யூ ட்யூப் டிரெண்டிங்கில் தனுஷு ராசி நேயர்கள்

யூ ட்யூப் டிரெண்டிங்கில் தனுஷு ராசி நேயர்கள்

harish kalyanஶ்ரீ கோகுலம் மூவிஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரிக்கும் புதிய படம் “தனுஷு ராசி நேயர்களே” இப்படத்தினை புதுமுக இயக்குநர் சஞ்சய் பாரதி இயக்குகிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். படத்தலைப்பை போலவே ராசியை நம்பும் ஒரு இளைஞன் வாழ்வில் அதனால் ஏற்படும் பிரச்சனையும் அதனை தொடர்ந்த அதிரடி சம்பவங்களும் காமெடியாக சொல்லப்பட்டிருக்கிறது. குடும்பத்துடன் கொண்டாடும் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது.

ஹரீஷ் கல்யாண் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ரெபா மோனிகா ஜான் மற்றும் டிகங்கனா சூர்யவன்சி ஆகிய இருவரும் நாயகிகளாக நடித்துள்ளார்கள். யோகிபாபு காமெடி பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் டீஸர் வெளியாகி மில்லியன் பார்வைகளை கடந்து Youtube தளத்தில் சாதனை படைத்து வருகிறது.

இப்படத்தின் பத்திரைகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.

இயக்குநர் சஞ்சய் பாரதி கூறியதாவது…

இந்தப்படம் சுரேஷ் சாரால் தான் ஆரம்பித்தது. அவர் தான் தயாரிப்பாளரை அறிமுகப்படுத்தினார். கதை கேட்டு பிடித்து இந்தப்படத்தை கோகுலம் மூவிஸ் தயாரித்துள்ளார்கள். ராசியை நம்பும் ஒரு ஹீரோ அதற்கேற்ற ஹீரோயினை கலயாணம் செய்ய தேடுவதுதான் கதை. காமெடியாக குடும்பத்தோடு எல்லோரும் பார்க்ககூடிய படமாக இருக்கும். இது நடிகர் தனுஷை மையமாக வைத்து எழுதவில்லை. முதலிலேயே ஹரீஷைத்தான் அணுகினோம். எதிர்வீட்டுப் பையன் மாதிரி ஒரு ஆள் தான் ஹரீஷ் அவர் அந்தக்கால கார்த்திக்கை ஞாபகப்படுத்துவார்.

படத்தின் டிரெய்லரை பார்த்து அடல்ட் காமெடி என்கிறார்கள். ஆனால் இது கண்டிப்பாக அடல்ட் காமெடி படம் கிடையாது. நாயகியின் பெயர் கே ஆர் விஜயா ஒரு மாற்றத்திற்க்காக தான் அந்தப்பெயரை வைத்தோம். படம் பார்க்கும் போது உங்களுக்குத் தெரியும். டிகாங்கனா, ரெபா மோனிகா இருவரும் நாயகி ரோல் சூப்பராக பண்ணியிருக்கிறார்கள். ஜிப்ரான் இசையில் 5 பாடலகள் படத்தில் இருக்கிறது. ஒவ்வொன்றும் வேறு மாதிரி இருக்கும். படம் இறுதிகட்ட பணிகளில் இருக்கிறது. கூடிய விரைவில் திரையில் சந்திக்கிறோம் என்றார்.

யுவன் சங்கர் ராஜாவின் யு-1 வெளியிடும் பிரியா மாலியின் காதல் கொண்டாட்டம்!

யுவன் சங்கர் ராஜாவின் யு-1 வெளியிடும் பிரியா மாலியின் காதல் கொண்டாட்டம்!

