தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருப்பவர் நடிகர் தனுஷ்.
மேலும் நடிப்பதோடு மட்டுமில்லாமல் தயாரிப்பாளர் பாடகர் பாடலாசிரியர் என பன்முகத் திறமை காட்டி வருகிறார்.
இத்துடன் பவர் பாண்டி என்ற படத்தை இயக்கி தன்னை ஒரு இயக்குனராகவும் அடையாளப்படுத்திக் கொண்டார்.
இந்த நிலையில் தனுஷ் தன்னுடைய சினிமா பயணத்தில் 50 வது படத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார்.
தற்போது இந்த படத்தை தனுஷ் இயக்க உள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.
இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் பிரபல தென்னிந்திய நட்சத்திரங்களை இந்த படத்தில் நடிக்க வைக்க தனுஷ் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன், விஷ்ணு விஷால், சந்தீப் கிஷன், காளிதாஸ் உள்ளிட்டோர் நடிப்பார்கள் எனவும் கூறப்படுகிறது.
இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதால் விரைவில் இது பற்றிய அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.
Dhanush and AR Rahman joins for a new film