தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நேற்று ஜூலை 28ஆம் தேதி ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த படத்தில் நடித்துள்ள கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நேற்று சென்னை வந்து ‘ஜெயிலர்’ இசை விழாவில் பங்கேற்று பேசினார்.
இந்த நிலையில் சிவராஜ்குமார் அவர்களை, தமிழ் நடிகர் கிங்காங் மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்தார்.
‘கண்டுகலி’ என்ற கன்னடப் படத்தில் சிவ ராஜ்குமார் அவர்களுடன் கிங்காங் நடித்துள்ளார். மேலும் இதுவரை 25-க்கும் மேற்பட்ட கன்னடப் படங்களில் நடித்துள்ளார்.
எனவே கிங்காங்கை மீண்டும் கன்னடப் படங்களில் நடிக்க அழைப்பு விடுத்துள்ளார் சிவராஜ்குமார்.
சிவா உள்ளிட்ட படங்களில் ரஜினியுடன் கிங்காங் நடித்திருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.
Come again and act in Kannada movies Sivarajkumar invite Kingkong