தன் வீட்டை தற்காலிக மருத்துவமனையாக்க கமல் சம்மதம்

Corona Pandemic Kamal wants convert his home to hospitalகொரோனா வைரஸை பாதிப்பில் இருந்து மீள இன்று முதல் இந்தியா முழுவதும் 144 உத்தரவை பிறப்பித்துள்ளார் பிரதமர் மோடி.

ஆனால் கொரோனா வைரசின் தீவிரம் புரியாமல் மக்கள் ஆங்காங்கே இன்னமும் சுற்றித் திரிந்துக் கொண்டிருக்கின்றனர்.

மத்திய மாநில அரசுகள் கடுமையாக போராடி வருகிறது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் வகையில் தனது வீட்டை மருத்துவமனைக்கு தர தயாராக இருப்பதாக நடிகரும் மக்கள் மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது…

இந்த நெருக்கடி நேரத்தில் எளியோருக்கு பணி செய்ய மக்கள் நீதி மய்யத்தில் இருக்கும் மருத்துவர்களை கொண்டு, என் வீடாக இருந்த கட்டிடத்தை, தற்காலிகமாக எளிய மக்களுக்கான மருத்துவ மய்யமாக்கி, மக்களுக்கு உதவ நினைக்கிறேன். அரசின் அனுமதி கிடைத்தால், அதை செய்ய தயாராக காத்திருக்கிறேன். உங்கள் நான்’ என்று பதிவு செய்துள்ளார்.

அரசு சம்மதம் சொல்லுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..

Corona Pandemic Kamal wants convert his home to hospital

Overall Rating : Not available

Latest Post