கொடி ட்ரைலர்: தெறிக்க விடும் தனுஷின் பன்ச் டயலாக்ஸ்

dhanush trishaஇன்று தனுஷின் கொடி படத்தின் பாடல்கள் வெளியாகியுள்ளது.

கவிஞர் விவேக்கின் வரிகளில், சந்தோஷ் நாராயணன் இசையில் இப்படத்தில் 5 பாடல்கள் இடம்பெற்றுள்ளது.

இயக்குனர் வெற்றிமாறன் எஸ்கேப் ஆர்ஸ்டிஸ்ட் மதனுடன் இணைந்து தயாரித்துள்ளார்.

துரை செந்தில்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் அண்ணன், தம்பி என இரு வேடம் ஏற்றுள்ளார்.

மேலும் இப்படத்தின் ட்ரைலர் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இந்த ட்ரைலர் குறித்த தகவல்களை இங்கே தனுஷ் ரசிகர்களுக்காக பகிர்கிறோம்.

வேட்டு போட்டு என்ற பாடலோடுதான் இந்த ட்ரைலர் ஆரம்பமாகிறதாம்.

இதில் தாடி வைத்தவர் அண்ணனாக வருகிறார். அவருக்குதான் த்ரிஷா ஜோடி.

தனுஷின் அம்மாவாக சரண்யா பொன்வண்ணன் நடிக்கிறார்.

தனுஷின் அரசியல் ஆசானாக இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்துள்ளார்.

அரசியல் என்றாலே பல பன்ச் வசனங்கள், அடிதடி, மாஸ் ஆக்ஷன் என அனைத்தும் கலந்த கலவையாக இருக்கும்.

அது இதில் கொஞ்சம் கூட குறைவில்லாமல் இருக்கும்.

இதில் தனுஷ்க்கு நிறையவே பன்ச் டயலாக்குகள் உள்ளது.

எப்பவுமே அலர்ட்டா இருக்கிறவன்தான் அரசியல்வாதி.

சில பேரு பேசிட்டு ஜெயிப்பாங்க. நான் ஜெயிச்சிட்டுதான் பேசுறேன். என்ற அனல் தெறிக்கும் வசனங்களும் உள்ளது.

மேலும் தனுஷின் இளைய ரசிகர்களுக்கு ஏற்றவாறு ஆடல் பாடலும் உள்ளது.
தம்பி கேரக்டர் தனுஷ்க்கு ஜோடியாக அனுபமா வருகிறார். இதில் பிரேமம் படம் போல், கூந்தலை விரித்து போடாமல் தலைமுடியை பின்னியபடியே வந்தாலும் அழகாக இருக்கிறார்.

ட்ரைலர் முடியும்போது நம்ம கொடி பறக்குதா? என்ற பன்ச் டயலாக்கோடு தனுஷ் முடிக்கிறார்.

Overall Rating : Not available

Related News

ரஜினிகாந்த், விஜயகாந்த் ஆகியோருக்கு மறக்க முடியாத…
...Read More
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'வடசென்னை'…
...Read More
தமிழ் சினிமாவில் கோலோச்சும் தனுஷ் முதன்முறையாக…
...Read More

Latest Post