சிங்கிள் ஷாட் விருதை வென்ற போஸ் வெங்கட் – ஸ்ரீராம் கார்த்திக் கூட்டணியின் ‘யுத்த காண்டம்’

சிங்கிள் ஷாட் விருதை வென்ற போஸ் வெங்கட் – ஸ்ரீராம் கார்த்திக் கூட்டணியின் ‘யுத்த காண்டம்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘கன்னி மாடம்’ புகழ் ஸ்ரீராம் கார்த்திக், மற்றும் ‘கோலி சோடா’ புகழ் க்ரிஷா க்ருப், யோக்ஜேப்பி, போஸ் வெங்கட், சுரெஷ் மேனன் உள்பட பலர் நடித்துள்ள படம் ‘யுத்த காண்டம்’.

ஹரிசாய் இசையில், இனியன் ஜே ஹாரிஷ் ஒளிப்பதிவில், போஸ் வெங்கட் கதை, திரைக்கதையில், ஆனந்தராஜன் இயக்கியுள்ளார்.

பேரடைஸ் சினிமாஸ் தயாரிப்பில் இது ஒரே ஷாட்டில் உருவாகி உள்ள படமாகும்.

இந்த படம் தற்போது சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல்வேறு விருதுகளை பெற்று வருகிறது.

இது குறித்து படத்தயாரிப்பு தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது…

“25 நடிகர்கள், 100 தொழில்நுட்ப கலைஞர்கள் , 50 இரவுகள் ஒத்திகை செய்து உருவாக்கப்பட்ட சிங்கிள் ஷாட் ஆக்ஷன் மூவி யுத்தகாண்டம்.

ஸ்வீடன் உலக திரைப்பட விழாவில் சிறந்த சிங்கிள் ஷாட் படத்திற்கான விருதை வென்றுள்ளது.

மேலும் கல்கத்தா சர்வதேச படவிழாவிலும், பூட்டான் சர்வதேச படவிழாவிலும், கோவா உலக திரைப்பட விழாவிலும் சிறந்த படத்திற்கான விருதை வென்றுள்ளது.

மேலும் பல திரைப்பட விழாக்களில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது.”

என செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Bose Venkat’s Yuddha Kaandam won awards at international film festival

மீரா மிதுன் யூடியூப் சேனலை முடக்க யூ-டியூப் நிறுவனத்திற்கு போலீசார் கடிதம்

மீரா மிதுன் யூடியூப் சேனலை முடக்க யூ-டியூப் நிறுவனத்திற்கு போலீசார் கடிதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி தன்னை எப்போதும் சமூக வலைத் தளங்களில் பேச வைப்பவர் நடிகை மீரா மிதுன்.

சமீபத்தில் இவர் தலித் இன மக்களைப்பற்றி இழிவாக பேசியிருந்தார்.

எனவே மீரா மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

இதனையடுத்து ஒரு வீடியோ வெளியிட்டார் மீரா.

அதில்..

‛‛நான் ஒட்டுமொத்த பட்டியல் இன மக்களை பற்றி தவறாக பேசவில்லை. என்னை தொந்தரவு செய்தவர்களை பற்றி மட்டும்தான் பேசினேன்.

என்னை கைது செய்ய வேண்டும் என சிலர் சொல்கிறார்கள். தாராளமாக கைது செய்யுங்கள்.

ஏன் காந்தி, நேரு சிறைக்கு போகலையா..? என்னை கைது செய்ய ஒரு சூழல் எனக்கு வராது. என்னை கைது செய்ய வேண்டும் என்றால் அது கனவில் தான் நடக்கும். தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருங்கள்” என போலீசுக்கு சவால் விடும் வகையில் பேசியிருந்தார்.

இதனை பிரபலங்களும் சமூக ஆர்வலர்களும் கடுமையாக கண்டித்தனர்.

