தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் விக்ரமின் மகன் துருவ் வர்மா என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிறார்.
பாலா இயக்கவுள்ள இப்படம் அர்ஜீன் ரெட்டி என்ற தெலுங்கி படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இதே ரீமேக் ரூட்டில் தனது மகள் ஜான்வியை அறிமுகம் செய்யவுள்ளார் நடிகை ஸ்ரீதேவி.
மராட்டிய மொழியில் வெற்றி பெற்ற ‘சாய் ராட்’ என்ற படத்தின் இந்தி ரீமேக்கில்தான் ஜான்வி அறிமுகமாகவுள்ளார்.
தனது மகள் ஜான்வி அறிமுகம் பற்றி ஸ்ரீதேவி கூறியதாவது:-
நான் சினிமா துறையில் நீண்ட காலமாக இருந்து வருகிறேன். எனது மகளும் இந்த துறையை தேர்ந்து எடுத்து இருக்கிறாள்.
மனதளவில் நான் அவளை நன்றாக தயார்படுத்தியுள்ளேன்.
எனவே கடினமாக உழைப்பாள். எந்த சவாலையும் சந்திப்பாள்.” இவ்வாறு ஸ்ரீதேவி கூறியுள்ளார்.