சிவகார்த்திகேயன் படத்தலைப்பு *அசால்ட்*?; புகார் கூறும் பூபதிராஜா

சிவகார்த்திகேயன் படத்தலைப்பு *அசால்ட்*?; புகார் கூறும் பூபதிராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Did Sivakarthikeyan next movie titled Assaultசீமராஜாவை அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தை ராஜேஷ்.எம் இயக்கி வருகிறார்.

ஸ்டூடியோ கிரீன் சார்பாக ஞானவேல்ராஜா தயாரிக்கும் இப்படத்தில் நயன்தாரா, தம்பி ராமய்யா, சதீஷ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

இப்படத்திற்கு தலைப்பு இன்னும் வைக்கப்படவில்லை.

ஆனால் அசால்ட் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பறந்தன. இதனையடுத்து ரசிகர்களும் போஸ்டர்களை டிசைன் செய்து வெளியிட்டனர்.

இந்த தலைப்பை தயாரிப்பு நிறுவனம் மறுக்கவில்லை.

இந்நிலையில் இதே தலைப்பில் ஒரு படம் தயாராகி இயக்குனர் பூபதி ராஜா கூறியுள்ளார். அவர் கூறியதாவது:
நான் தற்போது இயக்குனராகி இருக்கிறேன். இதற்கு முன் டான்ஸ் மாஸ்டராக இருந்தேன்.

3 ஆண்டுகளுக்கு முன்பே அசால்ட் என்ற பெயரில் குறும்படம் இயக்கினேன். சிவகார்த்திகேயனும் அந்த படத்தை பார்த்தார்.

தற்போது அதை அசால்ட் குறும்படத்தை திரைப்படமாக எடுத்து வருகிறேன்.

இதில் ஜெய்வந்த், பருத்தி வீரன் சரவணன், செண்ட்ராயன், சோனா நடிக்கிறார்கள். படப்பிடிப்புகள் முடிந்து விட்டது.

படத்தின் தலைப்பை கூட 7 மாதங்களுக்கு முன்பே கில்டில் பதிவு செய்திருக்கிறோம்.

தற்போது அசால்ட் பெயரில் சிவகார்த்திகேயன் படம் உருவாகுவதாக தகவல்களை அறிந்தேன்.

ஆனால் அது படக்குழுவினரின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை என்ற போதிலும் அவர்கள் மௌனம் காப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வெளிப்படையாக கூறினால் நாங்கள் நிம்மதியாக இருப்போம்” என்றார்.

Did Sivakarthikeyan next movie titled Assault

sivakarthikeyans assault

எனக்கா ரெட் கார்டு எடுத்துப் பாரு என் ரெக்கார்டு; விஷாலை எச்சரிக்கும் சிம்பு.?

எனக்கா ரெட் கார்டு எடுத்துப் பாரு என் ரெக்கார்டு; விஷாலை எச்சரிக்கும் சிம்பு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Did Simbus Enakka Red Card song lyrics warns Vishalஅன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தில் தனக்கு ஏற்பட்ட நஷ்டத்தை சிம்பு திருப்பித் தரவேண்டும் என தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தார் மைக்கேல் ராயப்பன்.

இதன் அடிப்படையில் சிம்புவுக்கு தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் மூலம் ரெட் கார்டு (நடிப்பதற்கு தடை) விதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது.

நடிகர் சங்க தேர்தலின் போதே விஷாலுக்கு எதிராக பேசியவர் சிம்பு.

எனவே சிம்புவை பழி வாங்குகிறார் விஷால் என ரசிகர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் ‘வந்தா ராஜாவாத்தான் வருவேன்’ என்ற படத்தி நடித்து வருகிறார் சிம்பு.

லைகா தயாரிக்கும் இப்படத்தை சுந்தர் சி. இயக்கி வருகிறார்.

