‘விக்ருதி’ ரீமேக்..: விதார்த்தின் வித்தியாசமான நடிப்பில் ‘பயணிகள் கவனிக்கவும்’..; பிரபலங்கள் பாராட்டு

‘விக்ருதி’ ரீமேக்..: விதார்த்தின் வித்தியாசமான நடிப்பில் ‘பயணிகள் கவனிக்கவும்’..; பிரபலங்கள் பாராட்டு

ஆல் இன் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா தயாரித்திருக்கும் திரைப்படம் ‘பயணிகள் கவனிக்கவும்‘. மலையாளத்தில் ‘விக்ருதி’ என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படத்தின் தமிழ் பதிப்பான இந்த படத்தில் கதையின் நாயகர்களாக நடிகர்கள் விதார்த், கருணாகரன், சரித்திரன், நடிகைகள் லட்சுமி பிரியா சந்திரமௌலி, மாசூம் சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

எஸ் பி சக்திவேல் இயக்கியிருக்கும் இந்த திரைப்படம் ‘ஆஹா’ டிஜிட்டல் தளத்தின் வெளியாகும் முதல் ஒரிஜினல் படைப்பு. இந்த திரைப்படம் ஏப்ரல் 29ஆம் தேதி முதல் ஆஹா டிஜிட்டல் தளத்தில் வெளியாகி இருக்கிறது.

இதற்காக திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்ளும் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது.

இதில் நட்சத்திர நடிகர்களான சூரி, இயக்குநர்கள் அறிவழகன், சாம் ஆண்டன், ரவிக்குமார், கேபிள் சங்கர், கார்த்திக் யோகி, படத்தின் இயக்குநர் சக்திவேல், நடிகர்கள் விதார்த், கருணாகரன், மாசூம் சங்கர், நடிகை ரூபா மஞ்சரி, மணிகண்டன், வினியோகஸ்தர் சக்திவேல், தயாரிப்பாளர் எஸ் தாணு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இப்படத்தை பார்வையிட்ட அனைவரும் சமூக வலைதளம் குறித்த சரியான பார்வையை இந்த திரைப்படம் இளைய தலைமுறையினருக்கு வழங்கியிருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக நடிகர் சூரி பேசுகையில்,…

‘ பயணிகள் கவனிக்கவும் படத்தை மக்கள் அனைவரும் கவனிக்க வேண்டும். மிகவும் அற்புதமான படம். நல்ல படத்தை பார்த்த சந்தோசம் மனதில் இருக்கிறது. மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படத்தை தமிழில் என்னுடைய நண்பர் சக்திவேல் இயக்கியிருக்கிறார். இன்றைய சூழலில் சமூக வலைதளங்களை எந்த அளவிற்கு பயன்படுத்தவேண்டும் என்பதை தெளிவாக சொல்லி இருக்கிறார்கள்.

ஒரு போட்டோவை பதிவிடுவதாக இருந்தாலும் சரி… ஒரு வீடியோவை பதிவிடுவதாக இருந்தாலும் சரி… அல்லது அதுகுறித்து கருத்துக்கள் தெரிவித்தாலும் சரி.. அதை எவ்வளவு கவனத்துடன் கையாள வேண்டும் என்பதையும், தவறாக பதிவிட்டால் எத்தனை பேருடைய வாழ்க்கை பாதிக்கப்படுகிறது என்பதையும் எடுத்துக்காட்ட இந்த ஒரு படம் போதும்.

சமூக வலைதளங்களை நல்ல விதத்தில் பயன்படுத்தினால் ஒருவருடைய வாழ்க்கை எப்படி மேன்மை அடைகிறது என்பதையும் சொல்லி இருக்கிறார்கள்.

நான்கு பேருக்கு முன்னால் நன்றாக வாழவேண்டும் என்பதை விட நான்கு செல்போன்களுக்கு இடையே மிகவும் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம் இது. இதை தெளிவாக சொல்லியிருக்கும் திரைப்படம் ‘பயணிகள் கவனிக்கவும்’.

பொதுவாக பல படங்களை ரீமேக் செய்கிறார்கள். ஆனால் எந்தப் படத்தை ரீமேக் செய்ய வேண்டும் என்ற அவசியம் இருக்கிறதோ…!

