தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நட்டி, ராம்கி, பூனம் பஜ்வா, சஞ்சனா சிங், அஸ்மிதா, ரிஷா, ரவிமரியா, ரேகா சுரேஷ், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘குருமூர்த்தி’.
தனசேகரன் இயக்கியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரவிமரியா பேசும்போது…
“இந்தப் படத்தின் ‘குருமூர்த்தி’ என்கிற டைட்டிலே படத்திற்குப் பலம் தான். புதிதாகப் படம் தயாரிக்க வரும் தயாரிப்பாளர்களுக்கு ஒவ்வொன்றுக்கும் விளக்கம் சொல்லியே படம் எடுப்பது மிகவும் கஷ்டமாக இருக்கும்.
ஆனால் இங்கே ஒரு புரொடக்சன் மேனேஜரே தயாரிப்பாளராக வந்துள்ளதால் இந்தப் படம் ஆரம்பித்தது முதல் முடியும் வரை எந்த ஒரு பிரச்சினைக்கும் இடமே ஏற்படவில்லை. நான் நடிகராக மாறியதும் டைரக்சனை அப்படியே தள்ளிவைத்துவிட்டுத் தான் வந்தேன்.
அதேபோல இந்த படத்தின் இயக்குநர் ஒளிப்பதிவு அல்லது டைரக்சன் என ஏதோ ஒன்றில் கவனம் செலுத்திப் பயணிக்க வேண்டும்.
பத்து வருடத்திற்கு முன்பு நட்டியை ஹீரோவாக வைத்து மிளகா என்கிற படத்தை இயக்கினேன். ஆனால் இப்போதுதான் அவருடன் முதன்முறையாக இணைந்து நடிக்கிறேன். கதாநாயகிகள் அனைவரும் இந்த விழாவில் ஒற்றுமையாக கலந்து கொண்டிருப்பதைப் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது.
மிளகா படத்தில் உதவி எடிட்டராக பணியாற்றிய பாசில் தான் இந்த படத்திற்கு எடிட்டராகப் பணியாற்றி உள்ளார். அப்போதே அவர் பெரிய இடத்திற்கு வருவார் என கூறினேன்’’என்றார்.
Gurumurthy title itself Mass says Ravimariya