் முத்தையா.

இந்த நிலையில் கோகுல் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘கொரோனா குமார்’ படத்தில் சிம்புக்கு ஜோடியாக நடிக்க அதிதியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

இந்த படம் தவிர சிம்பு கைவசம் ‘வெந்து தணிந்தது காடு’, பத்து தல ஆகிய படங்கள் உள்ளன.

Aditi Shankar joins STR for new film

பனாமா பேப்பர்ஸ் முறைகேடு வழக்கில் நடிகை ஐஸ்வர்யா ராய் ஆஜரானார்

பனாமா பேப்பர்ஸ் முறைகேடு வழக்கில் நடிகை ஐஸ்வர்யா ராய் ஆஜரானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோலிவுட் முதல் பாலிவுட் வரை அறிந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராய்.

தற்போது மணிரத்னம் இயக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்து வருகிறார்.

கடந்த 2016ல் ‛பனாமா பேப்பர்ஸ்’ என்ற தலைப்பில் அந்த நிறுவனத்தின் ரகசிய ஆவணங்கள் வெளியாகின.

இதில் வெளிநாடுகளில் சட்டவிரோதமாக சொத்துகளை வாங்கி குவித்த பிரபலங்கள் விவரங்கள் தெரியவந்தது.

நடிகை ஐஸ்வர்யா ராய் அவரது மாமனாரும் நடிகருமான அமிதாப் பச்சன் ஆகியோரும் வரி ஏய்ப்பு செய்ததாக தகவல் வெளியானது.

இதுதொடர்பாக அந்த நபர்களுக்கு அமலாக்கத்துறை சார்பில் விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பப்பட்டது.

ஐஸ்வர்யா ராய்க்கு ஏற்கனவே 2 முறை சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. இரண்டு முறையும் அவர் தனக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இதனால் இன்று அவர் ஆஜர் ஆவாரா என்ற சந்தேகம் எழுந்தது.

இந்த நிலையில் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி தன் தரப்பு விளக்கத்தை ஐஸ்வர்யா ராய் அளித்துள்ளார்.

பனாமா பேப்பர்ஸ் முறைகேடு வழக்கில் கிட்டத்தட்ட 300 இந்தியர்களின் பெயர்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Aishwarya Rai was summoned by ED in connection with the Panama Papers case.

‘பொன்னியின் செல்வன்’ படத்தை உலகளவில் கொண்டு செல்ல படக்குழு திட்டம்

‘பொன்னியின் செல்வன்’ படத்தை உலகளவில் கொண்டு செல்ல படக்குழு திட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைகா நிறுவனம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து ரூ 500 கோடி பட்ஜெட்டில் தயாரித்து வரும் திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’.

மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது இந்த திரைப்படம்.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு ஏ .ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.

தற்போது இப்படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

அடுத்த ஆண்டு 2022 கோடை விடுமுறையில் ஏப்ரல் மாத்த்தில் PS1 (முதல் பாகம்) திரைக்கு வருகிறது.

இந்த நிலையில் இப்பட இசை விழாவை மலேசியா, துபாய் உள்ளிட்ட நாடுகளில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

இதன் மூலம் PS1 என்ற பிரம்மாண்ட படத்திற்கு உலகளவில் விளம்பரம் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Mani Ratnam’s Ponniyin Selvan audio launch updates

RRR ரிலீஸாகி 4 மாசத்துக்கு வேற படங்கள் ரிலீஸ் ஆகாம இருந்தா நல்லது.. – சல்மான் கான்

RRR ரிலீஸாகி 4 மாசத்துக்கு வேற படங்கள் ரிலீஸ் ஆகாம இருந்தா நல்லது.. – சல்மான் கான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராஜமௌலி இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட், ஸ்ரேயா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘ஆர்ஆர்ஆர்’.

பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘ஆர்ஆர்ஆர்’ படம் ஜனவரி 7ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகவுள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் RRR படம் ரிலீசாகிறது.

எனவே தற்போது இப்படத்தின் பிரமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று மும்பையில் ஆர்ஆர்ஆர் ஹிந்தி பதிப்புக்கான விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் சல்மான்கான் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் சல்மான்கான் பேசியதாவது…

“ராம்சரணை நான் சந்திக்கும் போது அவர் ஏதாவது விபத்து காயம்பட்டு ஓய்வில் இருப்பார்.

அதாவது அவர் நடிக்கும் பட சூட்டிங்கில் காயமடைந்துவிடுவார். அந்த அளவிற்கு கடின்உழைப்பாளி அவர்

ஜுனியர் என்டிஆர் ஒரு யதார்த்த நடிகர். அவரது நடிப்பை நேசிக்கிறேன்,

‘ஆர்ஆர்ஆர்’ படம் ரிலீசுக்கு பிறகு குறைந்தது 4 மாதங்களுக்காவது வேறு யாரும் படத்தை ரிலீஸ் செய்யாமல் இருப்பது நல்லது.

அந்த அளவிற்கு ஆர்ஆர்ஆர் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது,” என பேசினார் சல்மான்கான்.

Salman Khan speech at RRR pre release event

என்கிட்ட வர்றவங்களுக்கு தில் வேணும்.; என் கூட ஒர்க் பண்ணினவங்களுக்கு சான்ஸ் தர மாட்டுறாங்க.. – ரஞ்சித்

என்கிட்ட வர்றவங்களுக்கு தில் வேணும்.; என் கூட ஒர்க் பண்ணினவங்களுக்கு சான்ஸ் தர மாட்டுறாங்க.. – ரஞ்சித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிமுக இயக்குனர் ப்ராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் சமுத்திரக்கனி, திலீபன், இனியா, ஜானி ஹரி, லிஸ்ஸி ஆண்டனி, மகேஸ்வரி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘ரைட்டர்’.

ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இயக்குனர் ரஞ்சித் இந்த படத்தை தயாரிக்க 96 பட புகழ் கோவிந்த வசந்தா இசையமைத்துள்ளார்.

அதிகாரமிக்க காவல்துறையில் அதே துறையில் பணி புரியும் ரைட்டருக்கு ஏற்படும் வலியை சொல்கிறது இந்த படம்.

டிசம்பர் 24ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படக்குழுவினர் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

இந்த சந்திப்பின் போது தனது குமுறலை வெளிப்படுத்தினார் ரஞ்சித்.

அவர் பேசியதாவது…

எங்கள் அரசியலை புரிந்தவர்களுடன் நான் பணிபுரிகிறேன். என் அலுவலக கதவு எப்போதும் திறந்தே இருக்கும்.

என்கிட்ட வர்றவங்களுக்கு ஒரு தில்லு வேணும்.

என் படங்களில் வேலை பார்த்த தொழில்நுட்ப கலைஞர்கள் முதல் நடிகர்கள் வரை அனைவரும் என்னை போலவே சிந்திப்பார்கள் என நினைக்கிறார்கள்.

மெட்ராஸ் படத்தில் ஜானியாக நடித்தார் ஹரி. அவர் திறமைசாலி. ரைட்டர் படத்தில் கூட நடித்துள்ளார். எனக்கே அது முதலில் தெரியாது.

அவருக்கு சினிமாவில் நிறைய வாய்ப்புகள் வரும் என நினைத்தேன். ஆனால் அவனைப் போன்றவர்களுக்கு என்னுடன் பணி புரிந்தததால் வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது.

இது அப்பட்டமான உண்மை” என ரஞ்சித் ஆதங்கமாக பேசினார்.

Pa Ranjith speech at Writer press meet

More Articles
Follows