மீண்டும் எம்ஜிஆரை உயிரோடு கொண்டு வரும் பி.வாசு

மீண்டும் எம்ஜிஆரை உயிரோடு கொண்டு வரும் பி.வாசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

MGRஇந்திய திரையுலகின் மக்கள் திலகம் எம். ஜி. ஆர், விரைவில் உலகெங்கும் வெள்ளித்திரையில் புதிய பரிணாமத்தில் “என் ஃபேஸ்” எனும் முற்றிலும் புதிய, அற்புத தொழிட்நுட்பத்தின் மூலம் வலம் வர இருக்கிறார்.

மலேசியாவின் சர்வதேச ஊடக தொழிற்நுட்ப நிறுவனம் ஆரஞ்ச் கவுண்டி, இத்தொழிற்நுட்பத்தை கொண்டு கடந்த கால கதாபாத்திரங்களை நிழற்பட யதார்த்தத்தின் மூலம் உயிரோட்டமாக திரையில் உருவாக்கும் ஒரு மென்பொருளை வடிவமைத்துள்ளது.

மலேசியாவின் ஆரஞ்ச் கவுண்டி நிறுவனமும், முன்னணி சர்வதேச ஹாலிவூட் VFX தொழிட்நுட்ப வல்லுனர்களும் இணைந்து, இந்திய திரையுலகின் மக்கள் திலகம் எம். ஜி. ஆர் என்றழைக்கபடும் ராமச்சந்திரன் அவர்களை, ஒரு சர்வதேச திரைப்படத்தின் மூலமாக மக்கள் முன் மீண்டும் உயிரோட்டமாக காட்சிப்படுத்த இருக்கிறார்கள்.

இச்சர்வதேச திரைப்படத்தை புகழ்பெற்ற இயக்குனர் பி. Pவாசு இயக்குகிறார். கதை களமும், கதாபாத்திரங்களும் முறையே மலேசியாவிலும், இந்தியாவிலும் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்திய, பிராந்திய மற்றும் சர்வதேச நடிக-நடிகையர்கள் மற்றும் கலைஞர்கள் இதில் பங்குபெற இருக்கிறார்கள்.

ஆரஞ்ச் கவுண்டி மலேசியா, “என் ஃபேஸ்” என்ற தனது புதிய, மிகவும் மேம்பட்ட தொழிற்நுட்பத்தை, உலக புகழ்பெற்ற காட்சி விளைவு வடிவமைப்பு வல்லுனர்களின் பங்களிப்போடு நடைமுறைபடுத்துவதில், ஒரு சர்வதேச முன்னணி தொழிற்நுட்ப வல்லுனர்களின் குழுமமாக திகழ்கிறது.

சர்வதேச தயாரிப்பான இத்திரைப்படம் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், சீனா, தாய்லாந்து, மற்றும் அமெரிக்காவிலும் படமாக்கப்பட இருக்கிறது.

இத்திரைப்படம் முழுவதுமே முப்பரிமாண ஸ்டீரியோஸ்கோபிக் முறையில் தயாரிக்கப்படுவதாலும், ஒவ்வொரு காட்சியுமே முப்பரிமாண முறையில் காட்சிப்படுத்தப்பட இருப்பதாலும், இது மக்களுக்கு ஒரு பெரிய விருந்தாக அமையும்.

இருப்பினும், இத்தகைய மேம்பட்ட கலைப்படைப்புகளை உருவாக்குவது என்பது பல்வேறு சவால்களுக்கு பிறகே கைகூடியது எனலாம். இரண்டு வருடங்களுக்கும் மேலாக முன் உற்பத்தி வேலைகளில் தன் முனைப்புடன் இந்நிறுவனம் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, இப்புகழ்பெற்ற நடிகரின் ஒவ்வொரு அசைவையும், முக பாவத்தையும், நடத்தையையும் மிகவும் கவனமாகவும் நுணுக்கமாகவும் செயற்கை அறிவாற்றல் தொழிற்நுட்பங்கள் மூலம் பதிவு செய்துள்ளது.

ஆரஞ்ச் கவுண்டி தலைமை செயல் அதிகாரி டத்தோ மார்கழி பழனி கூறும் போது, “இயக்குனர் வாசுவின் தந்தை எம்.ஜி.ஆரின் ஒப்பனை கலைஞராக பணியாற்றிய காரணத்தால், எம்.ஜி.ஆரின் மிக நுண்மையான அசைவுகள், நடத்தைகள், முகபாவங்கள் அனைத்தையும் மிக அருகிலேயே இருந்து, கூர்ந்து கவனிக்கும் வாய்ப்பும், அவரோடு நெருங்கி பழகும் வாய்ப்பும், இயக்குனர் வாசுவிற்கு இயல்பாகவே அமைந்தது.

