அற்புதமான நடிகரால் அனைத்தும் அர்த்தமுள்ளதாகிறது..; சிம்புவை புகழும் கௌதம் மேனன்

அற்புதமான நடிகரால் அனைத்தும் அர்த்தமுள்ளதாகிறது..; சிம்புவை புகழும் கௌதம் மேனன்

சுமார் 5 ஆண்டுகளுக்கு பிறகு சிம்பு கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் ‘வெந்து தணிந்தது காடு’.

வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்க இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

ராதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சிம்புக்கு ஜோடியாக காயட் லோஹர் என்பவர் நடிக்கவுள்ளார்.

இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு திருச்சந்தூரில் எடுக்கப்பட்ட நிலையில், இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது தொடங்கி நடந்து வருகிறது.

இது வரை ஏற்றிடாத வித்தியாசமான கதாபாத்திரத்தில் சிம்பு நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது.

இதில் சிம்பு அழுக்கு கைலி மற்றும் பனியனுடன் அமர்ந்திருக்கிறார். அவர் கடுமையான வேலை செய்து விட்டு களைப்பில் இருப்பது போல உள்ளது.

படுக்க கூட இடம் இல்லாத ஓர் எளிய அறையில் பலர் நெருங்கி உட்கார்ந்தும் படுத்திருப்பதும் போலவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வித்தியாசமான இந்த செகண்ட் லுக் டிசைன் ரசிகர்களால் சமூக வலைத் தளத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

இந்த படத்தின் ஸ்டில்கள் மற்றும் சிம்புவின் லுக்கை பார்த்தால் பாலா படம் போன்ற பாணியே தெரிகிறது. சிம்புவை பார்த்தால் பரிதாபம் கொள்ளும் நிலையில் தோற்றம் உள்ளது.

இந்த நிலையில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் 2-வது போஸ்டரைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கெளதம் மேனன் குறிப்பிட்டு இருப்பதாவது:

“ஒரு அற்புதமான நடிகர் பணிபுரியும்போது அனைத்தும் அர்த்தமுள்ளதாகிறது. சிலம்பரசன் மற்றும் இதை மிகவும் சுலபமானதாக மாற்றும் பல அற்புதமான தொழில்நுட்பக் கலைஞர்களுடன் படப்பிடிப்பில் இருப்பது மிகவும் அருமையான விஷயம். இது இரண்டாவது போஸ்டர்”.

இவ்வாறு கெளதம் மேனன் அதில் குறிப்பிட்டுள்ளார்.

When there’s a brilliant actor at work, it all makes sense. It’s so good to be filming with the terrific @SilambarasanTR_ and a bunch of superb technicians who also make it look so easy. Here’s poster 2.. https://t.co/x1yyPRjhP3

Director Gautham Menon praises Actor Simbu for his dedication

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *