தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
காஞ்சிபுரம் மாவட்டம் வேதமங்களம் கிராமத்தில் நடிகர் சங்கத்திற்கு சொந்தமாக 29 சென்ட் நிலம் உள்ளது.
கடந்த 2006ம் ஆண்டு அந்த நிலத்தை முறைகேடாக விற்று, அத்தொகையை கையாடல் செய்ததாக நடிகர் சங்கத்தின் அப்போதைய தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளராக இருந்த ராதாரவி உள்ளிட்ட முன்னாள் நிர்வாகிகளுக்கு எதிராக, அச்சங்கத்தின் தற்போதைய பொதுச்செயலாளர் விஷால் புகார் அளித்திருந்தார்.
காஞ்சிபுரம் காவல் கண்காணிப்பாளரிடம் இது தொடர்பாக புகார் அளித்திருந்தார்.
ஆனால் புகாரில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறி உயர்நீதிமன்றத்தில் விஷால் மனு தாக்கல் செய்தார்.
இம்மனுவை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், புகாரை விசாரித்து முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்ய காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.