இப்படத்தில் “எனக்கா ரெட் கார்டு எடுத்துப் பாரு என் ரெக்கார்டு” என ஒரு பாடல் வரிகள் வருகின்றன.

இந்த பாடல்தான் விரைவில் ரிலீசாகவுள்ளது. இந்த பாடல் விஷாலுக்கு சிம்பு தெரிவிக்கும் எச்சரிக்கையாக இருக்கும் என திரையுலகில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Did Simbus Enakka Red Card song lyrics warns Vishal

*புலிமுருகன்* புகழ் ஆர்பி. பாலா *அனுநாகி* படத்தை தொடங்கினார்

*புலிமுருகன்* புகழ் ஆர்பி. பாலா *அனுநாகி* படத்தை தொடங்கினார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Pulimurugan dialogue writer RP Bala started his next movie Anunaagiமோகன்லால் நடித்த ‘புலி முருகன்’ பட வசனம் எழுதிய ஆர்.பி.பாலா ‘அகோரி’ என்கிற படத்தை எடுத்து முடித்துள்ள நிலையில் இப்போது அடுத்து ‘அனுநாகி ‘ படத்தை மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கவுள்ளார்.

“அனுநாகி” தீமைக்கும் நன்மைக்கும் இடையில் நடக்கும் மோதல் ‘இது அறிவியல் சஸ்பென்ஸ் த்ரில்லர் ரகப்படம் என்றாலும் இதில் நட்பு , காதல் , அன்பு , காமெடி பக்தி, கிராபிக்ஸ், சண்டை காட்சிகள் என அனைவரையும் கவரும் வகையில் படமாக்கவுள்ளனர்.

முக்கியமான நட்சத்திரங்கள் நாயகன் நாயகியாக நடிக்கின்றனர்.

ஐஸ்வர்யா ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.

படத்தில் மூன்று வில்லன்கள் . மைம்கோபி, ரியாஸ்கான், தமிழ், தெலுங்கு, இந்தியில் பிரபலமான ‘காலா’ படப்புகழ் ரவிகாலே ஆகியோர் வில்லன்களாக நடிக்கின்றனர்.

‘ராட்சசன் ‘பட வில்லன் சரவணன், ராஜா ‘ரங்குஸ்கி’ விஜயசத்யா, ஆதவ், ‘தொடரி ‘ராஜகோபால், ரியமிகா, சம்யுக்தா, ஆங்கிலோ இந்தியன் ரிச்சர்ட் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

தெலுங்கில் முக்கியமான நடிகர் ஒருவர் எதிர்பாராத கதாபாத்திரத்தில் நடிக்கிறார், ஆர்.பி. பிலிம்ஸ் ஆர்.பி.பாலாவுடன் ராஜ் பிலிம்ஸ் அறந்தை.கே ராஜகோபால் இணைந்து ‘அனுநாகி’ படத்தை தயாரிக்கின்றனர்.

இப்படத்தின் ஒளிப்பதிவு-விசாக் இசை – ஸ்ரீ சாஸ்தா எடிட்டிங் – பாசில் , ஸ்டண்ட் – டேஞ்சர் மணி, மற்றும் சிறந்த தொழில் நுட்ப வல்லுநர்கள் பலரும் இப்படத்தில் பணி புரிகின்றனர்.

இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் ஆர். பி.பாலா எழுத அறிமுக இயக்குநர் ஜெகதீஷ். D படத்தை இயக்குகிறார். மிகவும் பிரமாண்டமான பொருட்செலவில் உருவாகும் இப்படத்தின் பூஜை இன்று விமரிசையாக சென்னையில் நடந்தது.