அந்தப் படத்தை ரீமேக் செய்வதுதான் சரி. அந்தவகையில் சமூகத்திற்கு நலன் பயக்கும் தரமான படத்தை ரீமேக் செய்திருக்கிறார்கள். படத்தை தயாரித்த நண்பர் விஜய், இயக்கிய சக்திவேல் மற்றும் படக்குழுவினருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

என்னுடைய பங்காளி, நண்பர் விதார்த் படம் முழுவதும் அற்புதமாக நடித்திருக்கிறார். பேசாமல், தன்னுடைய உடல் மொழியால் ரசிகர்களை அழ வைத்திருக்கிறார். சிரிக்க வைத்திருக்கிறார். அவர் ஒரு முழுமையான நடிகர் என்பதை மீண்டும் இந்தப் படத்தில் நிரூபித்திருக்கிறார். அவர் மேலும் பல உயரங்களைத் தொட வேண்டும் என மனதார வாழ்த்துகிறேன்.

இது போன்ற தரமான படங்களை ஊக்குவிக்கும் ‘ஆஹா’ டிஜிட்டல் தளத்தை பாராட்டுகிறேன். இது போன்ற நல்ல படங்களை வெளியிடுவதற்கு உங்களின் பேராதரவு தொடர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

இதனிடையே ஆஹா ஒரிஜினல் படைப்பு ‘பயணிகள் கவனிக்கவும்’ படத்தை பிரத்யேகமாக பார்வையிட்ட பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களும் தங்களது நேர்மறையான விமர்சனத்தை சமூக வலைதளங்களில் பதிவேற்றி, இந்தப் படத்திற்கு வலிமை சேர்த்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஹா டிஜிட்டல் தளம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கும், சந்தாதாரர்களுக்கும் பல்வேறு வகையிலான ஒரிஜினல் படைப்புகளையும் வழங்கவிருக்கிறது.

ஆஹா ஒரிஜினல் படைப்பு ‘பயணிகள் கவனிக்கவும்’ படத்தைத் தொடர்ந்து கே. எஸ். ரவிக்குமார் நடிப்பில் தயாராகியிருக்கும் ‘கூகுள் குட்டப்பா’, ஜீ வி பிரகாஷ்குமார் நடிப்பில் தயாராகியிருக்கும் ‘ஐங்கரன்’ மற்றும் முன்னணி இயக்குநர்களின் கைவண்ணத்தில் தயாராகி வரும் புத்தம் புதிய வலைத்தளத் தொடர்களும் ஆஹா ஒரிஜினல்ஸில் வெளியாகவிருக்கிறது.

நெட்டிசன்களின் பொறுப்புணர்வு.; மலையாளத்தில் ‘விக்ருதி’ தமிழில் ‘பயணிகள் கவனிக்கவும்’ என்றானது
https://www.filmistreet.com/cinema-news/payanigal-gavanikkavum-departs-significantly-from-the-malayalam-original-vikruthi-says-director/

Celebrities praises Vidharth’s Payanigal Gavanikkavum

செப்டம்பர் 23ல் ‘அவதார்’ ரீ-ரீலீஸ்..; ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ ரிலீஸ் அப்டேட்

செப்டம்பர் 23ல் ‘அவதார்’ ரீ-ரீலீஸ்..; ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ ரிலீஸ் அப்டேட்

*20th Century Studios வழங்கும் ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ திரைப்படம் 16 டிசம்பர், 2022 இந்தியாவில் வெளியாகிறது*

அவதார் இரண்டாம் பாக திரைப்படம் டிசம்பர் 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. “அவதார்” படத்தின் தொடர்ச்சியான இப்படத்தின் தலைப்பு “அவதார்: தி வே ஆஃப் வாட்டர்”. முதல் படமான “அவதார்” படத்தின் சம்பவங்களுக்கு பிறகு, ஒரு தசாப்தத்திற்கும் மேலான காலகட்டத்தை கடந்து , சல்லி குடும்பம் (ஜேக், நெய்திரி மற்றும் அவர்களது குழந்தைகள்), அவர்களைப் பின்தொடரும் பிரச்சனைகள், ஒருவரையொருவர் பாதுகாப்பாக வைத்திருக்க, அவர்கள் செல்லும் தூரம், அவர்கள் உயிருடன் இருக்க போரிடும் போர்கள் மற்றும் அவர்கள் அடையும் துயரங்கள் அதைகடந்த அவர்களின் வெற்றி தான் இப்படத்தின் கதைக்களமாக அமைக்கப்பட்டுள்ளது.

ஜேம்ஸ் கேமரூன் இயக்கி, கேமரூன் மற்றும் ஜான் லாண்டாவ் தயாரித்த இப்படத்தில் ஜோ சல்டானா, சாம் வொர்திங்டன், சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங், கிளிஃப் கர்டிஸ், ஜோயல் டேவிட் மூர், CCH பவுண்டர், எடி ஃபால்கோ, ஜெமைன் கிளெமென்ட், ஜியோவானி ரிபிசி மற்றும் கேட் வின்ஸ்லெட் ஆகியோர் நடித்துள்ளனர்.

பார்வையாளர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில், *ஸ்டுடியோ “அவதார்” முதல் பாக திரைப்படத்தை செப்டம்பர் 23 அன்று திரையரங்குகளில் மீண்டும் வெளியிடுகிறது.

Avatar 2 is set to hit the screens in December

புலவருக்கும் தன் படத் தயாரிப்பாளருக்கும் டூ வீலரை பரிசளித்தார் நடிகர் சிவகுமார்

புலவருக்கும் தன் படத் தயாரிப்பாளருக்கும் டூ வீலரை பரிசளித்தார் நடிகர் சிவகுமார்

தமிழக அரசின் பாரதிதாசன் விருது பெற்ற புலவர். செந்தலை.ந.கவுதமனுக்கும், 1980 களில் தன்னை ஹீரோவாக வைத்து 2 படங்கள் எடுத்த -தமிழக அரசின் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது பெற்ற – சூலூர் கலைப்பித்தனுக்கும் மோட்டார் சைக்கிள் பரிசளித்தார் நடிகர் சிவகுமார்.

புலவர்.செந்தலை கவுதமனுக்கு 69 வயதாகிறது. சைக்கிளில் தான் சென்று கொண்டிருக்கிறார்.

சூலூர் கலை பித்தனும் 1983 மற்றும் 1986-ஆம் வருடங்களில் நடிகர் சிவகுமாரை வைத்து 2 படங்கள் எடுத்தவர்.

பேசாத படிக்காத நடிக்காத என சூப்பராக சொதப்பிய சூர்யா இன்று உலகத்தையே ஜெயிக்கிறான்..; சிலிர்க்கும் சிவகுமார்

அவர் முதியோர் பென்சனை வைத்துக் கொண்டு ஓட்டு வீட்டில் குடியிருக்கிறார். பேருந்தில் சலுகை கட்டணத்தில் சென்று கொண்டிருக்கிறார்.

இவர்கள் இருவருக்கும் ரூ.75,000/- மதிப்புள்ள TVS 100 வாங்கி நேற்று பரிசளித்தார் நடிகர் சிவகுமார்.

Actor Sivakumar gifted two wheelers to tamil poet and former producer

‘அக்கா குருவி’-யை பாராட்டிய உலகப் புகழ் இயக்குநர் மஜித் மஜிதி

‘அக்கா குருவி’-யை பாராட்டிய உலகப் புகழ் இயக்குநர் மஜித் மஜிதி

மதுரை முத்து மூவிஸ் மற்றும் கனவு தொழிற்சாலை இணைந்து தயாரிக்க, இயக்குநர் சாமி இயக்கத்தில் உருவாகியுள்ள குழந்தைகள் திரைப்படம் ‘அக்கா குருவி’.

இசைஞானி இளையராஜா இசையில் தமிழ் சினிமாவின் தரமான படைப்பாக உருவாகியுள்ள இப்படத்தை, பி வி ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் மே 6 ஆம் தேதி தமிழகமெங்கும் வெளியிடுகிறது.

உலகப்புகழ் பெற்ற திரைப்படமான சில்ட்ரன் ஆஃப் ஹெவன் படத்தின் அதிகாரப்பூர்வ மறுபதிப்பாக தான் இப்படம் உருவாகியுள்ளது.

இளையராஜா பாட்டு எழுதி இசையமைத்த ‘அக்கா குருவி‘. சாமி இயக்கத்தில் உலகத்தரப்படம்.

ஒரு ஏழை குடும்பத்தில் வசிக்கும் அண்ணன் தங்கை என இரு குழந்தைகளின் கதையாக, மனதை உலுக்கும் அற்புத படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தில் மூன்று பாடல்கள் இடம்பெறுகிறது. மூன்று பாடல்களையும் இளையராஜாவே எழுதி இசையமைத்துள்ளார்.

சில்ட்ரன் ஆஃப் ஹெவன் படத்தின் ஒரிஜினல் இயக்குநர், உலகளவில் கொண்டாடக்கூடிய பல படைப்புகளை தந்த இயக்குநர் மஜித் மஜிதி இப்படத்தை பார்த்து விட்டு, பாராட்டு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்

அக்கடிதத்தில்….

என்னுடைய ‘சில்ட்ரன் ஆஃப் ஹெவன்’ படத்தின் தமிழ் பதிப்பாக உருவாகியுள்ள ‘அக்கா குருவி’ படத்தை பார்த்தேன் மிகவும் மகிழ்ச்சி. ஒரிஜினலில் உள்ள உணர்வுகளை, கதையை இப்படத்தில் கையாண்ட விதம் அற்புதமாக இருந்தது.

மிக உண்மையான மறு உருவாக்கமாக படம் அமைந்துள்ளது. கிளைக்கதையாக வரும் காதல் கதை, உங்கள் கலாச்சாரத்தோடு ஒத்துபோக கூடியதென்று நம்புகிறேன்.

இப்படத்தின் இசையை மிக மிக ரசித்தேன். கதையின் சாரத்தை வெளிப்படுத்தும் அற்புத இசை. முடிந்தால் உங்கள் அனைவரையும் சந்திக்கவும், இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவும் ஆசைப்படுகிறேன். இப்படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள். நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

அக்கா குருவி திரைப்படம் மே 6 ஆம் தேதி தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

“AKKA KURUVI” has been Praised by the World Renowned Iranian Director.

சிம்பு ரசிகர்களுக்கு ‘வெந்து தணிந்தது காடு’ பட மாஸ் அப்டேட் கொடுத்த படக்குழு

சிம்பு ரசிகர்களுக்கு ‘வெந்து தணிந்தது காடு’ பட மாஸ் அப்டேட் கொடுத்த படக்குழு

‘விண்ணைத் தாண்டி வருவாயா’ & ‘அச்சம் என்பது மடமையடா’ படத்திற்கு பிறகு சிலம்பரசன் & கெளதம் மேனன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் ‘வெந்து தணிந்தது காடு‘.

3வது முறையாக சிம்பு – கெளதம் கூட்டணிக்கு இசையமைக்கவுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.

வருண் நடிப்பில் ‘ஜோஷ்வா’ படத்தை இயக்கி முடித்துள்ளார் கெளதம் மேனன்,

தற்போது ‘வெந்து தணிந்தது காடு’ படத்தை இயக்கியுள்ளார்.

இந்த இரண்டு படங்களையுமே வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்து வருகிறார்.

இப்படத்தின் போஸ்ட் புரொடெக்ஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியானது.

அதன்படி இப்படத்தின் முதல் பாடல் வரும் மே 6 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

VTK first single will be out on May 6th

சிவகார்த்திகேயனை பான் இந்தியா ஸ்டாராக்கும் கமல்ஹாசன்.?!

சிவகார்த்திகேயனை பான் இந்தியா ஸ்டாராக்கும் கமல்ஹாசன்.?!

கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள புதிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் வெளியானது. பிக்பாஸ் 5 நிகழ்ச்சியின் போது இந்த அறிவிப்பு வெளியானது

இந்த படத்தை ‘ரங்கூன்‘ பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார்.

இதில் ஸ்டண்ட் மாஸ்டர்களாக அன்பறிவ் இணையவுள்ளனர் என்ற அறிவிப்பும் சமீபத்தில் வெளியானது.

விரைவில் இப்பட படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில் இதன் கதை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய ராணுவம் தான் இதன் கதைக்களம் என கூறப்படுகிறது. போர் மட்டுமில்லாமல் ராணுவ வீரர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை இப்படம் சொல்லும் என தெரிகிறது.

தற்போது மத்திய அரசிடம் அனுமதி வாங்கும் பணிகள் நடைபெறுகிறதாம்.

இந்திய ராணுவம் குறித்த படம் என்பதால் இப்படத்தை பான் – இந்தியா திரைப்படமாக உருவாக்க படக்குழு திட்டமி்ட்டுள்ளதாம்.

Sivakarthikeyan – Kamal Haasan movie will be made as a pan indian film?

More Articles
Follows