தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி, காலா படங்களை இயக்கியவர் ரஞ்சித்.
அதன்பின்னர் அவர் தமிழ் படங்கள் இயக்காமல் படங்களை தயாரித்து வருகிறார்.
தற்போது ஹிந்தியில் பிர்சா முண்டா என்ற படத்தை இயக்கி வருகிறார்.
மேலும் தினேஷ் நடிக்கும் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு என்ற தமிழ் படத்தை தயாரித்து வருகிறார்.
இந்த நிலையில், வேலூரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு செய்தியாளர்களிடம் பேசும்போது…
காலா படத்தின் இரண்டாம் பாகம் குறித்து கேள்வி கேட்டனர்.
காலா 2 படம் இயக்கும் வாய்ப்பு இல்லை. ஆனால் அதுபோன்ற படங்கள் இனி அதிகம் வரும்” என்றார்.