தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
காமெடியனாக வளர்ந்து தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார் சந்தானம்.
இனிமே இப்படித்தான் என்ற கொள்கையில் உறுதியாக இருக்கிறார்.
இந்த நிலையில் அவரின் அடுத்த படமான ‘டகால்டி’ பட போஸ்டர் வெளியானது.
அந்த பட போஸ்டரில் சந்தானம் தம் அடிப்பது இருந்தது.
இப்பட போஸ்டருக்கு சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் கண்டனம் எழுந்தன.
இதனையடுத்து சிகரெட்டுக்கு பதிலாக சந்தானம் மாம்பழம் சாப்பிடுவது போல் போஸ்டர் வெளியானது.
இதுகுறித்து சந்தானம் வருத்தம் தெரிவித்துள்ளார்.
“டகால்டி’ முதல் பார்வை போஸ்டர் கவனக்குறைவாக பதிவேற்றப்பட்டது. உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிக்கும் புகை பிடிப்பதை அது ஊக்குவிப்பதாக இருந்தது என்பதை உணர்கிறேன்.
என்னுடைய வருங்காலப் படங்களில் அப்படிப்பட்ட போஸ்டர்கள் இருக்காது என தெரிவித்துள்ளார்.
Dagaalty first look isse Santhanam promises will not promote smoking
"Dacalty" first look poster was inadvertently uploaded. Have realised that it may promote smoking which is injurious to health. Will ensure my future films will never carry such posters.
— Santhanam (@iamsanthanam) June 8, 2019