நான் மகான் அல்ல வரிசையில் ‘யுத்த காண்டம்’..; சிங்கிள் ஷாட் மேக்கிங்கில் இணைந்த ஜோடி ஸ்ரீராம் & க்ருஷா

நான் மகான் அல்ல வரிசையில் ‘யுத்த காண்டம்’..; சிங்கிள் ஷாட் மேக்கிங்கில் இணைந்த ஜோடி ஸ்ரீராம் & க்ருஷா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Yuddha Kandamதமிழ் சினிமா ரசிகர்களை விறுவிறுப்பில் ஆழ்த்த வரவிருக்கிறது யுத்த காண்டம்.
இப்படத்தில், கன்னிமாடம் படத்தில் நடித்த ஸ்ரீராம் கார்த்திக் நாயகனாகவும் கோலி சோடா 2 படத்தின் க்ருஷா குரூப் நாயகியாகவும் நடிக்கின்றனர்.

இவர்களுடன் யோக் ஜேபி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முக்கிய வில்லனாக சுரேஷ் மேனனும் திருப்புமுனை கதாபாத்திரமாக போஸ் வெங்கட்டும் நடித்துள்ளனர்.

ஆனந்த்ராஜன் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில் ஒளிப்பதிவாளராக இனியன் ஜே.ஹேரிஸ் பணியாற்றியுள்ளார். படத்துக்கு கன்னிமாடம் பட இசையமைப்பாளர் ஹரி சாய் இசையமைத்திருக்கிறார்.

கன்னிமாடம் படத்தில் பணியாற்றிய பெரும்பாலானோர் இந்தப் படத்திலும் இணைந்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இணை இயக்குநராக சுரேஷ் குமார் பணியாற்றுகிறார். இயக்குநர் ஆனந்த்ராஜன், இயக்குநர் சமுத்திரகணியுடன் அசோஷியேட்டாகப் பணியாற்றியவர்.

சண்டைக் காட்சிகளை மகேஷ் மேத்யூஸ் வடிவமைத்துள்ளார். கலை ராம்ஜி. படத்தை பத்மாவதி, ஐஸ்வர்யா, ஜெயஸ்ரீ தயாரிக்கின்றனர். பிஆர்ஓ-வாக நிகில் முருகன் செயல்படுகிறார்.

படத்தைப் பற்றி படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

மனித வாழ்க்கையில் சிகிச்சைக்காக மருத்துவமனை செல்வதும், பிரச்சினை என்றால் காவல்நிலையம் செல்வதும் தவிர்க்க முடியாத ஒன்றே. அப்படித்தான், ஒரு விபத்தில் சிக்கும் நாயகனும், நாயகியும் மருத்துவமனைக்கு செல்கின்றனர். அங்கிருந்து அவர்கள் காவல் நிலையம் செல்ல நேர்கிறது. அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை யதார்த்தமாக சொல்லும் படம் தான் யுத்த காண்டம்.

யதார்த்த சினிமா என்றால் அது பெயரளவில் இல்லாமல் திரையில் வெளிப்பட வேண்டும். அப்போதுதான் ஏன் சிங்கிள் ஷாட்டில் படத்தை இயக்கக் கூடாது என்று முடிவு செய்யப்பட்டது.

சிங்கிள் ஷாட் என்றவுடன் இந்தக் கதையில் சிறப்பாக நடிக்க தியேட்டர் ஆர்டிஸ்ட்களுக்கே எளிதில் சாத்தியப்படும் எனவும் தோன்றியது.

அந்த நோக்கத்துடன் குழுவை தேர்வு செய்தோம். கன்னிமாடம் நடிகர் ஸ்ரீராம் கார்த்தி இதில் அழகாகப் பொருந்துவார் எனத் தேர்வு செய்தோம்.

அவரைப் போலவே க்ருஷாவும் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட். யோக் ஜேபி சார் ஒரு நடிப்புப் பள்ளியே நடத்துகிறார். அதனால் அவரும் இப்படத்தில் இயல்பாகப் பொருந்தினார்.

போஸ் வெங்கட் சார் சிறந்த நடிகர். சுரேஷ் மேனன் சாரை அவருடைய தோற்றத்துக்காகவே தேர்வு செய்தோம். வசனங்களை போஸ் வெங்கட் எழுதியுள்ளார். படத்தை பார்க்கும்போது ரசிகர்களுக்கு கதையின் நிகழ்வுகளை அருகிலிருந்து பார்க்க வேண்டும் என்று தோன்ற வேண்டும் என்று நினைத்தோம்.

படத்தின் கதைதான் சிங்கிள் ஷாட்டில் படமாக்க தூண்டியது. இதற்காக, 50 நாட்கள் நாங்கள் ஒத்திகை செய்தோம். கிட்டத்தட்ட முழுபடப்பிடிப்பு போலவே ஒத்திகையும் நடந்தது.