Priya Maliயுவன் சங்கர் ராஜாவின் யு-1 ரெக்கார்ட்ஸ், இசைக்கலைஞர்கள் மற்றும் பாடகர்களை சரியான முறையில் ஊக்குவித்து வாய்ப்பளிப்பதில் முதலிடத்தில் இருக்கிறது. பிரியா மாலி இசையமைத்துப் பாடிய ‘துளி தீ’ ஆல்பம், யு டியூப் சேனல் மற்றும் இதர இசைத்தளங்களில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. பன்முகத் திறமை மிக்க பிரியா மாலி பாடலுக்கு இசையமைத்து பாடியதுடன் நடித்திருப்பது, வெகுவான பாராட்டுதல்களை குவித்து வருகிறது. செவிக்கினிய குரல் வளத்துடன், கண்களைக் கவரும் விதத்தில் தோன்றியதற்காக கிடைத்து வரும் அபரிமிதமான பாராட்டு மழையால் பிரியா மாலி அகம் மகிழ்ந்து வருகிறார்.
இது குறித்து விவரித்த பிரியா மாலி, ஆத்மார்ந்தமான அன்பைக் கொண்டாடுவது என்பதுதான் இந்த இசை ஆல்பத்தின் அடிப்படை. எளிமையாகவும் அமைதியாகவும் நான் கட்டமைக்க நினைத்த இந்த ஆல்பத்தை தொழில் நுட்பக் குழுவினர், சிறந்த பின்னணிக் காட்சிகளுடன் கண்கவரும் விதத்தில் உருவாக்கியிருந்தனர்.
யுவன் சங்கர் ராஜா சார் என் மீது கொண்டிருந்த நம்பிக்கைக்காவும், இந்த வாய்ப்பை எனக்கு வழங்கியதற்காகவும் அவருக்கு இந்த ஆல்பத்தை அர்பணிக்கிறேன். இந்த ஆல்பம் உருவாக எனக்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும், குறிப்பாக பாடலை எழுதிய எனது தந்தை வி.ஆர்.மாலி அவர்களுக்கும் நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

புதிய திறமைசாலிகளை தொடர்ந்து அறிமுகப்படுத்துவதன் மூலம் இசைத் தொழிலை செதுக்கி வருகிறது யு-1 ரெக்கார்ட்ஸ். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் பாடல்களைத் தவிர, பிற திரைப்படப் பாடல்களையும், சுயாதீன பாடல்களையும் யு-1 நிறுவனம் வெளியிட இருக்கிறது.

Link : https://youtu.be/x90E35vJHYo

மலையடிவாரத்தில் காதல் செய்யும் ராம்சந்த் & அன்ஷிதா ஜோடி

மலையடிவாரத்தில் காதல் செய்யும் ராம்சந்த் & அன்ஷிதா ஜோடி

Ramchand and Anshitha team up for Thirumaayiபிரபல இயக்குனர்கள் பலரிடம் டைரக்சன் பாடம் பயின்றவர் சாலமோன் கண்ணன் இவர் கதை- திரைக்கதை – வசனம் – எழுதி இயக்குனராக அறிமுகமாகும் படத்தின் பெயர் தான் ” திருமாயி”.

இவர், இயக்குனராக அறிமுகமாகும் இந்தப் படத்தின் கதையை பற்றி கூறியதாவது, ” மலையடிவாரத்திலிருந்து மலைமேல் வாழும் மக்களுக்கான பொருட்களை கழுதை மேல் ஏற்றிக் கொண்டு பாட்டுப் பாடியபடி கொண்டு போய் கொடுத்து வரும் கூட்டத்தை சேர்ந்தவர்கள் தான் இந்தப் படத்தின் நாயகன் நாயகி.

தமிழ் சினிமாவில் இதுவரை வந்திராத அளவிற்கு முற்றிலும் மாறுபட்டு முழுவதும் வேறு பட்டு சொல்லப்பட்டுள்ள காதல் கதை இது.

நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள படமிது.” என்று கூறினார்.

மேலும் அவர், “இதன் படப்பிடிப்பு தேனி, அல்லிநகரம், கும்பக்கரை, பூதிபுரம், காமக் காபட்டி, சின்னமனூர் வருசநாடு’ வடுகபட்டி, அன்னஞ்சி, கொடைக்கானல், சீலையம்பட்டி, இடங்களில் ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது” என்ற கூடுதல் தகவலையும் நமக்கு சொன்னார்”

கதையின் நாயகனாக ராம்சந்த் அறிமுகமாக அவருக்கு ஜோடியாக மலையாள பட உலகை சார்ந்த அன்ஷிதா நடித்துள்ளார். கொடூர வில்லனாக கே.எஸ். மாசாணமுத்து அதிமுகமாகிறார்.

