தனுஷின் ‘திடீர்’ பெற்றோர் அதிரடி மனு

தனுஷின் ‘திடீர்’ பெற்றோர் அதிரடி மனு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush sudden parents filed new petitionநடிகர் தனுஷ், தங்கள் மகன் என கதிரேசன் – மீனாட்சி தம்பதியினர் வழக்கு தொடர்ந்தனர்.

சான்றிதழ்களில் பெயர்க் குழப்பம், லேசர் சிகிச்சையில் அடையாளங்கள் அழிப்பு, என அதிரடி திருப்பங்களுடன் இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டுமென தனுஷ் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆனால், அந்த மனுவின் இருப்பது தனுஷின் கையெழுத்தே இல்லை என்றும், அதை நிரூபிக்க மனுவின் நகலைக் கேட்டும் மனுத்தாக்கல் செய்துள்ளனர் தம்பதியினர்.

Dhanush sudden parents filed new petition

பிரபு சாலமன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின்

பிரபு சாலமன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Udhayanidhi Stalin Prabhu Solomonஒரு படத்தை முடித்துவிட்டே தன் அடுத்த படத்தை தொடங்குவதை வாடிக்கையாக வைத்திருந்தார் உதயநிதி.

ஆனால் தற்போது, ’சரவணன் இருக்க பயமேன்’, ‘பொதுவாக என் மனசு தங்கம்’, ‘இப்படை வெல்லும்’ என ஒரே நேரத்தில் 3 படங்களில் நடித்து வருகிறார்.

இந்த ஆச்சயரியம் ஒரு புறம் இருக்க, மற்றொரு புறம் இன்னும் ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது.

விரைவில், பிரபு சாலமன் இயக்கும் ஒரு படத்தில் உதயநிதி நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

பிரபு சாலமன் படங்கள் என்றாலே ஏதாவது ஒரு விஷயம் படத்தின் பின்னணியாக இருக்கும்.

கயல் படத்தில் கடல், மைனா படத்தில் காடு, தொடரி படத்தில் ரயில், கும்கி படத்தில் யானை ஆகியவை முக்கிய கேரக்டர்களாக இருந்தது.

அந்த வரிசையில் உதயநிதி படத்தில் பாலைவனம் காட்சிகள் பின்னணியாக இருக்குமாம்.

Udhayanidhi Stalin teams up with Prabhu Solomon

‘பாபா’ படத்திற்கு முன்பே ரஜினியுடன் இணைந்து ஆடிய லாரன்ஸ்

‘பாபா’ படத்திற்கு முன்பே ரஜினியுடன் இணைந்து ஆடிய லாரன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

In Uzhaippali movie lawrance dance with Rajinikanthரஜினியின் தீவிர ரசிகர் நான் என்று லாரன்ஸ் அடிக்கடி கூறி வருபவர்.

இவர், பாபா படத்தில் மாயா சாயா பாடலுக்கு நடனம் அமைத்து அப்பாடலில் ரஜினியுடன் திரையில் தோன்றினார்.

இப்படம் கடந்த 2002ஆம் வெளியானது.

ஆனால் பல வருடங்களுக்கு முன்பே இதே போன்று ரஜினியுடன் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளாராம்.

அது பி.வாசு இயக்கத்தில் உருவான உழைப்பாளி என்ற படத்தில் ‘உழைப்பாளி இல்லாத நாடுதான் இங்கில்ல…’ என்ற பாடலில் துணை டான்ஸராக ஆடியிருந்தாராம்.

1993ஆம் ஆண்டு வெளியான இப்படத்தின்  அந்த பாடலுக்கு சுந்தரம் நடனம் அமைத்து இருந்தார்.

ரஜினியுடன் லாரன்ஸ் நடனம் ஆடியதை சிவலிங்கா படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இயக்குநர் பி.வாசு தெரிவித்தார்.