Pulimurugan dialogue writer RP Bala started his next movie Anunaagi

Anunaagi movie pooja

கஜா பாதிப்புக்கு 1 கோடி நிவாரண நிதி வழங்கினார் சரவணா ஸ்டோர்ஸ் லெஜண்ட் சரவணன்

கஜா பாதிப்புக்கு 1 கோடி நிவாரண நிதி வழங்கினார் சரவணா ஸ்டோர்ஸ் லெஜண்ட் சரவணன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Saravana Stores Legend Saravanan contributes generously for Gaja Cyclone reliefகஜா புயலால் பாதிக்கப்பட்ட நம் தமிழக மக்களுக்கு நிவாரண நிதி வழங்குவதற்காக நேற்று சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் “மாண்புமிகு” தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை சந்தித்து, எங்களின் “தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ்” சார்பாக ரூபாய் 1 கோடி, கஜா புயல் நிவாரண நிதியாக வழங்கியுள்ளோம்.

மேலும் இத்தருணத்தில் நம் தமிழக மக்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்.

புயலால் துயரத்தில் ஆழ்ந்துள்ள நம் சகோதர, சகோதரிகளுக்கு நாம் அனைவரும் நம்மால் இயன்ற சிறிய உதவியோ, பெரிய உதவியோ செய்து இத்துயரத்தில் இருந்து அவர்கள் விரைவில் மீண்டு இயல்பு நிலைக்குத் திரும்ப அனைவரும் ஆதரவு தந்து தங்களால் இயன்ற நிதியுதவி அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நம் விவசாய நண்பர்கள் கஜா புயலின் தாக்குதலால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள். கஷ்டம் நஷ்டம் அனைவரின் வாழ்விலும் வரும் போகும், எதுவும் நிரந்தரம் இல்லை.

மனவுறுதியுடனும், நம்பிக்கையுடனும் செயல்பட்டால் இவ்வுலகில் வெற்றி பெற்று மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும். இதற்கு நம் தமிழக மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு விவசாயிகளுக்கும் பக்கபலமாக இருப்பார்கள் என்று நம்புகிறேன்.

நன்றி.
தலைவர்
Legend சரவணன்

Saravana Stores Legend Saravanan contributes generously for Gaja Cyclone relief

 

தளபதி63-ல் நடிக்க நயன்தாரா கேட்ட சம்பளம் இத்தனை கோடியா.?

தளபதி63-ல் நடிக்க நயன்தாரா கேட்ட சம்பளம் இத்தனை கோடியா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Nayantharas salary in Thalapathy 63 movieஏஆர். முருகதாஸ் இயக்கிய சர்கார் படத்தை முடித்துவிட்டு தன் ஆஸ்தான் இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிக்கவுள்ளார் விஜய்.

இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க ஏஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.

முக்கிய கேரக்டரில் விவேக் மற்றும் யோகிபாபு நடிக்கவுள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அவர் ரூ. 6 கோடி சம்பளம் கேட்பதால் அதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருகிறதாம்.

கோலமாவு கோகிலா வரை ரூ. 4 கோடி வரை சம்பளம் பெற்ற நயன்தாரா அதன்பின்னர் தான் சம்பளத்தை ஏற்றியிருக்கிறாராம்.

கோலமாவு கோகிலா படத்திற்கு அதிகாலை 5 மணி காட்சிகள் திரையிடப்பட்டது இங்கே குறிப்பிடத்தக்கது.

Actress Nayantharas salary in Thalapathy 63 movie

கஜா பாதிப்புக்கு ரஜினி அனுப்பிய பொருட்களை என் தம்பிகள்தான் நிர்வகிக்கிறார்கள் : கஸ்தூரி

கஜா பாதிப்புக்கு ரஜினி அனுப்பிய பொருட்களை என் தம்பிகள்தான் நிர்வகிக்கிறார்கள் : கஸ்தூரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Kasthuri contributes generously for Gaja Cyclone reliefகஜா புயல் தாக்கியதில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது.

புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. புயல் சேதத்தை மதிப்பிடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு உதவ திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் உதவி வருகின்றனர். இந்நிலையில், நடிகை கஸ்தூரி பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைத்தார்.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த கஸ்தூரி, ‘சொல்ல முடியாத துயரில் உள்ள டெல்டா மக்களுக்கு உதவிகளை அள்ளிக்கொடுக்கும் உயர்ந்த உள்ளங்களை வாழ்த்துகிறேன்.

என்னால் முடிந்த அளவில், ரூ.12 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை பாதிக்கப்பட்ட பகுதிக்கு அனுப்பி, நானும் நேரடியாக பாதிக்கப்பட்ட இடங்களுக்கு செல்ல உள்ளேன்.

1000 குடும்பத்திற்கு தேவையான அதிநவீன வாட்டர் ஃபில்டர் மற்றும் போர்வைகள், கொசுமருந்து, காய்ச்சல் நிவாரணி மாத்திரைகள் சானிடரி நாப்கின்கள் அடங்கிய லாரியை அனுப்புகிறோம்.

உணவு பொருட்கள், மருத்துவ உதவி போன்றவை பலதரப்புகளிருந்து வந்துகொண்டிருக்கும் வேளையில், குடிநீர் பற்றாக்குறை பூதாகரமாக தலையெடுத்துள்ளது. இன்னும் நாட்கள் செல்ல செல்ல, சுத்தமான பாதுகாப்பான குடிநீர் மிக பெரிய தேவையாக இருக்க போகிறது. இதற்கு அத்தியாவசியமான 1000 நீர் சுத்திகரிப்பு கருவிகளை அனுப்புகிறோம்.

இந்த சுத்திகரிப்பு கருவிகள் (syphon filter) பேரிடர் காலத்தில் பயன்படுத்த மிகவும் உகந்தவை. எங்கும் எடுத்து செல்லலாம், சுலபமாக பயன்படுத்தலாம், எத்தனை மாசுபட்ட தண்ணீரையும் தெளிந்த பாதுகாப்பான சுத்தமான குடிநீராக மாற்றிவிடும். கொதிக்கவைக்க அவசியமில்லை.

பிளாஸ்டிக் பாட்டில்களையும் கேன்களையும் நாடவேண்டியதில்லை, இரண்டு வருடங்களுக்கு குறையாமல் செலவில்லாமல் குடிநீரை சுத்தப்படுத்திக் கொள்ளலாம் (Recyclable and biodegradeable). வெளிநாட்டில் மட்டுமே இப்போதைக்கு கிடைக்கிறது, இங்கு நம் பயன்பாட்டிற்காக ஆயிரம் ஃபில்டர்களை உடனடியாக தயாரித்து அனுப்பியிருக்கும் சென்னை ராமா வாட்டர் ஃபில்டர் நிறுவனத்திற்கு நன்றி’ என்றார்..

மேலும் ரஜினி அனுப்பிய பொருட்களை கூட நமது தம்பிகள் தான் நிர்வகிக்கிறார்கள். அரசாங்கத்தின் செயல்பாடு உண்மையைச் சொல்லணும்னா முன்னாடி இருந்த பேரிடர்களை விட இந்த முறை அரசின் அணுகுமுறை நல்லா இருக்கு. முதல்வர் ஹெலிகாப்டர்ல பார்த்தார்னா, அவர் ஒரே நேரத்துல எல்லாரையும் பார்க்கணும்னு நினைச்சி இருக்கலாம்.

இருந்தாலும் அவர் தரை மார்க்கமா வந்து பார்த்தா நல்லா தான் இருக்கும். அங்கு ராணுவ உதவி அவசியத் தேவை. மத்திய அரசு இன்னும் வேகமா செயல்படணும். நமக்குத் தெரியாத ஆள்கள் மூலமா உதவிகள் போய்ச் சேர்வதை விட தெரிந்தவர்கள் மூலமா போய்ச் சேர்வது நல்லது’ என்றார்.

Actress Kasthuri contributes generously for Gaja Cyclone relief

Actress Kasthuri contributes generously for Gaja Cyclone relief

More Articles
Follows