அதனாலேயே இத்திரைப்படத்தை இயக்குவதற்கு சரியான தேர்வாக அவரை கருதுகிறோம்.

மேலும் அவரது படைப்புகள் வாசு ஒரு திறமையான இயக்குனர் என்பது பறைசாற்றும் விதத்திலேயே அமைந்துள்ளதால், இத்திரைபடத்திற்க்கும் தேவையான தனிச்சிறப்புடைய பங்களிப்பை அவர் தருவார்”.

ஆரஞ்ச் கவுண்டியின் தலைமை தொழிற்நுட்ப அதிகாரி விமலநாதன்,

“இந்தியாவில் எம்.ஜி.ஆர் இன்றும் கடவுளின் அவதாரமாகவே தமிழ் மக்களால் பார்க்கப்படுகிறார். மலேசியாவிலும் ஒவ்வொரு மாநிலத்திலும் அவருக்கு ரசிகர் மன்றங்கள் உள்ளன.

அன்னாரது சமாதிக்கு வருகை தரும் எண்ணிலடங்கா மக்களின் மனங்களில் இன்றளவும் அவர் வாழ்கிறார் என்பதே அவரது அபிமானத்திற்கு ஒரு மிகப் பெரிய சாட்சி.

அவர் மறைந்து இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு, அந்த வெற்றிடத்தை நிரப்பும் வகையில் மீண்டும் வெள்ளித்திரையில் அவர் உயிர்பெறும் காட்சிகள், மக்கள் மனதில் ஒரு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தும். வணிக நோக்கிலும் ஒரு புதிய மற்றும் ஆக்கப்பூர்வமான மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியாகவே அமைகிறது.

எம். ஜி. ஆர் குறித்து உருவாக்கியுள்ள டிஜிட்டல் உருவகங்களைக் கொண்டே, வருங்காலத்தில் திரைப்படங்களோ அல்லது விளம்பர படங்களோ உருவாக்க முடியும் என்பதால், இந்த முயற்சி முன்னுரிமை பெறுகிறது”.

“உலகெங்கிலும் பரவியுள்ள தமிழ் மக்களிடையே எம். ஜி. ஆர் ஒரு உயர்ந்த அடையாளமாகவே திகழ்கிறார். இத்திரைப்பட வெளியீட்டின் போது, பல்வேறு விற்பனை பொருட்கள் அவரை நினைவு கூறும் வகையில் வெளியிடப்பட்ட உள்ளது.

இது மறக்கவியலாத ஒரு மாமனிதரின் திருவிழாவாகவே கொண்டாடப்பட இருக்கிறது” என்கிறார் ஆரஞ்ச் கவுண்டியின் ஹர்நரைன் கில்.

இத்திரைப்படத்தின் ஆக்கபூர்வ தயாரிப்பாளரில் ஒருவராகவும், சர்வதேச ஸ்கிரிப்ட் ஆலோசகராகவும் பங்காற்றும் எம். வெங்கடேசன், “இந்த திட்டம் ஒரு தனித்துவமான சர்வதேச தயாரிப்பு மற்றும் சர்வதேச சந்தைப்படுத்துதல் முறைகளை உள்ளடக்கி இருப்பதால், இம்முயற்சி உலக அளவில் ஆசிய திரைப்படங்களுக்கான ஒரு புதிய பாதையை வடிவமைத்து தரும் எனலாம்”.

மேலும் நேர்முக கதாபாத்திரங்களை திரைப்படங்கள், கண்காட்சிகள், மற்றும் தேர்தல் பிரச்சாரங்களுக்காக வடிவமைக்கும் நோக்கில் பல்வேறு நிறுவனங்களுடன் இந்த கூட்டமைப்பு தீவிரமான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இரு வேடம் போட்டு த்ரிஷா ஆடும் *பரமபதம் விளையாட்டு*

இரு வேடம் போட்டு த்ரிஷா ஆடும் *பரமபதம் விளையாட்டு*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

trishaநடிகை த்ரிஷா, தற்போது ‘பரமபதம் விளையாட்டு’ என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். மேலும் படத்தில் நந்தா, ரிச்சர்ட், வேலராமமூர்த்தி உட்பட பலர் நடிக்கின்றனர். படத்திற்கு அம்ரிஷ் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தை திருஞானம் இயக்கி வருகிறார்.

இந்தப் படம் பற்றி இயக்குனர் திருஞானம் கூறுகையில்…

‘‘இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா,மருத்துவராகவும், மருத்துவரின் தாயாகவும் என இரு கேரக்டரில் நடிக்கிறார். இதன் இறுதி கட்டட படப்பிடிப்பு ஏற்காட்டில் உள்ள ராபர்ட் கிளைவ்மெண்க்ஷனில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் கதை த்ரிஷாவுக்கு புதியது. படத்தின் கதையை கேட்டவுடன் படத்தில் நடிக்க சம்மதித்தார்.

கடினமான காட்சிகளில் கூட ஒரே டேக்கில் நடித்துக் கொடுத்தார். சரியானவற்றை சரியான இடத்தில சரியான நேரத்தில் சொல்ல வேண்டும் என்பார்கள்.

ஆனால் சரியான ஒரு விசயத்தை தவறான நேரத்தில் சொல்வதால் என்ன விளைவு ஏற்படுகிறது என்பது தான் இப்படத்தின் கரு.” என்று கூறினார்.

திருப்பங்கள் நிறைந்த கதையாக உருவாகி வருகிறது. இதில் நந்தா, ரிச்சர்ட், வேலராமமூர்த்தி உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு

வர்மா-வை முடித்துவிட்டு உதயநிதியுடன் இணையும் பாலா

வர்மா-வை முடித்துவிட்டு உதயநிதியுடன் இணையும் பாலா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

udhayanidhi and balaபாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள வர்மா திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இதனையடுத்து உதயநிதி நடிக்கவுள்ள ஒரு படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

அண்மைக்காலமாக பிரபல இயக்குனர்களுடன் உதயநிதி பணியாற்றி வருவதை நாம் பார்க்கிறோம்.

பிரியதர்ஷன் இயக்கத்தில் நிமிர் படத்தில் நடித்தார். அதைத் தொடர்ந்து சீனுராமசாமி இயக்கத்தில் கண்ணே கலைமானே படத்தில் நடித்தார்.

அதன்பின் தற்போது மிஷ்கின் இயக்கத்தில் சைக்கோ என்கிற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

அப்படத்தின் படப்பிடிப்பு இப்போது சென்னையில் நடந்துகொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம் மகன் துருவ்வுக்கு ரொமான்ஸை கூட சீரியஸாக சொன்ன பாலா

விக்ரம் மகன் துருவ்வுக்கு ரொமான்ஸை கூட சீரியஸாக சொன்ன பாலா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhruv and balaதெலுங்கில் ஹிட் அடித்த அர்ஜூன் ரெட்டி படத்தை இயக்குநர் பாலா தமிழில் ரீமேக் செய்துள்ளார்.

இந்தப் படத்தின் மூலம் விக்ரமின் மகன் துருவ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகிறார்.

துருவ் விக்ரமுக்கு ஜோடியாக வங்காள மொழி நடிகை மேகா நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் ரைசா நடித்துள்ளார்.

இ4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு இயக்குநர் ராஜு முருகன் வசனம் எழுதுகிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் துருவ்வின் பிறந்த நாளில் டீசர் வெளியிடப்பட்டது.

இதற்கான விழா சென்னை வடபழனியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் பாலா தனது படத்தின் ஹீரோ துருவ்வை அறிமுகப்படுத்தினார்.

விழாவில் கலந்துக் கொண்டு பேசிய துருவ்வின் தந்தையும் நடிகருமான விக்ரம், “ஒரு அறிமுக நாயகனை வைத்து பாலா முதல்முறையாக இயக்குகிறார். தனது மகனை பாலா அறிமுகம் செய்வது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.

படத்தின் நாயகன் துருவ் பேசுகையில்…

“இயக்குநர் பாலா இயக்கியதால் தான் நடித்தேன் என்றும், இந்த வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி என்றார். பின்னர், துருவ் பிறந்த நாளையொட்டி கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

இதனிடையே நிகழ்ச்சி தொகுப்பாளர் இயக்குநர் பாலாவிடம் காதல் காட்சிகளை நடிகர் துருவ்வுக்கு எப்படி சொல்லி கொடுத்தீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த இயக்குநர் பாலா, சீரியஸாக சொல்லி கொடுத்ததாக கூறினார்.

எக்ஸ் லவ்வர்ஸ் புது ஜோடியுடன் மீட்டிங்: பிரியதர்ஷினியின் புது ஐடியா!

