பொள்ளாச்சி பாலியல் கொடுமை: சித்தார்த்-ஜிவி.பிரகாஷ் கண்டனம்

New Project (9)பொள்ளாச்சியில் பல இளம் பெண்களை ஒரு கும்பல் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியுள்ளது.

அச்சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியானதை அடுத்து நாடெங்கிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன.

குற்றவாளிகளை தண்டிக்காமல் விடக்கூடாது என அனைத்து தரப்பிலும் குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியியுள்ளன.

இந்நிலையில், நடிகர் சித்தார்த் தன்னுடைய கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

“பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை செய்தியால் அதிர்ச்சியடைந்தேன்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான ஆதரவு கிடைக்கும் என நம்புகிறேன்.

சமூக வலைத்தளங்களால் பெண்களை வேட்டையாடுவது அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு எதிராக நாம் பாதுகாப்பு கொடுக்கவேண்டும்” என தெரிவித்துள்ளார் சித்தார்த்.

ஜிவி. பிரகாஷ் கூறியுள்ளதாவது…

“இந்தக் கொடிய அரக்கர்களை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன். மிருகங்களினும் கேவலமான இந்த 4 பேரும் பெண்களை சித்ரவதை செய்து, பாலியல் கொடுமைப்படுத்திய வீடியோ பார்த்து நெஞ்சம் பதைபதைக்கிறது.

இவர்களைப் பொது வெளியில் நடமாட விடுவது சமூகத்திற்குப் பேராபத்து” என தெரிவித்துள்ளார்.

Overall Rating : Not available

Latest Post