அவருக்கே தெரியாத இத்தகவலை லாரன்ஸ் அப்போதுதான் பி.வாசுவிடம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

In Uzhaippali movie lawrance dance with Rajinikanth

மீண்டும் அருண் விஜய்யுடன் இணையும் தயாரிப்பாளர்-இயக்குனர்

மீண்டும் அருண் விஜய்யுடன் இணையும் தயாரிப்பாளர்-இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Arun Vijays next with Kuttram 23 Producer and director is Magizh Thirumeniஅறிவழகன் இயக்கத்தில் அருண்விஜய், மஹிமா, அபிநயா உள்ளிட்டோர் நடித்த குற்றம் 23 படம் மாபெரும வெற்றிப் பெற்றது.

விஷால் சந்திரசேகர் இசையமைத்த இப்படத்தை இந்திரகுமார் தயாரித்திருந்தார்.

இந்நிலையில் இவரே மீண்டும் அருண் விஜய் நடிக்கவுள்ள ஒரு படத்தை தயாரிக்கவிருக்கிறாராம்.

இப்படத்தை அருண் விஜய் நடித்த ‘தடையற தாக்க’, ஆரயா நடித்த ‘மீகாமன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ்திருமேனி இயக்கவிருக்கிறார்.

இத்தகவலை அருண்விஜய்யே தன் ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

இது அருண்விஜய்யின் 24வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Arun Vijays next with Kuttram 23 Producer and director is Magizh Thirumeni

ArunVijay‏Verified account @arunvijayno1
It’s official now! My next after #k23 is with #ThadaiyaraThaaka combo yet again dir #MagizhThirumeni, Exciting script!! @inder3kumar #AV24

arun vijay next

சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக நடிக்கும் காமெடி நடிகர்

சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக நடிக்கும் காமெடி நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

?????????????????????????????????????????????????????மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் வேலைக்காரன்.

அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தை 24ஏஎம் ஸ்டூடியோஸ் நிறுவனம் விறுவிறுப்பாக தயாரித்து வருகிறது.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் நயன்தாரா, ஸ்நேகா, பஹத்பாசில், பிரகாஷ்ராஜ், சதீஷ், ஆர் ஜே. பாலாஜி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் தந்தை கேரக்டரில் காமெடி நடிகரும் சிறந்த குணசித்திர நடிகருமான சார்லி நடிக்கிறாராம்.

அண்மையில் வெளியான எமன், என்னோடு விளையாடு, பாம்பு சட்டை ஆகிய படங்களில் சார்லியின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Charlie plays Sivakarthikeyans father in Velaikkaran movie

பவர் பாண்டி-சிவலிங்கா படத்தை இணைக்கும் ’26 வருட ப்ளாஷ்பேக்’

பவர் பாண்டி-சிவலிங்கா படத்தை இணைக்கும் ’26 வருட ப்ளாஷ்பேக்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivalinga and power paandiபி.வாசு இயக்கத்தில் லாரன்ஸ் நடித்துள்ள சிவலிங்கா படமும், தனுஷ் தயாரித்து இயக்கி நடித்துள்ள பவர் பாண்டி படமும் வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்த இரு படங்களும் மோத உள்ள நிலையில் இந்த இரு படங்களுக்கும் ஒரு ஒற்றுமை உள்ளதாம்.

அதாவது 26 வருடங்களுக்கு முன்பு 1991ஆம் ஆண்டில் ஏப்ரல் 14ஆம் தேதி இரு படங்கள் வெளியானது.

1) பி.வாசு இயக்கத்தில் பிரபு, குஷ்பூ, சக்திவாசு நடித்த சின்னதம்பி.

2) தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா இயக்கத்தில் ராஜ்கிரண் நடித்த என் ராசாவின் மனசிலே.

தற்போதும் பி வாசு இயக்கிய படமும், ராஜ்கிரண் மீண்டும் நாயகனாக நடிக்கும் படமும் ரிலீஸ் ஆகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows