3 பெண்களுடன் என்னை ஆட வைச்சுட்டியே.; ராதிகாவிடம் புலம்பிய ராம்கி

3 பெண்களுடன் என்னை ஆட வைச்சுட்டியே.; ராதிகாவிடம் புலம்பிய ராம்கி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நட்டி, ராம்கி, பூனம் பஜ்வா, சஞ்சனா சிங், அஸ்மிதா, ரிஷா, ரவிமரியா, ரேகா சுரேஷ், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘குருமூர்த்தி’.

தனசேகரன் இயக்கியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடன இயக்குனர் ராதிகா பேசும்போது…

“இந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கும் நான்கு பாடல்களும் வெவ்வேறு ஜானர்களில் நடனம் அமைப்பதற்குச் சவால் விடும் பாடல்களாக அமைந்திருந்தன. இந்தப் படத்தின் இசையமைப்பாளர் என்னை வேலைவாங்க வேண்டும் என்பதற்காகவே பிளான் பண்ணி இசையமைத்தது போல பாடல்களுக்கு சூப்பராக இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் மூன்று பெண்களுடன் சேர்ந்து என்னை ஆட வைத்து விட்டாயே என்று ராம்கி செல்லமாகப் புலம்புவார். அதேபோல நடிகர் நட்டி ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய படங்களில் நான் மாஸ்டராக வேலை பார்த்திருந்தாலும் முதன்முறையாக அவரை ஆட்டிப்படைக்கும் வாய்ப்பு இந்த படத்தின் மூலம் கிடைத்தது” என்று கூறினார்.

Choreographer Radhika speech at Gurumoorthy Audio launch

மூன்று நாளில் பிரமாண்ட வசூல் அள்ளிய ‘லவ் டுடே’…

மூன்று நாளில் பிரமாண்ட வசூல் அள்ளிய ‘லவ் டுடே’…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘கோமாளி’ பட இயக்குனர் பிரதீப் நாயகனாக நடித்து இயக்கியுள்ள திரைப்படம் ‘லவ் டுடே’.

இந்த படத்தில் சத்யராஜ், இவானா, ரவீனா ரவி, யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

யுவன் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

நவம்பர் 4ம் தேதி தமிழகத்தில் வெளியீட்டும் உரிமையை ரெட் ஜயண்ட் நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படம் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அதனால், மூன்று நாளில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 15 கோடி வரை வசூல் அள்ளியதாக கூறப்படுகிறது.

Love Today movie three Days Collections

‘தப்பெல்லாம் தப்பே இல்லை.. பாடலை அடுத்து கவிஞரின் ‘ஐயோசாமி நீ எனக்கு வேணாம்..’

‘தப்பெல்லாம் தப்பே இல்லை.. பாடலை அடுத்து கவிஞரின் ‘ஐயோசாமி நீ எனக்கு வேணாம்..’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

“ஐயோ சாமி நீ எனக்கு வேணாம் பொய் பொய்யா சொல்லி ஏமாத்தினது போதூம் ”

கணவனால், காதலனால் ஏமாற்றப்பட்ட பெண்களின் சர்வதேச கீதமாக ஒரு பாடல் வெளிவந்து வைரலாகி வருகிறது.

? ▶️ https://youtu.be/xk5s4JMqwkA

விஜய் ஆண்டனியின் “நான்” திரைப்படத்தில் ‘தப்பெல்லாம் தப்பே இல்லை’ பாடலை எழுதிய தமிழ் சினிமாவில் அறிமுகமான இலங்கை கவிஞர் பொத்துவில் அஸ்மின்தான் இப்பாடலை எழுதியுள்ளார்.

இவர் ஏற்கனவே விஸ்வாசம்,அண்ணாத்த படங்களுக்கு எழுதிய புரோமோ பாடல்கள் வைரலாகின. ஜெயலலிதாவின் இரங்கல் பாடலையும் இவரே எழுதியுள்ளார்.

பாடலுக்கு இசையமைத்துள்ளார் இலங்கையின் தேசிய விருதுபெற்ற இசையமைப்பாளர் சனுக பாடலைப்பாடியுள்ளார் பிரபல இலங்கை பாடகி வின்டி குணதிலக்க.

மொழி தெரியாமலே உலக இசை ரசிகர்களால் கொண்டாடப்பட்ட மனிகே மகே ஹித்தே பாடல் போல் இலங்கையில் இருந்து வெளிவந்துள்ள இப்பாடலும் அனைத்து இசை ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

Ayyo Saami Nee Enaku Venaam song goes viral

? ▶️ https://youtu.be/xk5s4JMqwkA

ஐயோ சாமி

Artiste – Windy Goonatillake
Lyrics – Pottuvil Asmin
Melody & Music – Sanuka Wickramasinghe
All Keys & Guitalele – Sanuka Wickramasinghe
Mixing & Mastering – Sanuka Wickramasinghe

Visualization – Vihayas Productions
Creative Director – Prasad Aluthwattha
Visual & Motion Design – Prasad Aluthwattha
Production Manager – U Rasta G Bandaragoda
Videography / Still Photography – U Rasta G Bandaragoda
Production Assistant – Pasan Rathnayake

நகைக் கடை கொள்ளையில் இணைந்த அஜித் – பூஜா.; ‘ஆதாரம்’ கிடைத்தது

நகைக் கடை கொள்ளையில் இணைந்த அஜித் – பூஜா.; ‘ஆதாரம்’ கிடைத்தது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹாலிவுட் பாணியில் தமிழில் ஒரு ஹெய்ஸ்ட் திரில்லர், வெளியானது ஆதாரம் படத்தின் அதிரடி டீசர் !!

MATINEE FOLKS நிறுவனம் சார்பில் G.பிரதீப்குமார், ஆப்ஷா மைதீன்
தயாரிப்பில், இயக்குநர் கவிதா இயக்கத்தில், புதுமுகங்கள் நடித்திருக்கும் அதிரடி ஹெய்ஸ்ட் திரில்லர் திரைப்படம் ‘ஆதாரம்’.

இப்படத்தின் டீசரை திரை பிரபலங்கள் நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் PS மித்ரன், ஒளிப்பதிவாளர் PG முத்தையா மற்றும் இயக்குநர் S R பிரபாகரன் ஆகியோர் வெளியிட்டனர்.

நம் கண் பார்க்கும் விஷயங்களில் விவரங்கள் குவிந்திருக்காது. அது எளிதில் மறந்து போகும் ஆனால் சிசிடிவியின் கண்கள், பார்த்த அனைத்தையும் சேமித்து வைக்கும் அது அழிந்து போகாது.

இந்த கருவை மையமாக கொண்டு நகை கடை கொள்ளையின் பின்னணியில் உருவாகியுள்ள திரைப்படம் தான் “ஆதாரம்”.

திரை பிரபலங்கள் வெளியிட்ட இப்படத்தின் டீசர், சமூக வலைதளங்களில் ரசிகர்களிடன் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழ் சினிமாவில் அதிகம் சொல்லப்படாத ஹெய்ஸ்ட் ஜானரில், காதல் கமர்ஷியல் அம்சங்கள் கலந்து, அனைவரையும் கவரும் வண்ணம் இப்படம் உருவாகியுள்ளது. மேலும் இயக்குநர் சீனு ராமசாமி அவர்கள் இந்த டீசரை பகிர்ந்து கவனம் ஈர்க்கும் டீசர் வாழ்த்துக்கள் என பாராட்டியுள்ளார்.

இப்படத்தில் புதுமுக நடிகர் அஜித் விக்னேஷ் நாயகனாக நடிக்க, பூஜா நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் ராதாரவி, Y.G.மகேந்திரன், கதிரவன் பாலு, அட்ரஸ் கார்த்திக் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

MATINEE FOLKS நிறுவனம் சார்பில் G.பிரதீப்குமார், ஆப்ஷா மைதீன்
தயாரித்துள்ள இப்படத்தை, அறிமுக இயக்குநர் கவிதா இயக்கியுள்ளார்.

