‘தர்பார்’ ரஜினிகாந்த் இடத்தில் சந்தானம் & யோகிபாபு

Santhanam and Yogi babus fun filled Dagaalty teaser outசந்தானம் நாயகனாக நடிக்க அவருடன் யோகிபாபு இணைந்துள்ள படம் ‘டகால்டி’.

பிரபல குழந்தைகள் நல மருத்துவரும், விநியோகஸ்தருமான, எஸ்.பி.செளத்ரி தமது 18 ரீல்ஸ் நிறுவனம் சார்பில் மிகுந்த பொருட் செலவில் தயாரித்துள்ளனர்.

சென்னை, திருக்கழுகுன்றம், திருச்செந்தூர், கடப்பா, மும்பை, புனோ, ஜெய்ப்பூர் என நான்கு மாநிலங்களில் வளர்ந்துள்ளது “டகால்டி”

ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் அரண்மனையில் ரஜினியின் “தர்பார்” படப்பிடிப்பு நடைபெற்ற இடத்திலும் அமர்க்களமாக இந்த படம் உருவாகியுள்ளது.

சந்தானத்திற்கு ஜோடியாக பெங்காலி நடிகை ரித்திகா சென் நடித்துள்ளார்.

தெலுங்கு பட உலகின் பிரம்மானந்தம், ராதாரவி, ரேகா, ஹேமந்த் பாண்டே, மனோபாலா, நமோ நாராயணா, ஸ்டண்ட் சில்வா, சந்தானபாரதி இந்திப் பட உலகின் பிரபலமான நடிகர் தருண் அரோரா ஆகியோருடன் வெளிநாடுகளிலிருந்து வந்த மாடல் அழகிகளும் இந்த படத்தில் பணியாற்றியுள்ளனர்.

விஜயநாராயணன் இசையையும், கார்கி பாடல்களையும், தீபக்குமார் பாரதி ஒளிப்பதிவையும், டி.எஸ்.சுரேஷ் படத்தொகுப்பையும், ஜாக்கி கலையையும், ஸ்டண்ட் சில்வா சண்டை பயிற்சியையும், ஷோபி நடன பயிற்சியையும், சுவாமிநாதன் தயாரிப்பு மேற்பார்வையையும், ரமேஷ்குமார் இணைத் தயாரிப்பையும், கவனித்துள்ளனர்.

ஷங்கரிடம் பல படங்களில் அசோசியேட்டாக பணிபுரிந்த விஜய் ஆனந்த் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குனராக அறிமுகமாகியுள்ளார்.

இந்த மாதம் டிசம்பரில் குடும்பங்களை குதூகலிக்க வருகிறது “டகால்டி.

சற்றுமுன் இப்பட டீசர் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களை கவரும் வகையில் சந்தானம் காமெடி விருந்தாக அமைந்துள்ளது.

Santhanam and Yogi babus fun filled Dagaalty teaser out

 

 

Overall Rating : Not available

Related News

சந்தானம் நடிப்பில் “டகால்டி” மற்றும் “சர்வர்…
...Read More
18 ரீல்ஸ் நிறுவனம் சார்பில் திருப்பூரை…
...Read More
பண்டிகை என்றால் அனைவருக்கும் நினைவிற்கு வருவது…
...Read More

Latest Post