இதனையனுத்து கேரளாவில் நடிகை மீரா மிதுனை சென்னை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர்

இந்த நிலையில் நடிகை மீரா மிதுன் நடத்தி வரும் யூடியூப் சேனலை முடக்க யூ-டியூப் நிறுவனத்திற்கு மத்திய குற்றபிரிவு போலீசார் கடிதம் அனுப்பியுள்ளனர்.

அதில்.. மீரா மிதுன், வன்முறையை தூண்டும் வகையில் பேசி வீடியோ வெளியிட்டதால் மத்திய குற்றப்பிரிவினர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

Meera Mithun’s Youtube channel to be suspended

46YearsOfRAJiNiSM : இந்திய சினிமாவின் ‘அபூர்வ ராகம்’ சிவாஜி ராவ் ரஜினியாக மாறிய தருணம்.; ஒரு ப்ளாஷ்பேக்

46YearsOfRAJiNiSM : இந்திய சினிமாவின் ‘அபூர்வ ராகம்’ சிவாஜி ராவ் ரஜினியாக மாறிய தருணம்.; ஒரு ப்ளாஷ்பேக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னையில் உள்ள பிலிம்சேம்பர் வளாகத்தில் நடிப்பு, டைரக்ஷன், எடிட்டிங், ஒளிப்பதிவு முதலியவற்றில் பயிற்சி பெற, விண்ணப்பம் அனுப்பலாம் என்று பத்திரிகையில் விளம்பரம் வந்ததைக் கண்டு, அதற்கு ரஜினி விண்ணப்பித்தார்.

நேர்காணலில் தேர்வு செய்யும் அதிகாரிகளைக் கவர்ந்த ரஜினி, நடிப்பு பயிற்சி பெறும் வாய்ப்பை பெற்றார். கண்டக்டர் வேலைக்கு நீண்ட விடுப்பு எடுத்துக் கொண்டு நடிப்பு பயிற்சி பெற்றார்.

அமிஞ்சிகரையில் தங்கி தினமும் அண்ணாசாலையில் உள்ள பயிற்சி நிலையத்திற்கு பஸ்ஸில் சென்ற ரஜினி, சினிமாவில் எப்படி நடிக்க வேண்டும், எப்படி வசனம் பேச வேண்டும் என்றெல்லாம் அங்கு பயிற்சி பெற்றார். அவருடன் 36 மாணவர்கள் பயிற்சிபெற்றனர்.

அங்கு, உலகப் புகழ் பெற்ற திரைப்படங்களை பார்க்கிற வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. சினிமா உலகைச் சேர்ந்த நடிகர் – நடிகைகள், டைரக்டர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் அடிக்கடி பயிற்சி நிலையத்திற்கு வந்து கலந்துரையாடுவார்கள். இவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பார்கள். சந்தேகங்களைத் தீர்த்து வைப்பார்கள்.

அப்படி ஒருமுறை இயக்குநர் கே.பாலசந்தர் வருகை தந்து, மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது ரஜினியும் அவரிடம் கேள்வி எழுப்பினார். “ஒரு நடிகனிடம் அவன் நடிப்பைத் தவிர வேறு எதை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?” என்று ஆங்கிலத்தில் வேகமாகக் கேட்டதால், கே.பாலசந்தருக்கு புரியவில்லை.
பிறகு நிறுத்தி – நிதானமாக மீண்டும் அந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறார்.

பாலசந்தர் சிரித்துக்கொண்டே, “நடிகன் வெளியே நடிக்கக்கூடாது” என்று கூறியாவர், உன் பெயர் என்ன என்று கேட்டிருக்கிறார். “சிவாஜிராவ்” என்று பதில் சொல்லி இருக்கிறார், ரஜினி.

நிகழ்ச்சி முடிந்து புறப்பட்ட பாலசந்தர், ரஜினியை நோக்கி கையை நீட்டினார். ரஜினியும் கை நீட்ட, கை குலுக்கி இருக்கிறார்.

பயிற்சி ஆசிரியர் அருகே வந்து “இவனுக்கு உங்க படங்களை ரொம்பப் பிடிக்கும் “சார்! உங்கப்படம் என்றால் இவனுக்கு உயிர். அவள் ஒரு தொடர்கதை படத்தை ஆறு தடவை பார்த்திருக்கிறான்!” என்று பாலசந்தரிடம் கூறி இருக்கிறார்.

பாலசந்தர் சிரித்தபடி, “உனக்கு தமிழ் தெரியுமா?” என்று ரஜினியிடம் கேட்க, “கொஞ்சம் கொஞ்சம் தெரியும்” என்று ரஜினி சொல்லி இருக்கிறார்.

“உனக்குத் தமிழ் தெரியாது என்பது உன் பேச்சில் இருந்தே தெரிகிறது!” என்று சொன்ன பாலசந்தர், பிறகு, “நான் வருகிறேன்” என்று விடைபெற்றுக்கொண்டு ஆசிரியருடன் கார் வரை பேசிக் கொண்டே சென்றார்.

கே.பாலசந்தர் சென்ற பிறகு, திரும்பி வந்த ஆசிரியர், “பாலசந்தர் சார் உன்னை பார்க்க விரும்புகிறார். நீ போய் அவரை ஒரு நாள் அவருடைய ஆபிசில் பாரு” என்று கூறி இருக்கிறார்.

ரஜினிக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. பாலசந்தர் சார் நம்மை பார்க்க விரும்புகிறார்? பட சான்ஸ் தேடி வருகிறது என்று நெகிழ்ந்து போனார்.

ஆனால், ஊரில் இருந்து ரஜினிக்கு ஒரு கடிதம் வந்தது. “உடனே புறப்பட்டு வா!” என்று அதில் அவர் அண்ணன் எழுதியிருந்தார்.

இரண்டு வருடங்களுக்கு மேலாக விடுமுறையில் இருந்ததால், மேற்கொண்டு அனுமதிக்க முடியாது என்று உன்னை கண்டக்டர் வேலையில் இருந்து டிஸ்மிஸ் செய்து விட்டார்கள் என்கிற தகவல் கிடைத்தது.

பஸ் டெப்போவுக்கு சென்ற போது, அங்கிருந்தவர்கள் ரஜினியை பரிதாபமாகப் பார்த்தார்கள். “கவலைப்படாதே. நீ பெற்ற நடிப்பு பயிற்சி, உன்னை கைவிட்டு விடாது” என்று நண்பர் புட்ராஜ் ஆறுதல் கூறி இருக்கிறார்.

முன்பு ரஜினியை புகழ்ந்து பேசியவர்கள் இப்போது, “நடிகனாக வேண்டும் என்று மெட்ராஸ் போனான். இவன் மூஞ்சிக்கு நடிகனாக முடியுமா? யார் – யார் எங்கே இருக்க வேண்டுமோ அங்கே இருக்கணும்!” என்று ரஜினியின் காதுபடவே பேசினார்கள்.

ரஜினி அப்போது ஒரு உறுதியான முடிவை எடுத்தார். நடிகனாகாமல் இனி பெங்களூருக்குத் திரும்பக்கூடாது!’ என்று. அன்று இரவே சென்னைக்கு ரெயில் ஏறினார்.
திரைப்பட பயிற்சி பெற்றால் தேடி வந்து வாய்ப்பு தரமாட்டார்கள். நாம் தான் சினிமா உலகை தேடிப் போக வேண்டும் என்று படக் கம்பெனிகளுக்கு செல்ல முடிவு செய்தார்.

ஒரு நாள் மாலை ஐந்து மணி அளவில் நண்பன் சதீஸ் ஒடி வந்து, “சிவாஜி! பாலசந்தர் சார் ஆபீசில் இருந்து, அசோசியேட் டைரக்டர் சர்மா வந்திருக்கிறார். பாலசந்தர் சார், உன்னை உடனே அழைத்து வரச் சொன்னாராம்!” என்று கூறி இருக்கிறார்.

கே.பாலசந்தரின் அலுவலகத்தில் அவரை சந்தித்த ரஜினி, அவர் முன் அமர தயங்கி இருக்கிறார்.
என்ன படிச்சிருக்கீங்க?’ என்று பாலசந்தர் கேட்டிருக்கிறார்.

`எஸ்.எஸ்.எல்.சி. பாஸ்!” என்றதும், `நான் இதுவரை உங்கள் நடிப்பைப் பார்த்ததில்லை. ஏதாவது நடித்துக் காட்டுங்கள்!’ என்று கூறி இருக்கிறார்.
`எனக்குத் தமிழ் தெரியாதே!’ என்று ரஜினி சொன்னதும், பரவாயில்லை. கன்னடத்தில் பண்ணுங்க!’ என்று பாலசந்தர் கூறி இருக்கிறார்.

கிரீஷ்கர்னாட் எழுதிய “துக்ளக்” நாடகத்தில் இருந்து ஒரு காட்சியை நடித்துக் காட்டி இருக்கிறார், ரஜினி.
பாலசந்தருக்கு பிடித்திருந்தது. `ரொம்ப நல்லா இருக்கு’ என்று பாராட்டி இருக்கிறார்.

`இப்போது, அபூர்வ ராகங்கள்’ என்ற படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறேன். அதில் ஒரு ரோல். அது சின்ன ரோல் என்றாலும், ரொம்ப பவர்புல் ரோல். அந்த ரோலில் உங்களை அறிமுகம் செய்யப்போகிறேன். அடுத்து, `அவள் ஒரு தொடர்கதை’ படத்தை தெலுங்கில் எடுத்துக் கொண்டிருக்கிறேன். தமிழில் ஜெய்கணேஷ் நடித்த ரோல் உங்களுக்கு!” என்று சொன்ன பாலசந்தர், “உங்களுக்கு தெலுங்கு தெரியுமா?” என்று கேட்டிருக்கிறார்.

தெலுங்கில் சில வார்த்தைகள்தான் தெரியும் என்றதும், “மூன்றாவது ஒரு கதை இருக்கு. அதில் ஆண்டி ஹீரோ ரோலை உங்களுக்குக் கொடுக்கலாம் என்று இருக்கிறேன்” என்று கூறிவிட்டு, “நீங்கள் மட்டும் தமிழை நன்றாகக் கற்றுக் கொண்டால், உங்களை எங்கேயோ கொண்டு போய் விட்டு விடுவேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

3 படங்களில் நடிக்க வைக்கப் போவதாக இயக்குநர் கே.பாலசந்தர் கூறியதால் மகிழ்ச்சியின் உச்சிக்குச் சென்ற ரஜினிகாந்த், நேராக டிரைவ்-இன்-உட்லண்ட்ஸ் ஓட்டலுக்குச் சென்று நண்பர்களுக்கு சுவிட், மசாலா தோசை, காபி வாங்கிக் கொடுத்து கொண்டாடி இருக்கிறார்.

“அபூர்வ ராகங்கள் படத்தின் ஷூட்டிங் நாளைக்கு நடக்கிறது. உங்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளை பாலசந்தர் எடுக்கப்போகிறார். ஸ்டூடியோவுக்கு வந்துவிடுங்கள்” என்று கூறினார்கள்.

அவர்கள் சொன்னபடியே ரஜினி ஸ்டூடியோவுக்கு சென்றார். ஆனால், அன்று அவரது காட்சிகள் எடுக்கப்படவில்லை. மறுநாளும் போனார். அன்றும், அதற்கு அடுத்த நாளும் கூட அவருக்கு படப்பிடிப்பு இல்லை. நான்காவது நாள் அவருக்கான காட்சிகளை படமாக்கினார் பாலசந்தர்.

ஒரு பெரிய பங்களா. அதற்கு ஒரு பெரிய கதவு. அதைத் திறந்துகொண்டு, தாடி-மீசையுடன் உள்ளே நுழைகிறார், ரஜினி.

“பைரவி வீடு இதுதானா? நான் பைரவியோட புருஷன்!” என்று கமலஹாசனிடம் கூறுகிறார். ரஜினி பேசிய முதல் வசனம் இதுதான்.

படப்பிடிப்புக்கு முன், இந்த வசனத்தை பல தடவை பேசிப் பேசி ஒத்திகை பார்த்திருந்தார், ரஜினி.

“கிளாப்!” என்று இயக்குநர் கூறியதும், பதற்றத்தில் வசனத்தை உளறி இருக்கிறார், ரஜினி. தான் அவ்வளவு சரியா செய்யவில்லை என்பதை, பாலசந்தர் முகத்திலிருந்து தெரிந்து கொண்ட ரஜினி, அடுத்த ஷாட்டில் பாராட்டும் படி நடித்திருக்கிறார்.

அபூர்வராகங்கள் படத்தின் படப்பிடிப்பு முடிந்து தனது காட்சிகளுக்கு டப்பிங் பேச சென்ற ரஜினி, ஜெமினி ஸ்டூடியோவில் அப்போது கமலஹாசனும், ஸ்ரீவித்யாவும் `டப்பிங்’ பேசிக் கொண்டிருபாதை கண்டு, தன்னுடைய காட்சி எப்போது வரும் என்று காத்திருந்தார்.

திடீரென்று திரையில் ஒரு காட்சி. கோட்டு போட்ட ஒரு தாடி ஆசாமி, கதவைத் திறந்து கொண்டு வருகிறான். ஏதோ பேசுகிறான். ரஜினியால் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்புறம்தான் தெரிந்தது – அது தான்தான் என்று! தன்னை மறந்து, அந்தக் காட்சியைப் பார்த்திருக்கிறார்.

தன் உருவத்தை திரையில் பார்த்தபோது உடம்பெல்லாம் சிலிர்த்துப் போக நின்று கொண்டிருந்த ரஜினியை கவனித்த கே.பாலசந்தர், “என்ன! சிவாஜி டப்பிங் போகலாமா என்று கேட்டிருக்கிறார்.

ரஜினிக்கு தமிழ் சரிவரத் தெரியாததால், வேறு யாரையாவது அவருக்கு குரல் கொடுக்கச் சொல்லலாம் என்று சிலர் கூறினார்கள். பாலசந்தர் அதை ஏற்கவில்லை. `கூடவே கூடாது. ஒரிஜினல் வாய்ஸ்தான் வேண்டும்’ என்று கூறி ரஜினிய பேச அழைத்திருந்தார்.

ரஜினி முதல் முறையாக டப்பிங் பேசினார். எப்படி உச்சரிக்க வேண்டும் என்று பாலசந்தர், சொல்லிக் கொடுத்தார். அதை அப்படியே வாங்கி பேசினார் ரஜினி.

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் என்கிற புகழ் பெற்ற நடிகர் இருப்பதால், சிவாஜி என்ற பெயர் உனக்கு வேண்டாம். `ராவ்’ என்கிற பெயரும், தமிழ்நாட்டுக்குப் பொருந்தாது. `டைட்டிலில் எப்படி பெயர் போட வேண்டும் என்று பாலசந்தர் கேட்ட போது, நண்பர்களை கலந்து கொண்டு, `சரத்’, `ஆர்.எஸ்.கெய்க்வாட்’ என்ற இரண்டு பெயர்களை தெரிவித்திருக்கிறார்.

நண்பர்களுக்கு அந்த பெயர்கள் பிடிக்கவில்லை.

அதனால், “நீங்களே ஆசீர்வாதம் செய்து, ஒரு பெயர் வையுங்க!” என்று ரஜினி கூறி இருக்கிறார்.

“என்னுடைய மேஜர் சந்திரகாந்த் நாடகத்தில், சந்திரகாந்துக்கு இரண்டு பிள்ளைகள். ஒருவன் ஸ்ரீகாந்த், மற்றவன் ரஜினிகாந்த். ஸ்ரீகாந்த் என்ற பெயரை ஏற்கனவே ஒருவருக்கு வைத்தாகிவிட்டது.

ரஜினிகாந்த் என்ற பெயரை யாருக்கு வைக்கலாம் என்று ரொம்ப நாளா நினைத்துக் கொண்டிருந்தேன். அதை உனக்கு வைக்கிறேன். என்று கூறியவர், ரஜினிகாந்த் என்று கூறியதும், ரஜினி, பாலசந்தரின் காலைத் தொட்டுக் கும்பிட, நல்ல வரணும் என்று வாழ்த்தி இருக்கிறார்.

1975 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18-ந்தேதி அபூர்வராகங்கள் படம் வெளியானது. தான் நடித்த அந்த முதல் படத்தைப் பார்க்க ரஜினி தி.நகர் கிருஷ்ணவேணி தியேட்டருக்குத்தான் சென்றார். ஆனால் டிக்கெட் கிடைக்கவில்லை.

பிறகு தியேட்டர் மானேஜரை சந்தித்து, தான் இந்தப் படத்தில் நடித்திருப்பதை தெரிவித்து அவரிடம் டிக்கெட் பெற்று அபூரவராகங்கள் படத்தைப் பார்த்திருக்கிறார் ரஜினிகாந்த்.

படம் மிகச் சிறப்பாக அமைந்திருந்ததால், நூறு நாட்களைக் கடந்து ‘அபூர்வ ராகங்கள்’ படம் ஓடியது. முதல் படமே நூறு நாள் படமாக அமைந்தது ரஜினிக்கு பெருமையாக இருந்தது.

இன்று ஆகஸ்ட் 18 : இந்தப் படம் வெளியான 46 ஆண்டுகள் ஆகிறது.

The journey from Shivaji Rao Gaekwad to super star Rajinikanth

முற்றிலும் மாறுபட்ட கேரக்டரில் ரெஜினா கஸண்ட்ரா நடிக்கும் ‘சூர்ப்பனகை’

முற்றிலும் மாறுபட்ட கேரக்டரில் ரெஜினா கஸண்ட்ரா நடிக்கும் ‘சூர்ப்பனகை’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரெஜினா கஸண்ட்ரா நடிப்பில் உருவாகும் “சூர்ப்பனகை” திரைப்படம் அதன் தலைப்பு மற்றும் வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக் ஆகியவற்றால், ரசிகர்கர்களிடம் பேராதரவை பெற்றுள்ளது.

சமீபத்திய வெற்றிபடங்கள் மூலம் இந்திய அளவில் ரசிகர்கர்களை பெற்றுள்ள, நடிகை ரெஜினா கஸண்ட்ரா இப்படத்தில் நடித்துள்ளதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் உள்ளது.

இயக்குநர் கார்த்திக் ராஜு இயக்கத்தில் இருமொழிகளில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு , முழுமையாக முடிவடைந்ததாக, இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் கார்த்திக் ராஜு கூறியதாவது…

“சூர்ப்பனகை” படத்தின் முழுப்படப்பிடிப்பும் மிக இனிமையாக நடந்தேறியது. நாங்கள் தற்போது போஸ்ட் புரடக்சன் வேலைகளை தீவிரமாக செய்து வருகிறோம்.

விரைவில் படத்தின் டிரெய்லரை வெளியிட திட்டமிட்டுள்ளோம். சூர்ப்பனகை படம் அதன் பரபர காட்சிகள், திகில், மர்மம் மற்றும் நகைச்சுவை கூறுகள் ஆகியவற்றால் பார்வையாளர்களுக்கு ஒரு புது விதமான திரையரங்கு அனுபவத்தை வழங்கும் என்றார்.

Apple Tree Studios சார்பில் ராஜசேகர் வர்மா இப்படத்தை தயாரிக்கிறார். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இப்படம் உருவாகிறது.

படத்தின் பெரும்பான்மையான காட்சிகள், குற்றாலம் பகுதியில் படமாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு படத்திலும் தனது மாறுபட்ட நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகை ரெஜினா கஸண்ட்ரா இப்படத்தில் தொல்பொருள் ஆய்வாளராக நடித்துள்ளார்.

சாம் CS இசையமைக்கிறார், கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்கிறார். சாபு படத்தொகுப்பு செய்துள்ளார் சூப்பர் சுப்பராயன் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியுள்ளார்.

இப்படத்தில் நடிகை ரெஜினா கஸண்ட்ரா முதன்மை பாத்திரத்தில் நடிக்க, அக்ஷரா கவுடா, மன்சூர் அலிகான், ஜெய பிரகாஷ் மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

Actress Regina Cassandra’s Soorpanagai trailer releases soon

‘அண்ணாத்த’ அப்டேட் : லக்னோ டூ கொல்கத்தா பறக்கும் ரஜினி படக்குழு

‘அண்ணாத்த’ அப்டேட் : லக்னோ டூ கொல்கத்தா பறக்கும் ரஜினி படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில், சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் திரைப்படம் ’அண்ணாத்த’.

இமான் இசையில் இப்படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தில் ரஜினியுடன் மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ்ராஜ், ஜெகபதிபாபு, அபிமன்யூ சிங் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

தற்போது இப்பட படப்பிடிப்பு லக்னோவில் நடைபெற்று வருகிறது.

அங்கு படப்பிடிப்பை முடித்துக்கொண்டு படக்குழுவினர் 21-ம் தேதி கொல்கத்தா செல்கின்றனர்.

அங்கு சில நாட்கள் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாம்.

அத்துடன் அண்ணாத்த படப்பிடிப்பு நிறைவடையவுள்ளதாக கூறப்படுகிறது.

Rajinikanth’s Annaatthe next shoot updates here

‘திரௌபதி’ பட இயக்குனரின் அடுத்த பட ‘ருத்ர தாண்டவம்’ சென்சார் அப்டேட்

‘திரௌபதி’ பட இயக்குனரின் அடுத்த பட ‘ருத்ர தாண்டவம்’ சென்சார் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

G.M.Film Corporation பட நிறுவனம் சார்பில் சிறு முதலீட்டில் தயாரிக்கப்பட்டு மாபெரும் வசூலை அள்ளிகுவித்த திரௌபதி படத்தை தொடர்ந்து தற்போது அதே நிறுவனம் தயாரிக்கும் இரண்டாவது படம் “ருத்ர தாண்டவம்”.

மோகன் G இயக்கி தயாரிக்கும் இந்த படத்தில் நாயகனாக ரிஷி ரிச்சர்டு நடிக்கிறார்.

சின்னத் திரை நிகழ்ச்சிகளில் நடித்து பிரபலமான தர்ஷா குப்தா கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

மற்றும் ராதாரவி, கௌதம் வாசுதேவ் மேனன், மாளவிகா அவினாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

திரௌபதி படத்தை வெளியிட்ட 7 G ஃபிலிம்ஸ் சிவா இந்த படத்தையும் உலக முழுவதும் வெளியிடும் உரிமையை பெற்றுள்ளார்.

இந்த படத்தை பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள் ஒரு சில கட்டுகளுடன் படத்திற்கு U / A சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

விரைவில் படத்தின் டிரெய்லர் வெளியாக இருக்கிறது.

Director Mohan G’s Rudra Thandavam censored with UA

More Articles
Follows