வசனங்களை கவிதா மற்றும் ராசி தங்கதுரை இணைந்து எழுதியுள்ளனர். N.S.ராஜேஷ் குமார் & ஶ்ரீவட்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளனர். டாய்ஸ்.M எடிட்டிங் பணிகள் செய்துள்ளார். மக்கள் தொடர்பு பணிகளை பரணி அழகிரி, திருமுருகன் செய்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் படத்தின் இறுதிகட்ட வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. படத்தின் டிரெய்லர், இசை வெளியீடு மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

கமலின் பிறந்தநாள் பார்ட்டி மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்து..!

கமலின் பிறந்தநாள் பார்ட்டி மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்து..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய சினிமாவின் சகலகலா வல்லவர் என்றால் அது உலக நாயகன் கமல்ஹாசன் தான்.

கமல், தற்போது இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில்,கமல்ஹாசன் இன்று தனது 68வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

அந்த வகையில் நேற்று கமலின் பிறந்தநாள் பார்ட்டி நடைப்பெற்றது.அதில் பிந்து மாதவி உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் கலந்துக்கொண்டனர்.

மேலும்,ட்விட்டரில், அவரது பிறந்தநாளுக்கு மம்முட்டி, குஷ்பு உள்ளிட்ட திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் அவரது ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

கமல்ஹாசன்

celebrities wish Ulaganayagan a happy birthday

கமலுடன் இணைவதை உறுதி செய்த 2 இந்திய பிரபல இயக்குனர்கள்.; காத்திருக்கும் 3 தமிழ் இயக்குனர்கள்

கமலுடன் இணைவதை உறுதி செய்த 2 இந்திய பிரபல இயக்குனர்கள்.; காத்திருக்கும் 3 தமிழ் இயக்குனர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய சினிமாவின் சகலகலா வல்லவன் கமல்ஹாசன் இன்று தனது 68வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

இவரது கைவசம் தற்போது 5 படங்கள் உள்ளன. இதில் 2 உறுதியாகி விட்டது. இவர்கள் இருவரும் இந்திய அளவில் பிரபலமான இயக்குனர்கள் ஆவர்.

‘இந்தியன்2’ படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். கமலின் 234 படத்தை மணிரத்னம் இயக்க உள்ளார்.

இவையில்லாமல் தமிழில் பிரபலமான 3 இயக்குனர்களுடன் இணையவுள்ளார் கமல்ஹாசன்.

மணிரத்னத்துடன் இணைவதை நேற்று உறுதி செய்திருந்தார். இந்த படம் கமலின் 234 ஆவது படமாக உருவாகிறது. இந்த படத்தை மணிரத்னம் கமல்ஹாசன் உதயநிதி ஆகியோர் தயாரிக்க ஏஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

தற்போது லைக்கா தயாரிப்பில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் நடித்த வருகிறார்.

இதனையடுத்து 2 பிரபலமான தமிழ் இயக்குனர்களுடன் இணைய உள்ளார் கமல்ஹாசன்.

ஒருவர் லோகேஷ் கனகராஜ். விக்ரம் படத்தில் இணைந்த கூட்டணி மீண்டும் இணைகிறது.

மேலும் பா ரஞ்சித் இயக்கத்தில் கிராமத்து பாணியில் உருவாகும் ஒரு படத்திலும் நடிக்க தயாராக வருகிறார் கமல்.

இந்த நிலையில் ‘துணிவு’ பட இயக்குனர் வினோத் இயக்கத்திலும் ஒரு படத்திலும் கமல் நடிக்க உள்ளார்.

இந்த தகவலை நாம் ஏற்கனவே நம் FILMISTREET தளத்தில் பார்த்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.

Ulaganayagan Kamalhassan upcoming line up..

– A movie with Shankar #Indian2 (Current project)

– A movie with #HVinoth (2023 project)

– A movie with #PaRanjith

– A movie with #ManiRatnam (2023-2024 project)

– A movie with #LokeshKanagaraj

More Articles
Follows