மேலும் இதில் ராணி, பரவை சுந்தராம்பாள், நம்பியார் ராஜா, மொட்டைவிஜி, குதிரை முருகன், முரளி கோவிந்த்ராக், முத்துக் காளை, நெல்லை சிவா, கார்த்தி, வீரமணி, பெங்களூர் அலிஷா ஆகியோரும் நடித்துள்ளனர்.

குமரன்.ஜி.ஒளிப்பதிவையும், சாய் சுரேஷ் படத்தொகுப்பையும், எழுமலை ‘ சுப்ரமணி, மகி, காலோமன்கண்னன் நால்வரும் பாடல்களையும், இசைவாணன் பாடலுக்கான இசையையும், எஸ்.பி.பூபதி பின்னனி இசையையும், ஆர்.கே.முரளி சண்டைப் பயிற்சியையும், பவர் சிவா நடன பயிற்சியையும் கவனித்துள்ளனர்.

கே.எஸ். மாசாணமுத்து.
திருப்பூர் சிவகுமார்,
சோசன் சஞ்சய்,
அன்னஞ்சி கார்த்தி நால்வரும் சாக் ஷினி புரொடக்ஷன்ஸ் சார்பில் ” திருமாயி ” படத்தை தயாரிக்கின்றனர்.

கதை, திரைக்கதை, வசனம் மற்றும் ஒரு பாடல் எழுதி டைரக்டராக அறிமுகமாகிறார் சாலோமோன் கண்ணன்.

Ramchand and Anshitha team up for Thirumaayi

Ramchand and Anshitha team up for Thirumaayi

ஆணவக்கொலை பற்றிய கதை; ஒற்றை எழுத்தில் படத்தலைப்பு ‘சா’

ஆணவக்கொலை பற்றிய கதை; ஒற்றை எழுத்தில் படத்தலைப்பு ‘சா’

Aanava Kollai movie with Single letter titled Sa “தா” ” உ” “சே” “நீ” “ரா” “ஏ” ஆகிய படங்கள் வரிசையில் அடுத்து “சா” என்ற ஒற்றை எழுத்து தலைப்பில் புதிய படம் உருவாகிறது.

கதாநாயகியை மையமாக வைத்து உருவாகி வரும் இதில் அனு கதையின் நாயகியாக நடிக்கிறார்.

மேலும் இதில் சஞ்சீவ், தாமோதரன், கிங்காங், போண்டா மணி. வேல்சிவா மற்றும் அருண்ஜீவா ஆகியோர் நடிக்கின்றனர்.

அம்மா, அப்பா, வீடு, உறவு, சாதி, மதங்களை தாண்டி காதலித்து மணம் முடிக்கும் இளம் தம்பதிகளை ஆணவக்கொலை செய்யும் சம்பவங்களை மையமாக வைத்து வேறொரு கோணத்தில் சொல்லும் படம் தான் “சா” என்கிறார் புதுமுக இயக்குனரான எஸ்.இ.சபரி.

இவர் பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.

இவரே கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்து டைரக்ட் செய்கிறார்.

அஸ்வின் பாடலையும் சந்திரன் சாமி கேமராவையும், புவனேஷ் படத்தொகுப்பையும், நிஷான்லி இசையையும் கவனிக்கின்றனர்.

கோவை, மேட்டுப்பாளையம், கர்நாடகாவில் உள்ள மடிக்கேரி பகுதிகளில் உள்ள அழகிய இடங்களில் படத்தின் உச்சகட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

Aanava Kollai movie with Single letter titled Sa

4IITEENS அவர்களின் ஆற்றல்மிகு 50 புதிய வளாகம் துவக்கம்

4IITEENS அவர்களின் ஆற்றல்மிகு 50 புதிய வளாகம் துவக்கம்

4IITEENS announces Aattral Migu 50 at the inauguration of their new campusமுன்னணி கல்வி நிறுவனம் 4IITEENS நவம்பர் 17, ஞாயிற்றுக்கிழமை 12 ஆம் தேதி கில்பாக் கார்டன் சாலையில் தங்கள் புதிய வளாகத்தை திறந்துள்ளது. இந்த பிரமாண்டமான நிகழ்வில், ஆற்றல்மிகு 50 ஐ அறிமுகப்படுத்துவதும் இடம்பெறும், இந்த நிகழ்ச்சியில் பொருளாதாரத்தில் பின்தங்கி இருக்கும் 50 திறமையான மாணவர்களுக்கு நீட் மற்றும் ஐ.ஐ.டி தேர்வுகளுக்கு 100% இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இந்த மெகா நிகழ்வை தமிழக அரசின் மீன்வள, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த அமைச்சராக தற்போது பதவியேற்றுள்ள நமது முதன்மை விருந்தினர் ஸ்ரீ டி.ஜெயக்குமார் தொடங்கி வைக்க உள்ளார்.

அவருடன் சிறப்பு விருந்தினராக திரு வரப்பிரசாத ராவ் வேலகபள்ளி (ஐ.ஏ.எஸ்.), சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான (திருப்பதி), ஆந்திர அரசு. விருந்தினராக டி.ஆர். ஏ.பி.ஜே கல்வி ஆலோசனை நிர்வாக பங்குதாரர் டாக்டர் அஜீத் பிரசாத் ஜெயின் கலந்து கொள்ள உள்ளார். எங்கள் நலம் விரும்பி பி.வி.ஆர் & நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு அன்ஷுமன் ராய் இந்த விழாவில் அங்கம் வகிக்கிறார்.

4IITEENS ஒரு முன்னோடி நீட் மற்றும் ஐ.ஐ.டி பயிற்சி நிறுவனம் மற்றும் ஐ.ஐ.டி ஜே.இ.இ.யில் பல முன்னணி தரவரிசைகளை உருவாக்கியுள்ளது. பயிற்சியளிப்பதில் பல ஆண்டுகள் அனுபவம் பெற்றது.

இந்த கடுமையான தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களிடமிருந்து சிறந்தவற்றை வெளிப்படுத்துகிறது.

அறிவியல் மற்றும் கணித பேராசிரியர்களான நடராஜன் பொன்னுசாமி, சமரேஷ் மொண்டல் மற்றும் சுப்பா ராவ் ஆகியவர்கள் இதில் இடம்பெற்றுள்ளனர்.

4IITEENS, நீட் மற்றும் ஐ.ஐ.டி தேர்வுகளுக்கு ஏற்றவாறு பயிற்சியளிப்பதில் கவனம் செலுத்துகிறது, இதனால் அவர்கள் கனவுகளை அடைவார்கள்.

இதன் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ள புத்திசாலித்தனமான மாணவர்களுக்கு ஒரு மாதிரியை உருவாக்குகிறது.

தேர்வு நடத்தியபின், பிரதானமாக அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் எங்கள் மேம்பட்ட பயிற்சித் திட்டத்தின் மூலம் எங்கள் வழக்கமான மாணவர்களுடன் சேர்க்கப்படுகிறார்கள்.

இதனால் அவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற சம வாய்ப்பு கிடைக்கும். 4IITEENS தகுதிவாய்ந்த மாணவர்களுக்கு 2 ஆண்டு விரிவான பயிற்சி, உதவி மற்றும் ஆலோசனைகளை வழங்குகிறது.

இந்த நிகழ்வில் 4IITEENS சில திறமையான மாணவர்களுக்கு ரொக்க வெகுமதிகளை வழங்கும், இதில் சர்வதேச வேதியியல் ஒலிம்பியாட் போட்டியில் முஹிந்தர் ராஜ் வெள்ளி பதக்கத்திற்கு ரூ .50,000, ரூ. 25,000, ஜெய் முர்ஹேகர் (INMO, INCHO), அருத்ராக்கு (NTSE) ரூ. 10,000, ரித்தேஷ்க்கு (NTSE) 10,000, நிகில்க்கு (Pre RMO and NTSE) ரூ .10,000, மற்றும் ஸ்ரேயா (CBSE) ரூ. 10,000.