படத்தில் பாடல், 2 சண்டைக் காட்சிகள் எல்லாம் உள்ளன. ஒரு முழு நீளப்படத்திற்கான பாடல், சண்டைக் காட்சிகள், உணர்வுப்பூர்வமான வசனங்கள், காட்சிகள் என எல்லா அம்சங்களுமே இதில் இருக்கிறது.

சிங்கிள் ஷாட் படத்தில் பாடல்கள், சண்டைக்காட்சிகள் பதிவு செய்வது என்பது மிகவும் சவாலானது. ஆனால், எந்த நெருடலுமே ஏற்படாத வண்ணமே இவை அனைத்தும் படமாக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப ரீதியாக கவனம் செலுத்தப்பட்ட படமென்பதால் கதையின் என்டர்டெய்ன்மென்ட்டில் எந்த சமரசமும் இருக்காது.

அந்த அளவுக்கு நேர்த்தியாக ஒரு நல்ல கமர்ஷியல் படமாக இருக்கும். உதாரணத்துக்கு சொல்ல வேண்டுமென்றால் ‘நான் மகான் அல்ல’ படம் போல் கமர்ஷியல் படமாக இருக்கும். பல இடங்களில் கேமரா பயன்படுத்தப்பட்டுள்ள விதம் நிச்சயமாக ஆச்சர்யப்பட வைக்கும்.

படம் ஆரம்பித்து ஐந்து நிமிடங்களில் ரசிகர்கள் இதை சிங்கிள் ஷாட் படமென்பதை மறக்கும் அளவுக்கு படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு படக்குழு தெரிவித்துள்ளது…

Single shot film Yuddha kandam movie updates

ஓடிடி-யில் டிராஃபிக் ரூல்ஸ்.; மோடி கண் கலங்கியதால் ‘பச்சை விளக்கு’ படமெடுத்த Dr மாறன்

ஓடிடி-யில் டிராஃபிக் ரூல்ஸ்.; மோடி கண் கலங்கியதால் ‘பச்சை விளக்கு’ படமெடுத்த Dr மாறன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Pachai Vilakkuலண்டன், பூடான் மற்றும் நியூயார்க்கில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்ற ‘பச்சை விளக்கு’ திரைப்படம் ஓடிடி-யில் வெளியாகிறது.

மணிமேகலை தயாரிப்பில் அறிமுக இயக்குநர் டாக்டர்.மாறன் இயக்கி ஹீரோவாக நடித்து இயக்கியிருக்கும் ‘பச்சை விளக்கு’ .

காதல் கலந்த, சமூக சிந்தனை உள்ள கமர்ஷியல் திரைப்படமாகும்.

இந்தியாவில் உருவாக்கப்பட்ட APP ஆன OTTMOVIE App மற்றும் www.ottmovie.in ஆகிய இணையத்தில் ‘பச்சை விளக்கு’ படம் தீபாவளி முதல் வெளியாக உள்ளது. OTTMOVIE APP யை கூகுல் பிளே ஸ்டோரில் டவுன்லோடு செய்து வீட்டில் இருந்தபடியே ‘பச்சை விளக்கு’ படத்தை பார்த்து ரசிக்கலாம். அத்துடன், www.ottmovie.in என்ற இணையத்தளம் மூலமாகவும் படத்தை பார்க்கலாம்.
Stay Home.Stay Entertained.

காதல் கலந்த சமூக சிந்தனை உள்ள கமர்ஷியல் படமான ‘பச்சை விளக்கு’ படம் குறித்து இயக்குநர் மாறன் கூறுகையில்…

“பிரதமர் மோடி அவர்கள் ‘மன்கிபாத்’ நிகழ்ச்சி மூலம் பேசிய போது,சாலை விபத்தினால் உயிர் இழப்பதை குறித்து கண்கலங்கினார்.

அப்போதே, ‘பச்சை விளக்கு’ மாதிரியான ஒரு படத்தை இயக்குவது என முடிவு செய்துவிட்டேன்.

இப்படம் சர்வதேச அளவில் 10 விருதுகளை வென்றிருப்பது எங்கள் படக்குழுவுக்கு மட்டும் அல்ல, ஒட்டு மொத்த தமிழ் சினிமாவுக்கே பெருமை.

இந்திய தயாரிப்புகளை ஊக்குவிக்க வேண்டும் என்ற பிரதமரின் சிந்தனைக்கு ஏற்ப, இந்தியாவில் உருவாக்கப்பட்ட, அஃப்பான OTTMOVIE App மற்றும் www.ottmovie.in என்ற இணையதளத்திலும் தீபாவளியன்று ‘பச்சை விளக்கு’ படத்தை ரிலீஸ் செய்கிறோம்.” என்றார்.