எக்ஸ் லவ்வர்ஸ் புது ஜோடியுடன் மீட்டிங்: பிரியதர்ஷினியின் புது ஐடியா!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

priyadharshiniVIBGYOR க்ரியேடிவ்ஸ் வழங்கும் பொன்மாலை பொழுது என்கிற குறும்படத்தின் மூலம் இயக்குனராக அடியெடுத்துள்ளார் பிரியாதர்ஷினி.

தந்தி டிவி உட்பட சில சேனல்களில் ப்ரீலான்ஸ் நிகழ்ச்சி தொகுப்பாளராக, அதன்பின் விளம்பரப்படங்களில் உதவியாளராகவும் பணிபுரிந்த இவரது இயக்குனர் கனவுக்கு ஆரம்ப விதை போட்டுள்ளது இந்த ‘பொன்மாலை பொழுது’ குறும்படம்…

சமீபத்தில் இந்த குறும்படம் பெங்களூரில் நடைபெற்ற சர்வதேச குறும்பட திருவிழாவில் கலந்துகொண்டு பாராட்டுக்களை பெற்றுள்ளதால் உற்சாகத்தில் இருக்கிறார் பிரியா.

குறும்பட திருவிழாவில் கலந்துகொள்வதற்கான படமாக இதை எடுக்கவில்லை என்றாலும், இதை பார்த்தவர்கள் கொடுத்த உற்சாகத்தினால் விழாவிற்கு அனுப்பியதாக கூறுகிறார் பிரியா.

முன்னாள் காதலர்கள் இருவர் ஏதேச்சையாக ஒரு காபி ஷாப்பில் சந்தித்துக்கொள்கிறார்கள்.. ஆனால் அவர்களின் புது ஜோடிகளுடன்.

அந்த 15 நிமிட சந்திப்பில் இருவருமே மைன்ட் வாய்ஸ் மூலமாக கடந்தகாலத்தை அசைபோடுகிறார்கள்.

அதில் என்ன பேசிக்கொள்கிறார்கள்..? அவர்கள் மீண்டும் சேருவார்களா மாட்டார்களா என்பதுதான் இந்த குறும்படத்தின் கதை..

பிரியாவும் அவரது நண்பர் கலேஷும் இதேபோல ஒரு காபிஷாப்பில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது இந்த கான்செப்ட் தோன்றவே, அங்கேயே அமர்ந்தபடி அதற்கான மொத்த வசனங்களையும் பேசி முடிவுசெய்து விட்டார்களாம்.

இந்த குறும்படத்தில் முன்னாள் காதலர்களாக, மோகன் ராஜாவால் தனி ஒருவன் படத்தில் அறிமுகமாகிய த்யேட்டர் ஆர்டிஸ்ட் கலேஷ் ராமானந்த மற்றும் மாடல் லாவண்யா நடித்துள்ளனர்.

இன்றைய காதலர்கள் பெரும்பாலும் பிரிவதற்கு காரணம் வெளியில் எதிர்மறையாக இருக்கும் விஷயங்களை விட அவர்களுக்குள்ளேயே இருக்கும் ஈகோ, எதிர்மறை எண்ணம் தான் உண்மையான காரணம் என்கிற விஷயத்தை அழுத்தமாக பதிவு செய்துள்ளார் பிரியா.

சிவகார்த்திகேயன் படத்திற்கு விஜய் பாடல் தலைப்பா.? என்ன சொல்கிறார் ராஜேஷ்..?

சிவகார்த்திகேயன் படத்திற்கு விஜய் பாடல் தலைப்பா.? என்ன சொல்கிறார் ராஜேஷ்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan and rajeshஎம்.ராஜேஷ் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்து வருகிறார்.

இப்படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைக்க, ஞானவேல்ராஜா தயாரித்து வருகிறார்.

இப்படத்துக்கு ‘ஜித்து ஜில்லாடி’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

‘ஜித்து ஜில்லாடி’ என்பது விஜய் நடிப்பில் வெளியான ‘தெறி’ படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் முதல் வரியாகும்.

ஆனால், இந்தச் செய்தியை இயக்குநர் ராஜேஷ் ட்விட்டரில் மறுத்துள்ளார். சிவகார்த்திகேயன் படத்துக்கான தலைப்பு இன்னும் முடிவாகவில்லை என்றும், அதிகாரபூர்வ அறிவிப்பின் மூலம் அனைவருக்கும் தெரிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

More Articles
Follows