4IITEENS announces Aattral Migu 50 at the inauguration of their new campus

4IITEENS announces Aattral Migu 50 at the inauguration of their new campus

 

முகத்தை மூடிக்கொள்ள நான் கிரிமினல் இல்லையே- ஆசிட் வீச்சில் சிக்கிய லக்ஷ்மி அகர்வால்

முகத்தை மூடிக்கொள்ள நான் கிரிமினல் இல்லையே- ஆசிட் வீச்சில் சிக்கிய லக்ஷ்மி அகர்வால்

lakshmi aggarwalதமிழில் பாபா, உன்னை சரணடைந்தேன், வீராப்பு, மிலிட்டரி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை சந்தோஷி.. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்த இவர், அதன்பிறகு சின்னத்திரை தொடர்களிலும் நுழைந்து ஒரு கை பார்த்தார். ருத்ர வீணை, அரசி, இளவரசி, பொண்டாட்டி தேவை, வாழ்க்கை உள்ளிட்ட பல நெடுந்தொடர்களில் நடித்த இவர் ‘இளவரசி’ சீரியலில் கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் நடித்தார்.

அதன்பிறகு ஒரு கட்டத்தில் தனக்கு ஃபேஷன் டிசைனிங் வேலைகளில் அதிக ஆர்வம். இருந்ததால் ஆறு வருஷத்துக்கு முன்பு, தனது கணவருடன் சேர்ந்து *`PLUSH Boutique & Beauty Lounge’* கடையை சென்னையில் தொடங்கினார்.. இது மணமகளுக்கான ஆடைகள், மேக்கப், ஆபரணங்கள்னு எல்லாமே கிடைக்கிற பிரத்யேக ஷோரூம். வெட்டிங் போட்டோகிராபியும் இதன் இன்னொரு சிறப்பம்சம்.. தற்போது சென்னையில் இரண்டு, மதுரையில் ஒன்று என மொத்தம் மூன்று கிளைகள் இருக்கின்றன. வெளிநாடுகளிலிருந்தும் கூட பலரும் சந்தோஷியிடம் பயிற்சிக்கு வருகின்றனர்.

இந்தநிலையில் ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் குறித்த செமினார் நிகழ்ச்சி ஒன்றை நேற்று (நவ-17) சென்னையில் பிரபலமான ஐடிசி சோழா ஹோட்டலில் பிரமாண்டமாக நடத்தியுள்ளார் சந்தோஷி.. இந்த நிகழ்வில் பிரபல நடிகை நமீதா, ஆசிட் வீச்சு பாதிப்புக்கு ஆளான டில்லியை சேர்ந்த லட்சுமி அகர்வால், சின்னித்திரை நடிகைகள் ‘சரவணன் மீனாட்சி’ புகழ் ரக்சிதா தினேஷ், ‘ரோஜா’ புகழ் பிரியங்கா, பிரபல மாடல் பிராச்சி சோலங்கி, பிக்பாஸ் (தெலுங்கு) புகழ் ஷியாமளா, நடிகையும் தொகுப்பாளருமான பரினா, உதவி இயக்குனரும் விடிலிகோ மாடலுமான ரம்யா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இந்த நிகழ்வின்போது இதில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்களின் பேஷன் வாக் நடைபெற்றது. அதற்கு முன்னதாக பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த நிகழ்ச்சி குறித்த தங்களது கருத்துக்களையும் அனைவரும் பகிர்ந்துகொண்டனர்.

சந்தோஷி பேசும்போது, “கடந்த 20 வருடங்களுக்கு முன்பு நடிக்க ஆரம்பித்து தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் நடித்ததுடன் பல சீரியல்களிலும் நடித்தேன்.. சினிமா, சீரியல் இவற்றைத் தாண்டி கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு மிகச்சிறிய அளவில் பொட்டிக், பெண்களுக்கான சலூன், கல்யாண பெண்களுக்கான மேக்கப், அவர்களுக்கான உடை, வெட்டிங் போட்டோகிராபி என ஒரு சிறிய கடையாக ஆரம்பித்து இன்று ஆழ்வார்திருநகர், வடபழனி, மதுரை கேகே நகர் என மூன்று கிளைகளை உருவாக்கியுள்ளேன்.

