2016 ஆண்டின் உலகி அழகிக்கும் அஜித்துக்கும் என்ன சம்பந்தம்?

2016 ஆண்டின் உலகி அழகிக்கும் அஜித்துக்கும் என்ன சம்பந்தம்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

miss world 2016உலக அழகி போட்டி வருடந்தோறும் நடைபெற்று வருகிறது.

2016ஆம் ஆண்டுக்கான உலக அழகி போட்டி அமெரிக்காவில் உள்ள நேஷனல் ஹார்பர் பகுதியில் நடைபெற்றது.

இதில் உலகில் பல நாடுகளில் இருந்தும் கிட்டதட்ட 120 அழகிகள் கலந்து கொண்டனர்.

பல கட்டத் தேர்வுகளுக்கு பின்னர் போர்டோ ரிகோ நாட்டை சேர்ந்த டி-வாலி என்ற 18 வயது இளம்பெண் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2015-ம் ஆண்டு பட்டம் வென்ற ஸ்பெயின் அழகி மிரேயா லலாகுனா டி. வாலிக்கு கிரீடம் சூட்டி மகிழ்ந்தார்.

இதெல்லாம் இருக்கட்டும். டைட்டில் இருக்கிற அஜித்துக்கும் இவருக்கு என்ன சம்பந்தம் என்றா கேட்கிறீர்களா? பாஸ் இன்னுமா புரியல.

எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடித்த படம்தானே வாலி. 1999ஆம் ஆண்டில் இப்படம் வெளியானது.

ஹ்ம்…. ப்ப்பா முடியல (உங்க மைண்ட் வாய்ஸ்)

Puerto Rico’s Stephanie Del Valle crowned Miss World 2016

‘தளபதி’ ட்ரெண்டை முறியடிக்க வெளியானது ‘தல’ படம்

‘தளபதி’ ட்ரெண்டை முறியடிக்க வெளியானது ‘தல’ படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay ajithஇளைய தளபதி விஜய் நடித்துள்ள பைரவா பாடல்கள் டிசம்பர் 23ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என கூறப்பட்டாலும், தற்போதே எல்லா பாடல்களை வெளியிட்டு விட்டனர்.

ரசிகர்களின் ஆர்வ மிகுதியே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

பாடல் வரிகள் வீடியோவை ஒன்றன்பின் ஒன்றாக வெளியிட்டு இணையத்தை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

இதனை ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்து பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தல 57 படத்தை இயக்கி வரும் சிவா, திடீரென அஜித்தின் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார் என்பதை சற்றுமுன் பார்த்தோம்.

எனவே பைரவா படத்துடன் தல அஜித்தின் புகைப்படம் தற்போது ட்ரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Bairavaa and AK57 were trending at same time

அஜித் ரசிகர்களுக்கு சிவா கொடுத்த இன்ப அதிர்ச்சி

அஜித் ரசிகர்களுக்கு சிவா கொடுத்த இன்ப அதிர்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith thala 57சிவா இயக்கும் தல 57 படத்தில் அஜித்துடன் காஜல், அக்ஷராஹாசன், விவேக் ஓபராய், கருணாகரன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இதன் சூட்டிங் தற்போது பல்கேரியா நாட்டில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் அஜித்தின் அடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

சில தினங்களுக்கு முன் அஜித் ஓட்டும் பைக் சாகச வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Director revealed one more still of Ajith from Thala 57

ஜி.வி. பிரகாஷுக்காக சிம்பு செய்யப் போகும் காரியம்

ஜி.வி. பிரகாஷுக்காக சிம்பு செய்யப் போகும் காரியம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu gv prakashஇயக்குனர் பாண்டிராஜின் உதவியாளர் பிரசாந்த் இயக்கியுள்ள படம் புரூஸ் லீ.

கெனன்யா பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ், கீர்த்தி கர்பன்ந்தா, ஆனந்த்ராஜ், ராமதாஸ், பால சரவணன், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலரை வருகிற டிசம்பர் 23ஆம் தேதி வெளியிட இருக்கிறாராம் சிம்பு.

இதை ஜி.வி. பிரகாஷே தன் ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

G.V.Prakash Kumar ‏@gvprakash 4m4 minutes ago

Dear @iam_str to launch #brucelee trailer on Friday

simbu bruce lee

பைரவா பாடல்கள் வெளியானது… பரவசத்தில் விஜய் ரசிகர்கள்

பைரவா பாடல்கள் வெளியானது… பரவசத்தில் விஜய் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor vijayவிஜய் நடித்துள்ள பைரவா பாடல்கள் டிச. 23ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட முதல் ரசிகர்கள் தவமாய் காத்திருக்க தொடங்கி விட்டனர்.

இந்நிலையில் படத்தின் ட்ராக் லிஸ்ட்டை நேற்று வெளியிட்டனர்.

நான்கு பாடல்களும் ஒரு தீம் பாட்டும் இதில் உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் தற்போது ஐட்யூனில் வெளியிட்டுள்ளனர்.

பாடல்களை கேட்ட விஜய் ரசிகர்கள் பரவசம் அடைந்துள்ளதாக தெரிவித்தனர்.

பிரபல மலையாள நடிகர் ஜெகன்நாத வர்மா மரணம்

பிரபல மலையாள நடிகர் ஜெகன்நாத வர்மா மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Malayalam Actor Jagannatha Varma Passes Awayபிரபல மலையாள நடிகர் ஜெகன்நாத வர்மா காலமானார்.

சில நாட்களாக உடல் நிலை சரியில்லாத காரணத்தால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த இவர் மரணமடைந்தார்.

காவல்துறையில் எஸ்.பி. ஆக இருந்த இவர், ஓய்வு பெற்றப்பின்னர் சினிமா துறையில் சாதிக்க விரும்பி, நிறைய படங்களில் நடித்தார்.

சினிமாவிலும் உயர் அதிகாரி வேடங்களை விரும்பி ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows