இளையராஜா பாட்டு எழுதி இசையமைத்த ‘அக்கா குருவி‘. சாமி இயக்கத்தில் உலகத்தரப்படம்.

இளையராஜா பாட்டு எழுதி இசையமைத்த ‘அக்கா குருவி‘. சாமி இயக்கத்தில் உலகத்தரப்படம்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Akka Kuruvi shootதுரை முத்து மூவிஸ் மற்றும் கனவு தொழிற்சாலை இணைந்து தயாரித்துவரும் படம் ‘அக்காகுருவி’. சாமி டைரக்ட் செய்யும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரீ-ரெகார்டிங் வேலைகள் நடைபெற்று வருகிறது. உலகத்தரவரிசையில் இப்படத்துக்கு ரீ-ரெகார்டிங் செய்து வருகிறார் இளையராஜா. இப்படத்தில் மூன்று பாடல்கள் இடம்பெறுகிறது. மூன்று பாடல்களையும் இளையராஜாவே எழுதியுள்ளார். உலகப்புகழ் பெற்ற திரைப்படமான சில்ட்ரன் ஆஃப் ஹெவன் படத்தின் மறுபதிப்பான அக்கா குருவியை அதன் ஒரிஜினல் கெடாமல் படமாக்கியுள்ளார். படத்தை பார்த்த பின் தான் இசையமைக்க ஒப்புக்கொண்டுள்ளார் இளையராஜா.

இரண்டு குழந்தைகள், அப்பா அம்மா இவர்களுடைய உணர்ச்சிகளின் தாக்கம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கும். இந்த காட்சிகளுக்கு பின்னணி இசையில் பல உணர்ச்சிகரமான இடங்களில் இளையராஜாவின் பழைய பாடல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. உணர்ச்சிகளின் வெளிப்பாடாக அது அமையும். மொத்தம் 11 பாடல்கள் உபயோகப்படுத்தியுள்ளனர்.

குழந்தைகளின் கோடை கொண்டாட்டமாக மே மாதம் இப்படத்தை திரைக்குகொண்டுவர திட்டமிட்டுள்ளார்கள்.

கதை:- மஜித் மஜிதி

பாடல்கள் & இசை :- இளையராஜா

இயக்கம்:- சாமி

விஜய்யின் எனர்ஜி ரகசியத்தை கண்டுபிடித்தே ஆகனும்.. – ஹிருத்திக் ரோஷன்

விஜய்யின் எனர்ஜி ரகசியத்தை கண்டுபிடித்தே ஆகனும்.. – ஹிருத்திக் ரோஷன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Hrithik roshan vijayபாலிவுட்டில் பிரபலமான நடிகர் ஹிருத்திக் ரோஷன்.

இவர் நேற்று சென்னைக்கு வந்திருந்தார்.

அப்போது நடிகர் விஜய் எனர்ஜியான டான்ஸ் தனக்கு மிகவும் பிடிக்கும் என தெரிவித்தார்.

நம்பிக்கை வைத்த விஜய் அண்ணாவுக்கு நன்றி.. – லோகேஷ் கனகராஜ்

அவர் இந்தளவு எனர்ஜியாக டான்ஸ் ஆடுவதற்கு என்ன டயட் திட்டங்களை வைத்துள்ளார் என்ற ரகசியத்தை தான் கண்டுபிடித்த ஆக வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதனையறிந்த விஜய் ரசிகர்கள் அந்த தகவலை சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றனர்.

இயக்குநர் ஆர்.கண்ணன், தானே எழுதி, இயக்கி, தயாரிக்கும் படம் ‘பிஸ்கோத்’.

இயக்குநர் ஆர்.கண்ணன், தானே எழுதி, இயக்கி, தயாரிக்கும் படம் ‘பிஸ்கோத்’.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Biskothஇயக்குநர் ஆர்.கண்ணன், தானே எழுதி, இயக்கி, தயாரிக்கும் படம் ‘பிஸ்கோத்’. இதில் சந்தானம் நாயகனாக நடிக்கிறார்.

கண்ணன் இயக்கத்தில் ‘ஜெயம் கொண்டான்’ மற்றும் ‘கண்டேன் காதலை’ படங்களில் சந்தானம் நடித்திருந்தார். ஆனால், அவரை கதாநாயகனாக வைத்து இயக்குவது இதுதான் முதல் படம். பிஸ்கட் கம்பெனியில் சாதாரணமாக பணியாற்றுபவன் எப்படி உயர் பதவிக்கு செல்கிறான் என்பதே இப்படத்தின் கதை.

இப்படத்தில் ‘சௌகார்’ ஜானகி சந்தானத்தின் பாட்டியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது அவருக்கு 400-வது படம்.

இப்படத்தில் சந்தானத்திற்கு மூன்று வேடங்கள் இருக்கிறது. அதில் ஒன்று ‘சகலகலா வல்லவன்’ படத்தில் கமல் போல வேடம் அணிந்து இருப்பார். அந்த வேடத்தில் அந்த கால பாணியில் ஒரு சண்டைக் காட்சியும் இருக்கிறது. அதேபோல், ஐதராபாத்தில் பதினெட்டாம் நூற்றாண்டுகளில் உள்ளதுபோல் அரண்மனை தளம் அமைத்து படப்பிடிப்பு நடந்தது.

இசையமைப்பாளர் ரதன் ஏ.ஆர்.ரஹ்மானிடம் உதவியாளராக இருந்தவர். நாம் எதிர்பார்ப்பதை அப்படியே கொடுக்கும் திறமைசாலி. ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படம் அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது.

தாரா அலிஷா பெர்ரி மற்றும் சுவாதி முப்பாலா இருவரும் நாயகிகளாக நடிக்க, ஆனந்த்ராஜ், சௌகார் ஜானகி, ‘மொட்ட’ ராஜேந்திரன், சிவசங்கர், ‘லொள்ளு சபா’ மனோகர் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

எழுத்து இயக்கம் – ஆர்.கண்ணன்
இசை – ரதன்
ஒளிப்பதிவு – சண்முகசுந்தரம்
படத்தொகுப்பு – ஆர்.கே.செல்வா
கலை – ராஜ்குமார்
சண்டை பயிற்சி – ஹரி
நடனம் – சதீஷ்
மக்கள் தொடர்பு – ஜான்சன்
தயாரிப்பு மேற்பார்வை – ராஜா ஸ்ரீதர்
தயாரிப்பு – ஆர்.கண்ணன்.

ஆர்யா- சுந்தர்.சி நடிப்பில் ”அரண்மனை 3” ராஜ்கோட்டில் படப்பிடிப்பு ஆரம்பமானது.

ஆர்யா- சுந்தர்.சி நடிப்பில் ”அரண்மனை 3” ராஜ்கோட்டில் படப்பிடிப்பு ஆரம்பமானது.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Aranmanai 3அவ்னி மூவிஸ் சுந்தர்.சி தயாரிப்பில் “அரண்மனை3” படப்பிடிப்பு குஜராத் அருகே ராஜ்கோட் என்ற இடத்தில் வான்கெனர் பேலஸ் எனப்படும் பிரமாண்டமான அரண்மனையில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 30 நாட்கள் இங்கு படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அரண்மனை, அரண்மனை2 மாபெரும் வெற்றியை தொடர்ந்து அதன் 3ஆம் பாகமான ’அரண்மனை3’ எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ளது. இதில் ஆர்யா, சுந்தர்.சி, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, விவேக், யோகிபாபு, சம்பத் குமார், நந்தினி, விச்சு, மனோபாலா, சாக்சி அகர்வால் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இயக்கம் – சுந்தர்.சி
இசை- சத்யா
ஒளிப்பதிவு-U.K. செந்தில் குமார்.

முழுப்படப்பிடிப்பையும் முடித்த “குருதி ஆட்டம்” படக்குழு !

முழுப்படப்பிடிப்பையும் முடித்த “குருதி ஆட்டம்” படக்குழு !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kuruthi aattamதனித்தன்மை கொண்ட இயக்குநர்களின் இயக்கத்தில் வரும் அழுத்தமான கதைக்களம் கொண்ட படங்களுக்கு, ரசிகர்களிடம் எப்போதும் சிறப்பு வரவேற்பு இருந்து வருகிறது. “எட்டு தோட்டாக்கள்” என ஒரே படம் மூலம், புகழ் பெற்ற இயக்குநராக மாறிவிட்ட இயக்குநர் ஶ்ரீகணேஷ் இயக்கத்தில் அதர்வா முரளி, ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகிவரும் “குருதி ஆட்டம்” திரைப்படம், தலைப்பு முதலாகவே அழுத்தமான பின்புலம் கொண்டதாக, ரசிக்ர்களிடம் அதீத கவன ஈர்ப்பை பெற்றுள்ளது. தற்போது இப்படத்தின் படக்குழு படப்பிடிப்பை முழுமையாக முடித்த மகிழ்ச்சியில் போஸ்ட் புரடக்‌ஷன் பணிகளுக்கு தயராகி வருகிறது படக்குழு.

இது குறித்து இயக்குநர் ஶ்ரீகணேஷ் கூறியதாவது…

மிகதிறமை வாய்ந்த நடிகர்களான அதர்வா முரளி, ப்ரியா பவானி சங்கர், ராதிகா சரத்குமார், ராதாரவி அவர்களுடன் பணியாற்றிய அனுபவம் பெரும் மகிழ்ச்சியையும், கற்றுக்கொள்ளும் நல்ல அனுபவத்தையும் தந்தது. அதர்வா முரளி எப்போதும் இயக்குநர்களின் நடிகராகவே இருந்து வருகிறார். ஆனால் எப்படிப்பட்ட நடிகரானாலும் தொடர்ந்து வெற்றிபடங்களை தந்து வருபவர்கள் என்னைப் போல் புதுமுக இயக்குநர்களுக்கு திரைக்கதையில், இயக்கத்தில், தங்களது அறிவுரையை வழங்குவார்கள். ஆனால் அதர்வா முரளி ஒரு சிறு துளி கூட அப்படி நடக்கவில்லை. திரைக்கதையை கேட்டு ஒப்புக்கொண்ட பிறகு, அவர் தன்னை முழுதாக என்னிடம் ஒப்புவித்துவிட்டார். ப்ரியா பவானி சங்கர் தமிழ் பேசும் நடிகையாக பல உயரங்களுக்கு செல்லக்கூடிய திறமைசாலி. அவர் தந்து வரும் தொடர் வெற்றிபடங்கள் மட்டுமல்ல, வரவிருக்கும் அவரது படங்களும் மிகப்பிரமாண்டமான இடத்தை அவருக்கு தரக்கூடியது. ராதிகா மேடம், நடிகர் ராதாரவி அவர்களுடன் வேலை செய்ய முதலில் என்னுள் பெரும் தயக்கம் இருந்தது. ஆனால் அவர்களுடன் வேலை செய்தது ஆசிர்வதிக்கப்பட்ட அனுபவமாக இருந்தது. மிகப்பெரும் ஆளுமைகளாக இருந்தும் அனைவருடனும் அவர்கள் வெகு எளிமையாக பழகினார்கள். பேபி திவ்யதர்ஷினி இத்திரைப்படம் மூலம் மிகப்பெரிய இடத்தை அடைவார். படத்தில் அவரது கதாப்பாத்திரம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. அவர் படப்பிடிப்பில் இருந்தபோது படக்குழுவில் இருந்த அனைவரின் செல்லமாக மாறிவிட்டார். இத்திரைப்படத்தை நினைத்தபடியே உருவாக்க பெரும் ஆதராவாக இருந்த தயாரிப்பாளர் முருகாநந்தம் அவர்களுக்கு இந்நேரத்தில் பெரிய நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இப்படம் “எட்டு தோட்டாக்கள்” போன்று ஒரு புதிய அனுபவத்தை உங்களுக்கு தரும் என்றார்.

Rockford Entertainment சார்பாக முருகாநந்தம் இப்படத்தை தயாரிக்கிறார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். டிரெயலர் மற்றும் இசை விரைவில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தினை வரும் கோடை கால விடுமுறையில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் பரத் நடிக்கும் லாஸ்ட் 6 ஹவர்ஸ்

முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் பரத் நடிக்கும் லாஸ்ட் 6 ஹவர்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bharath in Last 6 Hoursலேஷி கேட் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் அனூப் காலித் தயாரித்திருக்கும் படம் ‘லாஸ்ட் 6 ஹவர்ஸ்’. சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் பரத் கதாநாயகனாக நடிக்கிறார். இவருடன் விவியா சன்த், அடில் இப்ராஹிம், அனுமோகன், பிரமிள் சித்தார்த் ஆகியோர் நடித்துள்ளார்கள். மேலும் தயாரிப்பாளர் அனூப் காலித் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

கைலாஷ் மேனன் இசையமைக்கும் இப்படத்திற்கு சினு சித்தார்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். சுரேஷ் (தூத்துக்குடி) கதை எழுத, சுனிஷ் குமார் இயக்கி இருக்கிறார். ராஜீவ் மேனனிடம் இணை இயக்குனராக பணியாற்றிய இவர் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

வெவ்வேறு துறையில் சிறந்து விளங்கும் நான்கு பேர் பெரிய திருட்டு செய்து வாழ்க்கையில் செட்டிலாக நினைக்கிறார்கள். அதன்படி நான்கு பேரும் 6 மணி நேரத்தில் ஒரு திருட்டை முடிக்க திட்டமிடுகிறார்கள். ஆனால், அங்கு எதிர்பாராத சம்பவங்கள் நடக்கிறது. அந்த சம்பவம் என்ன? திருட சென்றவர்களின் நிலைமை என்ன ஆனது? என்பதை பல திருப்பங்களுடன் உருவாக்கி இருக்கிறார்கள். இப்படம் பரத்துக்கு பெயர் சொல்லும் படமாக அமையும் என்றும், தமிழைப் போல் மலையாளத்திலும் நடிப்பால் தடம் பதிப்பார் என்றும் இயக்குனர் சுனிஷ் குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் உருவாகி இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, கேரளா, துபாய் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவிக்க இருக்கிறார்கள்.

More Articles
Follows