இந்த ஏழு வருடங்களில் செமினார் பண்ண வேண்டும் என்கிற எண்ணம் இருந்தாலும் அப்படி செய்தால் ஏதாவது புதுமையாக செய்யவேண்டும் என்று நினைத்தேன்.. அது நிறைவேறிய நாள் இன்றுதான்.. இந்த நிகழ்ச்சி வித்தியாசமாக நடத்த எனக்கு கைகொடுத்து உறுதுணையாக இருந்தவர் நடிகை நமீதா தான்.. இப்படி ஒரு செமினார் நடத்தப்போவதாக கூறியதும் எங்களுடைய உடைகள், ஆபரணங்கள் அழகுசாதனப் பொருட்கள் ஆகியவற்றை அணிந்து அவற்றை பிரபலப்படுத்த தயாராக முன்வந்தார்..

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு எங்களது மேக்கப் செமினாருக்கு ஒத்துழைத்த லட்சுமி அகர்வால், டெல்லியிலிருந்து இதற்காகவே வந்துள்ளார். அவருக்கும் எனக்கும் முன்பின் தொடர்பு கிடையாது. இன்ஸ்டாகிராம் மூலமாகத்தான் அவரை தொடர்பு கொண்டேன். இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு, இதில் என்னுடைய மேக்கப் கலையின் திறமையை காட்டுவதற்கு லட்சுமி அகர்வால் ஒரு பொருத்தமான நபராக இருப்பார் என அவரை அழைத்தேன்.. அவரும் ஒப்புக்கொண்டு இங்கே வருகை தந்திருக்கிறார்.

இவரது வாழ்க்கை வரலாறைத்தான் தற்போது தீபிகா படுகோனே நடிப்பில் இந்தியில் படமாக எடுத்து வருகிறார்கள்.. விரைவில் அந்த படம் வெளியாக இருக்கிறது.. அவருக்கு இதுபோன்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாமா அதற்கு அனுமதி இருக்கிறதா என்பது கூட எங்களுக்கு தெரியாது.. ஆனாலும் என் அழைப்பை ஏற்று அவர் இந்த நிகழ்ச்சியில் வந்து கலந்துக் கொண்டுள்ளார்.. இவர்கள் தவிர இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்த மற்ற அனைவருக்கும் நன்றி” என கூறினார் சந்தோஷி..

ரக்சிதா தினேஷ் பேசும்போது, “8 வருடத்திற்கு மேலாக சந்தோஷியுடன் எனது நட்பு தொடர்கிறது.. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சந்தோஷி மீது வைத்துள்ள அன்பும் மரியாதையும் தான் காரணம்.. இந்த நிகழ்ச்சியில் நானும் கலந்து கொண்டது பெருமையாக இருக்கிறது” என்றார்

சின்னத்திரை சீரியலில் ரோஜாவாக வலம்வரும் பிரியங்கா பேசும்போது, ‘தமிழில் முதன்முறையாக நான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி இதுதான்” என்றார்.

இந்த நிகழ்ச்சியில் மேடையில் ஒப்பனை நிகழ்வில் பொறுமையாக கலந்துகொண்ட, சினிமாவில் உதவி இயக்குனராக இருக்கும் ரம்யா பேசும்போது, ‘இப்படி ஒரு நிகழ்ச்சி நடத்தப்போவதாக சந்தோஷி என்னிடம் கூறி இந்த நிகழ்ச்சியில் நீங்கள் கலந்து கொண்டால் உங்களைப் பார்த்து பலருக்கு உற்சாக தூண்டல் ஏற்படும் என்று கூறினார்.. நேர்மையாக சொல்ல வேண்டுமென்றால் எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது.. என்னை கண்ணாடியில் பார்த்துக் கொள்வதற்கு எனக்கு ரொம்ப பிடிக்கும்.. என்னை இன்னும் அழகாக மாற்றியிருக்கிறார் சந்தோஷி” என்றார்.

லட்சுமி அகர்வால் பேசும்போது, “இங்கு யாரையும் பாதிக்கப்பட்டவர்கள் என்று சொல்வதற்கு, பாதிக்கப்பட்டவர்களாக பரிதாபப்படுவதற்கும் யாருக்கும் உரிமை இல்லை.. 2005ல் என் மீது ஆசிட் வீச்சு தாக்குதல் நடைபெற்றது.. இந்த சமூகத்தில் ஒரு பெண்ணாக பிறந்து வாழ்வது தான் மிகப்பெரிய கஷ்டம்.. அதிலும் இதுபோன்ற தாக்குதலை எதிர்கொண்டு வாழ்வது என்பது கடினமான ஒன்று..

2009 வரை முகத்தை மறைத்தபடி தான் எங்கும் சென்று வந்தேன் ..ஆனால் அதன் பிறகுதான் நான் ஒன்றும் கிரிமினல் இல்லையே எதற்காக முகத்தை மூடி மறைக்க வேண்டும்.. யாருக்கெல்லாம் என்னைப் பார்த்து அசிங்கமாக தோன்றுகிறதோ முதலில் அவர்கள்தான் தங்களைப் பார்த்து அசிங்கப்பட்டுக் கொள்ளவேண்டும் என முடிவெடுத்தேன். ஆசிட் வீச்சால் தாக்குதலுக்கு ஆளானது ஒருமுறைதான்.. ஆனால் இந்த சமூகத்தில் அதை சுட்டிக்காட்டியே பலமுறை நான் தாக்குதலுக்கு ஆளாகி இருக்கிறேன்..

ஆனால் அதையெல்லாம் தகர்த்து எறிந்து அதிலிருந்து வெளியே வந்து உங்கள் முன் தைரியமான ஒரு பெண்ணாக நான் நின்று கொண்டிருக்கிறேன்.. மேக்கப் என்பது ஒரு பெண்ணுக்கு அழகு தான் என்றாலும் மனசு அழகாக இருந்தால் முகத்தில் அது தானாக தெரியும்.. அதனால் நான் எப்போதும் இந்த அழகாகவே உணர்கிறேன்” என்று கூறினார்

நடிகை நமீதா பேசும்போது, ‘ராஜஸ்தான் மாநிலத்தில் பிப்லாந்திரி என்கிற ஒரு சாதாரண கிராமத்தில் ஒவ்வொரு முறையும் ஒரு பெண் குழந்தை பிறக்கும்போது அதை கொண்டாடும் விதமாக 111 மரக்கன்றுகளை நட்டு வைத்து வளர்க்கிறார்கள். பதினைந்து வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்தது இதுபோன்று முயற்சி.. இயற்கையை பாதுகாக்கும் முயற்சி மட்டுமல்ல.. மொத்த கிராமத்தின் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் ஒரு விஷயமும் கூட. அந்தவகையில் ஒவ்வொரு பெண்ணும் பிறக்கும்போது உங்களுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை கொடுக்கும் விதமாக பிறக்கிறாள்..

பெண்கள் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல.. பெண்கள் வாழப் பிறந்தவர்கள்.. வீராங்கனைகள்.. இதை நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.. என்னைப் பொருத்தவரை இந்த நிகழ்ச்சியில் நான் நிகழ்ச்சியின் பிரதான நபர் கிடையாது, நான் அழகு ராணி கிடையாது.. லட்சுமி அகர்வாலும் ரம்யாவும் தான் இதற்கு தகுதியானவர்கள்.. வரலாற்றில் இவர்கள்தான் ஜாம்பவான்கள் என போற்றப்படுவார்கள்.. அவர்களிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது..

நான் இதற்கு முன்பு மிகப்பெரிய ஜாம்பவான்கள் வீற்றிருக்கும் மேடையில் இருந்திருக்கிறேன்.. ஆனால் அப்போதெல்லாம் இல்லாத அளவுக்கு இன்று தான் உண்மையிலேயே நான் பெருமையாக உணர்கிறேன்” என்று கூறினார்.

More Articles
Follows