Social awareness film Pachai Vilakku gets OTT release

தீபாவளிக்கு புதுப்பட வருகை திரையுலகிற்கு புத்துணர்ச்சி..; பப்ளிக் ஸ்டார் பாராட்டு

தீபாவளிக்கு புதுப்பட வருகை திரையுலகிற்கு புத்துணர்ச்சி..; பப்ளிக் ஸ்டார் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

durai sudhakarகொரோனா பாதிப்பால் தமிழகத்தில் சுமார் 8 மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்கங்கள் கடந்த 10 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டது.

திரையரங்கங்கள் திறக்கப்பட்டாலும், தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு இடையே இருந்த சிறு பிரச்சினைகளால் புதிய திரைப்படங்கள் வெளிவராத சூழல் ஏற்பட்டது.

இதற்கிடையே, பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்பட்டதால், புதிய திரைப்படங்களை வெளியிட தயாரிப்பாளர்கள் சங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

இதனை தொடர்ந்து தீபாவளி பண்டிகைக்கு புதிய திரைப்படங்கள் சில வெளியாகின்றன.

இந்த நிலையில், தீபாவளிக்கு புதிய திரைப்படங்கள் வெளியாவதற்கு வரவேற்பு தெரிவித்திருக்கும் நடிகர் பப்ளிக் ஸ்டார், படங்களை ரிலீஸ் செய்யும் தயாரிப்பாளர்களை பாராட்டியிருப்பதோடு, தயாரிப்பாளர் சங்கம் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் சங்கங்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.

‘களவாணி 2’ மூலம் வில்லன் வேடத்தில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், ‘டேனி’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து அசத்தினார்.

பிறகு விஜய் சேதுபதியின் ‘க/ப ரணசிங்கம்’ படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்தவர், தற்போது முன்னணி இயக்குநர்கள் பலரது படங்களில் நடித்து வருகிறார்.

சினிமா மீது சினிமா தொழில் மீதும் பேரார்வம் கொண்ட நடிகர் பவர் ஸ்டார் துரை சுதாகர், திரையரங்கங்கள் திறக்கப்பட்டு, புது படங்கள் ரிலீஸ் ஆவது குறித்து கூறுகையில்,…

“கடந்த 8 மாதங்களாக முடங்கியிருந்த திரைத்துறை தற்போது மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.

திரையுலகம் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும் என்றால், மக்களை திரையரங்கங்களுக்கு வர வேண்டும்.

அதற்கு புதிய திரைப்படங்கள் உடனடியாக வெளியாக வேண்டும் என்ற நிலையில், திரையுலகில் ஏற்பட்ட சிறு பிரச்சினைக்கு தற்காலிக தீர்வு கண்டு, தீபாவளி பண்டிகைக்கு புதிய திரைப்படங்கள் வெளிவர வழிவகுத்த தயாரிப்பாளர் சங்கத்திற்கு நன்றியையும், தற்போதைய கடினமான காலக்கட்டத்திலும் தங்களது படங்களை திரையரங்கங்களில் வெளியிடும் தயாரிப்பாளர்களுக்கு பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் படங்கள் மூலம் திரையுலகிற்கு புத்துணர்ச்சியும், திரையுலகினர் வாழ்க்கையில் வெற்றி வெளிச்சமும் கிடைக்க வேண்டும், என்று அனைத்து கடவுள்களையும் வேண்டுகிறேன்.” என தெரிவித்தார்.

Public star Durai Sudhakar on new tamil movies releasing on diwali

‘பிக்பாஸ்’ சனம் ஷெட்டி பிறந்தநாளுக்கு ‘எதிர் வினையாற்று’ படக்குழுவினர் பரிசு

‘பிக்பாஸ்’ சனம் ஷெட்டி பிறந்தநாளுக்கு ‘எதிர் வினையாற்று’ படக்குழுவினர் பரிசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sanam shettyதமிழ் சினிமாவில் சமீபகாலமாக கிரைம் திரில்லர் வகை படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில் முழுக்க முழுக்க வித்தியாசமான கதைக்கருவுடன் திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையில் ‘எதிர் வினையாற்று’ படம் உருவாகி உள்ளது.

எந்த வம்புக்கும் செல்லாமல் தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருக்கும் போட்டோகிராபர் ஒரு நள்ளிரவு பயணத்தில் எதிர்பாராத விதமாக ஒரு பெண்ணை காப்பாற்றுகிறான். அந்த பெண்ணுடன் சேர்ந்து அவள் கொண்டு வரும் சிக்கல்களும் அவனை பின் தொடர்கின்றன. சாதாரண இளைஞனான அவன் மிகவும் அசாதாரண சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறான். அதில் இருந்து அவன் எப்படி மீண்டு வருகிறான்? என்பதே எதிர் வினையாற்று படத்தின் கதை.

படத்தின் நாயகனாக அலெக்ஸ் அறிமுகமாகிறார். இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார்கள் அலெக்ஸ் மற்றும் இளமைதாஸ். நாயகனான அலெக்சே படத்தை தயாரித்தும் இருக்கிறார். மருத்துவத்தில் முதுநிலை பட்டம் பெற்ற இவர், அவசர சிகிச்சை மருத்துவ நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் நாயகியாக சனம் ஷெட்டியும், அசிஸ்டெண்ட் கமிஷனராக ஆர்.கே.சுரேஷும் நடித்துள்ளனர். கதைக்கு மிகவும் முக்கிய திருப்பம் ஏற்படுத்தும் கதாபாத்திரத்தில் ஆடுகளம் நரேன் நடித்துள்ளார்.

இரண்டாம் கதாநாயகியாக லட்சுமி பிரியா நடித்துள்ளார். மேலும் சம்பத்ராம், அனுபமா குமார், ஜீ டிவி மதன், ஸ்டில்ஸ் விஜய், யோகிராம், பிளாக் மணி ஆகியோரும் நடித்துள்ளனர்.

இந்நிலையில், நாயகி சனம் ஷெட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டிரைலரை படக்குழுவினர் (நவம்பர் 12) இன்று வெளியிட்டுள்ளனர்.

இந்த டிரைலர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தாயின் அருள் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருக்கும் இப்படத்திற்கு யுவன் கார்த்திக் இசையமைத்துள்ளார். மனோஜ் நாராயணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Ethir Vinaiyaatru team gives special gift to Sanam Shetty on her birthday

‘இரண்டாம் குத்து’ டீசரை யூடிப்பில் இருந்து நீக்க கோர்ட் உத்தரவு

‘இரண்டாம் குத்து’ டீசரை யூடிப்பில் இருந்து நீக்க கோர்ட் உத்தரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

irandam kuthu teaserபிட்டு படம் இயக்குனர் பெயரெடுத்த சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கி அவரே ஹீரோவாக நடித்துள்ள படம் ‘இரண்டாம் குத்து’.

இப்பட பர்ஸ்ட் லுக்கே படு கேவலமாக வாழைப்பழத்தை ஆண்களின் அந்த இடத்தில் வைப்பது போல டிசைன் செய்யப்பட்டு இருந்தது.

மேலும் இப்பட டீசரில் ஆபாச காட்சிகள் இருந்தன.

இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்த நிலையில் மதுரை ஐகோர்ட் கிளையில் லட்சுமி என்பவர் இப்படத்திற்கு எதிராக பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.

அதில் வணிக நோக்கத்தில் ஆபாசமான விஷயங்களை இளைய சமூகத்திடம் கொண்டு சேர்க்கும் வகையில் சினிமா படங்கள் எடுக்கின்றனர்.

இரண்டாம் குத்து எனும் பெயரில் உருவாகி உள்ள படத்தின் டீசரில் ஆபாச வசனங்களும், காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இப்படத்தின் டீசர், போஸ்டர்களை உடனடியாக சமூகவலைதளங்களில் இருந்து நீக்க வேண்டும்,

படத்தை வெளியிடவும் தடை விதிக்க வேண்டும் என தெரிவித்து இருந்தார்.

இந்த வழக்கு நேற்று நவம்பர் 11 நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில் இதுபோன்ற டீசர்கள் பரவுவது நல்லது அல்ல.

எனவே இப்படத்தின் டீசரை உடனடியாக நீக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் இந்த வழக்கை அடுத்த மாதம் டிசம்பர் 3ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.


Madras HC orders removal of Irandam Kuthu teaser from internet

வரலட்சுமி-சோனாவின் ‘சேஸிங்’..; பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட பாரதிராஜா

வரலட்சுமி-சோனாவின் ‘சேஸிங்’..; பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட பாரதிராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வீரக்குமார் எழுதி இயக்கத்தில வரலட்சுமி கதை நாயகியாக நடித்துள்ள சேஸிங்.

சண்டை காட்சியில், ‘டூப்’ போடாமல் அசத்தியிருக்கிறாராம் வரலட்சுமி.

இதில், சோனா, பாலசரவணன், இமான் அண்ணாச்சி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மலேஷியாவில், 70 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துள்ளது.

மதியழகன் முனியாண்டி என்பவர் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

இப்படத்தின் போஸ்டரை, பாரதிராஜா வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தினார்.

Bharathi Raja released Vara laxmi in Chasing first look

chasing first look

More Articles
Follows